பெட்ரோல், சின்ஜி கார்களுக்கு கூடுதல் வரி விதிக்க திட்டம்!.. அப்போ எந்த வாகனத்தைதான் வாங்குவது?..

ஏற்கனவே வாகன உற்பத்தியாளர்கள் ஒருபக்கம் புதிய வாகனங்களின் விலையை உயர்த்திக் கொண்டிருக்கின்ற சூழலில், போதாக்குறையாக அரசும் அதன் சார்பில் புதிய வாகனங்களின் விலையை உயர்த்தக் கூடிய செயலில் களமிறங்கி இருப்பது தெரிய வந்திருக்கின்றது. விரைவில் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி வாகனங்களின் விலையே உயர இருக்கின்றது. இவற்றிற்கு கிரீன் செஸ் வரியை விதிக்க டெல்லி அரசாங்கம் திட்டமிட்டு இருப்பதாகவே தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. டெல்லி மிகக் கடுமையான வாகன நெரிசலிலும், காற்று மாசுபாட்டிலும் சிக்கி தவித்துக் கொண்டிருக்கின்றது.

இதில் இருந்து மாநிலத்தை மீட்டெடுக்கும் முயற்சியிலேயே டெல்லி அரசாங்கம் மிக தீவிரமாக களமிறங்கி இருக்கின்றது. இதன் அடிப்படையிலேயே பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி போன்ற ஐசிஇ (ICE) வாகனங்களுக்கான கிரீன் செஸ் வரியை அதிகப்படுத்தும் திட்டத்தை டெல்லி அரசு கையில் எடுத்து உள்ளது.

Petrol and cng cars to cost more

இதனால் அந்த வாகனங்களின் விலை கணிசமாக உயரும் சூழல் உருவாகி இருக்கின்றது. கார்களின் விலை மட்டுமல்ல டூ-வீலர் மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் போன்ற பிறவற்றின் விலையும் இதனால் உயர உள்ளது. இதைக் கண்டு கவலைப்பட வேண்டாம். டெல்லி அரசாங்கமே இந்த திட்டத்தை கையில் எடுத்திருக்கின்றது.

ஐசிஇ வாகனங்களை வாங்குவதை மக்கள் தவிர்க்க வேண்டும் என்கிற நோக்கிலேயே இந்த மாதிரியான நடவடிக்கையில் டெல்லி அரசாங்கம் களமிறங்கி இருக்கின்றது. மேலும், கிரீன் செஸ் உயர்வின் காரணமாக மக்கள் பலர் மின்சார வாகனங்களை வாங்குவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் அடிப்படையிலேயே தன்னுடைய திட்டங்களை நகர்த்தி வருகின்றது டெல்லி அரசு.

Petrol and cng car green cess delchi

குறிப்பாக, இ-வாகனங்களின் பக்கம் மக்களை ஈர்க்கும் வகையில் சிறப்பு சலுகைகளையும் அது வழங்கிக் கொண்டிருக்கின்றது. இருப்பினும், இந்தியாவில் இப்போது மின்சார வாகனங்கள் சில ஏழைகளுக்கு எட்டாக் கனியாக உள்ளது. அதிக விலையின் காரணமாகவே அது அந்த நிலையில் உள்ளது. ஆகையால், டெல்லி அரசாங்கத்தின் இந்த திட்டம் பலருக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தக் கூடியதாகவே அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டெல்லி அரசாங்கம் ஏற்கனவே காற்று மாசுபாட்டைக் குறைக்கும் நோக்கில் பழைய வாகனங்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. குறிப்பாக, 10 ஆண்டுகள் பழைய டீசல் மற்றும் 15 ஆண்டுகள் பழைய பெட்ரோல் வாகனங்களை முழுமையாக பயன்பாட்டில் இருந்து அகற்றும் பணிகளில் அது மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது.

இந்த மாதிரியான சூழலிலேயே புதிய சிஎன்ஜி, பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களின் விற்பனைக்கு ஆப்பு வைக்கும் விதமாக பசுமை வரியை உயர்த்த அது திட்டமிட்டு இருக்கின்றது. ஏற்கனவே டெல்லி அரசாங்கம் டீசல் வாகனங்களுக்கு அதன் விலையில் 1 சதவீதத்தை கிரீன் செஸ் வரியாக வசூலித்துக் கொண்டிருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. இதையே தற்போது சிஎன்ஜி மற்றும் பெட்ரோல் வாகனங்களுக்கு நீட்டிக்க அரசு திட்டமிட்டு இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: நாடு முழுக்க ஐசிஇ வாகனங்கள் போர் தொடுக்கின்ற மாதிரியான கடுமையான நடவடிக்கையே எடுக்கப்பட்டு வருகின்றது. இதனாலேயே பலர் பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி வாகனங்களை வாங்க தயக்கம் காட்டி வருகின்றனர். இந்த மாதிரியான சுழலிலேயே டெல்லி அரசாங்கம் தன்னுடைய கூடுதல் கெடுபிடியை இந்த விஷயத்தில் காட்டத் தொடங்கி இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Wednesday, April 9, 2025, 23:50 [IST]
English summary
Delhis proposed ev policy introduces green cess on new petrol diesel and cng vehicles
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+