இது புது ஐடியாவா இருக்கே... போலீசிடம் இருந்து நைசாக தப்பித்த இளம்பெண்... என்ன செய்தார் தெரியுமா?

போக்குவரத்து விதிகளை மீறிய இளம்பெண் ஒருவர், போலீசாரிடம் இருந்து நைசாக தப்பித்தார். இதற்காக அவர் என்ன செய்தார்? என்பது குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இது புது ஐடியாவா இருக்கே... போலீசிடம் இருந்து நைசாக தப்பித்த இளம்பெண்... என்ன செய்தார் தெரியுமா?

இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில், கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல், புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதில், போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கான அபராத தொகைகள் மிக கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளன. எனவே வாகன ஓட்டிகள் அனைவரும் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிப்பார்கள் என மத்திய அரசு நம்புகிறது.

இது புது ஐடியாவா இருக்கே... போலீசிடம் இருந்து நைசாக தப்பித்த இளம்பெண்... என்ன செய்தார் தெரியுமா?

இதன் மூலம் இந்தியாவில் சாலை விபத்துக்களின் எண்ணிக்கை குறையும் என்று மத்திய அரசு எதிர்பார்க்கிறது. எனவே மத்திய அரசின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு பல்வேறு மாநில அரசுகள் வரவேற்பு தெரிவித்துள்ளன. அதே சமயம் இதுபோன்ற கடுமையான அபராத தொகைகளால், வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுவார்கள் எனக்கூறி ஒரு சில மாநில அரசுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இது புது ஐடியாவா இருக்கே... போலீசிடம் இருந்து நைசாக தப்பித்த இளம்பெண்... என்ன செய்தார் தெரியுமா?

எனவே ஒரு சில மாநிலங்களில் புதிய அபராத தொகைகள் அமலுக்கு கொண்டு வரப்படுவது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இன்னும் சில மாநிலங்களில் அபராத தொகைகள் குறைக்கப்பட்டுள்ளது. புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்தது முதல் வாகன ஓட்டிகளிடம் போலீசார் கெடுபிடி காட்டி வருகின்றனர்.

இது புது ஐடியாவா இருக்கே... போலீசிடம் இருந்து நைசாக தப்பித்த இளம்பெண்... என்ன செய்தார் தெரியுமா?

சில சமயங்களில் வாகனங்களின் மதிப்பை விட அதிக அபராதம் விதிக்கப்படுகிறது. எனவே வாகன ஓட்டிகளுக்கும், போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் போன்ற பிரச்னைகள் ஏற்பட்டு வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு, கடும் அபராத தொகைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வாகன ஓட்டி ஒருவர் பைக்கை தீ வைத்து கொளுத்தினார். இது தலைப்பு செய்தியாக மாறியது.

இது புது ஐடியாவா இருக்கே... போலீசிடம் இருந்து நைசாக தப்பித்த இளம்பெண்... என்ன செய்தார் தெரியுமா?

இந்த சூழலில் தற்போது இளம்பெண் ஒருவர் தலைப்பு செய்திகளில் இடம்பிடித்துள்ளார். கடும் அபராத தொகைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, போலீசாரிடம் அவர் தற்கொலை மிரட்டல் விடுத்ததே இதற்கு காரணம். நாடு முழுக்க கவனம் ஈர்த்துள்ள இந்த சம்பவம் தலைநகர் டெல்லியில் நடைபெற்றுள்ளது. டெல்லியில் வாகன ஓட்டிகளிடம் போலீசார் கடும் கெடுபிடி காட்டி வருகின்றனர்.

இது புது ஐடியாவா இருக்கே... போலீசிடம் இருந்து நைசாக தப்பித்த இளம்பெண்... என்ன செய்தார் தெரியுமா?

இதன்படி ஸ்கூட்டரில் வந்த இளம்பெண் ஒருவரையும் அவர்கள் நிறுத்தி விசாரித்தனர். அந்த இளம்பெண் பல்வேறு போக்குவரத்து விதிமுறைகளை மீறியிருந்தார். வாகனம் ஓட்டும்போது இயர்போன் மூலமாக பேசுவது/கேட்பது, ஹெல்மெட்டை சரியாக அணியாதது, உடைந்த நம்பர் பிளேட்டை பொருத்தியிருந்தது என பல்வேறு போக்குவரத்து விதிமுறை மீறல்களை அவர் செய்திருந்தார்.

இது புது ஐடியாவா இருக்கே... போலீசிடம் இருந்து நைசாக தப்பித்த இளம்பெண்... என்ன செய்தார் தெரியுமா?

அத்துடன் வாகனம் தொடர்பான எந்த ஆவணங்களையும் அவர் சமர்ப்பிக்கவில்லை. எனவே இவை அனைத்திற்கும் சேர்த்து ஒட்டுமொத்தமாக அவருக்கு அபராதம் விதிக்க போலீசார் முடிவு செய்தனர். புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி, டிரைவிங் லைசென்ஸை சமர்ப்பிக்காததற்காக அவருக்கு 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட வேண்டும்.

இது புது ஐடியாவா இருக்கே... போலீசிடம் இருந்து நைசாக தப்பித்த இளம்பெண்... என்ன செய்தார் தெரியுமா?

அதேபோல் ஆர்சி புக் இல்லாததற்காக 5 ஆயிரம் ரூபாயும், போலீசாரிடம் காட்டுவதற்கு மூன்றாம் நபர் காப்பீடு இல்லாத காரணத்திற்காக 3 ஆயிரம் ரூபாயும் அபராதம் விதிக்கப்பட வேண்டும். இதுதவிர ஹெல்மெட் விதிமீறலுக்காக தனியாக 1,000 ரூபாய் அபராதமாக சேர்க்கப்பட வேண்டும். அத்துடன் காற்று மாசுபாடு தரநிலை விதிமீறலுக்காக போலீசாரால் அவருக்கு 10 ஆயிரம் ரூபாய் விதித்திருக்க முடியும்.

இது புது ஐடியாவா இருக்கே... போலீசிடம் இருந்து நைசாக தப்பித்த இளம்பெண்... என்ன செய்தார் தெரியுமா?

இதுதவிர சேதமடைந்த நம்பர் பிளேட் மற்றும் வாகனம் ஓட்டும்போது இயர்போன் பயன்படுத்தியது போன்ற காரணங்களுக்காகவும் தனியாக அபராதம் விதித்திருக்க முடியும். இவை அனைத்தையும் சேர்த்து பார்த்தால் பெரும் தொகை அபராதமாக வரும். இதனால் அந்த இளம்பெண் அதிர்ச்சியில் உறைந்து விட்டார். என்ன செய்வது? என தெரியாமல் திகைத்த அவர் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட தொடங்கி விட்டார்.

இது புது ஐடியாவா இருக்கே... போலீசிடம் இருந்து நைசாக தப்பித்த இளம்பெண்... என்ன செய்தார் தெரியுமா?

மேலும் ஹெல்மெட்டால் தாக்கி விடுவேன் எனக்கூறியும் அவர் போலீசாரை அச்சுறுத்தினார். ஆனால் அவரின் இந்த அச்சுறுத்தல்களால் போலீசார் குழப்பமடையவில்லை. நிதானமாகவே இருந்தனர். இதனால் வெறுப்படைந்த அந்த இளம்பெண் ஹெல்மெட்டை சாலையில் தூக்கி வீசினார். மேலும் உடல் நிலை சரியில்லாததால், தன்னை அங்கிருந்து செல்ல அனுமதிக்க வேண்டும் எனவும் அந்த இளம்பெண் கூறினார்.

இது புது ஐடியாவா இருக்கே... போலீசிடம் இருந்து நைசாக தப்பித்த இளம்பெண்... என்ன செய்தார் தெரியுமா?

ஆனால் இதற்கெல்லாம் போலீசார் மசியவில்லை. பல்வேறு போக்குவரத்து விதிகளை மீறியதால், அபராதம் விதித்தாக வேண்டும் என அந்த இளம்பெண்ணிடம் போலீசார் தொடர்ந்து வலியுறுத்தினர். எனவே அந்த இளம்பெண் இறுதியாக பிரம்மாஸ்திரத்தை கையில் எடுத்தார். அபராத ரசீது வழங்குவதாக இருந்தால், தற்கொலை செய்து கொள்வேன் என அந்த இளம்பெண் மிரட்டல் விடுத்தார்.

இது புது ஐடியாவா இருக்கே... போலீசிடம் இருந்து நைசாக தப்பித்த இளம்பெண்... என்ன செய்தார் தெரியுமா?

இந்த அச்சுறுத்தல் காரணமாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அதிர்ச்சியடைந்து விட்டனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோவை நீங்கள் கீழே காணலாம். அங்கு நடைபெற்ற சம்பவங்கள் அனைத்தும் இந்த வீடியோவில் விரிவாக பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதனிடையே இளம்பெண்ணின் அச்சுறுத்தல் காரணமாக போலீசார் அவரை விடுவித்து அங்கிருந்து அனுப்பி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வீடியோ தற்போது அதிகம் பேரால் பகிரப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பான உங்களுடைய கருத்துக்களை கமெண்ட் பாக்ஸில் தெரியப்படுத்துங்கள்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Delhi Woman Gets Traffic Violations Challan, Threatens To Commit Suicide: Video. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X