வீல்களோட விலை மட்டுமே 2.2லட்ச ரூபாவாம்! போலீஸ் பாத்தா கொத்தா தூக்கிட்டு போறதுக்குனே பணத்த கொட்டியிருக்காங்க!

இந்தியர்கள் பலரின் பிரியமான கார் மாடலாக மாஹிந்திரா தார் எஸ்யூவி (Mahindra Thar SUV) மாறி இருக்கின்றது. இந்த கார் ஆஃப்-ரோடு (Off Road) பயணம் மற்றும் தினசரி பயணம் என இரண்டிற்குமானது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதுபோன்று இன்னும் பல சிறப்புகளை தன்னுள் அடக்கி இருக்கின்றது இந்த மஹிந்திரா தார் கார். இதனால்தான் இந்தியர்கள் பலர் இந்த காரை வெறிக் கொண்டிருக்கின்றனர். இதற்கு சான்றாக இந்த காருக்கு காத்திருப்பு காலம் 6,7,8 மாதக் கணக்கில் நீடித்துக் காணப்படுகின்றது.

இத்தகைய மிக சிறப்பான விற்பனை வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கும் கார் மாடலுக்கே கூடுதல் சிறப்பு சேர்த்திருக்கின்றார் தார் உரிமையாளர் ஒருவர். அதாவது, 2.2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அலாய் வீல்களை இந்த காரில் அவர் பொருத்தி அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்க செய்திருக்கின்றார்.

After market alloywheel

டெல்லியைச் சேர்ந்த ஓர் தீவிர கார் காதலர் பெண்ணே இந்த செயலை செய்திருக்கின்றார். இவரின் கனவு வாகனம் மெர்சிடிஸ் பென்ஸ் ஜி63 ஏஎம்ஜி என கூறப்படுகின்றது. மேலும், கடந்த காலங்களில் அவர் பிஎம்டபிள்யூ சொகுசு காரையே பயன்படுத்தி வந்திருக்கின்றார். இந்த நிலையிலேயே அவருடைய தோழர் ஒருவருக்கு சொந்தமான தார் காரை ஓட்டும் வாய்ப்பு அவருக்கு கிடைத்திருக்கின்றது.

தன்னுடைய இந்த முதல் ஓட்டத்திலேயே மனம் கவர்ந்த காராக மஹிந்திரா தார் மாறியிருக்கின்றது. இந்த நிலையிலேயே அவர் ஓர் தார் காரை வாங்கி, அதை தனக்கு பிடித்தவாறு மாற்ற வேண்டும் என எண்ணியிருக்கின்றார். இப்போது நாம் அந்த கார பற்றியே பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.

ஆமாங்க, தார் காரை வாங்கியதோடு அதை மிகப் பெரிய அளவில் அந்த பெண் மாற்றி இருக்கின்றார். இதன் அடிப்படையிலேயே வீலுக்கு மட்டும் அவர் 2.2 லட்சம் வரை செலவு செய்திருக்கின்றார். இந்த வீல்களால் அக்காரின் அழகு இன்னும் பலமடங்கு அதிகரித்துவிட்டது என்றே கூறலாம்.

இதுதவிர, இன்னும் சில மாற்றங்களையும் தார் காரில் அவர் செய்திருக்கின்றார். அந்தவகையில், கிரில், எல்இடி ஹெட்லைட், ரூஃப் உள்ளிட்டவற்றில் மாற்றங்களைச் செய்திருக்கின்றார். வழக்கமான கிரில்லை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக ஜீப் விராங்களர் கார் மாடலில் பயன்படுத்தப்படும் ஸ்லேட்டுகள் அடுக்கி வைத்ததைப் போன்ற தோற்றம் கொண்ட கிரில்லை அவர் பயன்படுத்தி இருக்கின்றார்.

இத்துடன், வழக்கமான ஹெட்லைட்டை நீக்கிய அவர் அதற்கு பதிலாக புரஜெக்டர் வரை எல்இடி ஹெட்லைட்டை பயன்படுத்தி இருக்கின்றார். இத்துடன், ரூஃப்-இல் புதிதாக இரண்டு பக்கங்களிலும் எல்இடி லைட்டுகளை அவர் பொருத்தி இருக்கின்றார். அதேவேளையில், பம்பர் மற்றும் பனி மின் விளக்கு ஆகியவற்றை அவர் அப்படியே தக்க வைத்திருக்கின்றார்.

இதில் அவர் மாற்றியிருக்கும் வீல்களே மிகவும் ஹைலைட்டானவை ஆகும். இந்த வீல்கள் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு வரவழைக்கப்பட்டது என கூறப்படுகின்றது. இதற்கு மட்டும் அவர் 2.2 லட்சம் ரூபாய் செலவிட்டிருப்பது அனைத்து கார் காதலர்களையும் பொறாமையில் ஆழ்த்தும் வகையில் அமைந்திருக்கின்றது.

இதை அடுத்து அனைத்து விண்ட்ஷீல்டுகளும் கருப்பு நிறத்திற்கு மாற்றப்பட்டு இருக்கின்றன. வெளிப்புறத்தில் உள்ள உஷ்னத்தை தவிர்க்கவும், தனிமைக்காகவம் இதை சேர்த்திருப்பதாக அவர் தெரிவித்து இருக்கின்றார். இதைத் தவிர வேறு எந்த மாற்றத்தையும் அவர்கள் செய்யவில்லை என கூறப்படுகின்றது. இந்த கார் பார்ப்பதற்கு மிகவும் அழகானதாகவும், மனம் கவரக் கூடியதாகவும் தெரியலாம்.

ஆனால், மோட்டார் வாகன சட்டத்தின்படி, விதிமீறலின் முழு உருவமாக இந்த கார் மாடல் மாறி இருக்கின்றது. ஆமாங்க, சந்தைக்கு பிறகான பல சாதனங்கள் இந்த காரில் பொருத்தப்பட்டு இருக்கின்றன. அத்துடன், உண்மையான தோற்றத்தை மாற்றக்கூடிய அம்சங்களும் இதில் சேர்க்கப்பட்டு இருக்கின்றன. எனவே போலீஸாரின் கண்களில் இந்த வாகனம் படும் எனில் கட்டாயம் அதற்கு அபராதம் விதிக்க நேரிடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனவே இந்த வாகனம் பறிமுதல் செய்யவும் வாய்ப்புகள் இருக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹிந்திரா நிறுவனம் தார் காரை இந்தியாவில் 2020 ஆம் ஆண்டிலேயே விற்பனைக்குக் களமிறக்கியது. அப்போதில் இருந்து இப்போது வரை மிக சிறப்பான விற்பனை வரவேற்பை இந்த கார் மாடல் இந்தியாவில் பெற்றுக் கொண்டிருக்கின்றது. இத்தகைய கார் மாடலையே சட்டத்திற்கு புறம்பான நிலையில் அதன் உரிமையாளர் ஒருவர் மாற்றி இருக்கின்றார்.

More from DriveSpark

Article Published On: Thursday, June 6, 2024, 5:00 [IST]
English summary
Delhi woman spends rs 2 2 lakhs to install alloy wheels for mahindra thar
மேலும்... #car modification #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+