Just In
- 2 hrs ago
ஒருபக்கம் விலை அதிகரிப்பு, மறுபக்கம் சலுகை!! மோட்டார்சைக்கிள் விற்பனையில் கவாஸாகியின் அடுத்தடுத்த அறிவிப்புகள்
- 3 hrs ago
மக்களை தைரியமாக எலெக்ட்ரிக் கார் வாங்க வைக்க அதிரடி... கோவையை தொடர்ந்து மற்றொரு நகரிலும் தரமான சம்பவம்...
- 5 hrs ago
வாகனத்தில் தனியாக செல்லும்போது மாஸ்க் அணிவது கட்டாயமா, இல்லையா? - மத்திய அரசு விளக்கம்
- 15 hrs ago
சூப்பர்... மஹிந்திரா நிறுவனத்தின் பாதுகாப்பான கார் செய்த தரமான சம்பவம்... என்னனு தெரியுமா?
Don't Miss!
- News
விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் ஜன.26-ல் விவசாயிகளின் 1 லட்சம் டிராக்டர் பேரணி
- Movies
இது எப்ப? நடிகர் சோனு சூட் தையல் கடை.. இங்கு இலவசமாக துணி தைத்து கொடுக்கப்படும்!
- Sports
வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூரை பாராட்டி ட்வீட்டிய கேப்டன்... மராத்தியில் பாராட்டு
- Finance
40% வரை ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி.. அமேசானின் சூப்பர் சலுகைகள்.. கவனிக்க வேண்டிய ஆஃபர் மழை..!
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Lifestyle
வார ராசிபலன் 17.01.2021 முதல் 23.01.2021 வரை – இந்த ராசிக்காரர்களுக்கு லாபம் நிறைந்த வாரமிது…
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
போலீசாரை தகாத வார்த்தைகளில் திட்டிய டெலிவரி கேர்ள்! இப்படி ஒரு தண்டனையை எதிர்பார்த்திருக்க மாட்டார்
காவல் துறையினரிடம் தகாத வார்த்தைகளில் பேசிய ஜொமோட்டோ டெலிவரி கேர்ள், ஏன் இந்த தவறை செய்தோம்? என நினைக்கும் அளவிற்கான தண்டனையை பெற்றுள்ளார்.

ஜொமோட்டோ டெலிவரி கேர்ள் ஒருவரை மும்பை காவல் துறையினர் கடந்த ஆண்டு கைது செய்தனர். காவல் துறையினருடன் அவர் வாக்குவாதத்தில் ஈடுபடும் காணொளி ஒன்று, சமூக வலை தளங்களில் பரவியதையடுத்து அவர் அதிரடியாக கைது செய்யப்பட்டார். காவல் துறையினருக்கு எதிராக கடும் வார்த்தைகளை அவர் உதிர்த்ததை அந்த காணொளியில் நம்மால் பார்க்க முடிந்தது.

அந்த காணொளி பலரையும் சென்றடைந்த சூழலில், மும்பையில் உள்ள வாசி காவல் நிலையத்தில் அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. அதன்பின் டிராபிக் கான்ஸ்டபிள் மோகன் சர்கார் என்பவரால், ஜொமோட்டா டெலிவரி கேர்ள் கைது செய்யப்பட்டார். இந்த சூழலில் அவர் கைது செய்யப்பட்டு ஒரு வருடத்திற்கும் மேலாகி விட்ட நிலையில், அவர் இன்னும் சிறையில் இருப்பதாக கூறப்படுகிறது.

இது குறித்து தி வயர் தற்போது செய்தி வெளியிட்டுள்ளது. கைது செய்யப்பட்ட பிரியங்கா மோக்ரே என்னும் டெலிவரி கேர்ள், கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 8ம் தேதி, ஒரு ஆர்டருக்கு உணவு டெலிவரி செய்வதற்காக சென்று கொண்டிருந்தார். அப்போதுதான் காவல் துறையினருடன் அவர் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

செக்டார் 17 பகுதியில், வாகனங்களை நிறுத்துவதற்கு தடை விதிக்கப்பட்ட இடத்தில், பிரியங்கா மோக்ரோ தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்தியிருந்ததாக தெரிகிறது. இதனால்தான் பிரியங்கா மோக்ரேவிற்கும், காவல் துறையினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பிரியங்கா மோக்ரேவின் செயல்பாடுகளை காவல் துறையினர் தங்கள் செல்போனில் பதிவு செய்து கொண்டனர்.

ஆனால் காவல் துறையினரிடம் இருந்து அந்த செல்போனை பறிக்கவும் பிரியங்கா மோக்ரோ முயற்சித்ததாக கூறப்படுகிறது. அங்கு பணியில் இருந்த காவல் துறையினரால், நிலைமையை கையாள முடியாததால், உயர் அதிகாரிக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதன்பேரில் மூத்த காவல் ஆய்வாளர் அனில் தேஷ்முக், சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்தார்.

எனினும் அவரிடமும், பிரியங்கா மோக்ரே வாக்குவாதம் செய்ததாக அந்த சமயத்தில் காவல் துறையினர் கூறினர். அதன்பின்னர் வாசி காவல் துறையினர் பிரியங்கா மோக்ரேவிற்கு எதிராக வழக்கு பதிந்தவுடன், அவர் அதிரடியாக கைது செய்யப்பட்டார். அடுத்த செக்போஸ்ட்டில் அவர் தடுத்து நிறுத்தப்பட்டு, காவல் நிலையத்திற்கு வரும்படி கூறி, கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

பிரியங்கா மோக்ரே மீது பிரிவுகள் 353, 393, 294, 506 மற்றும் 504 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்ட பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். எனவே ஜாமீன் எதுவும் வழங்கப்படாமல், அவர் இன்னமும் சிறையில் இருப்பதாக கூறப்படுகிறது. அவர் மீது பதிவு செய்யப்பட்ட சில பிரிவுகள், ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

எனினும் நீதிமன்றம் அவரை குற்றவாளி என தீர்ப்பளித்து தண்டனையை வழங்கியதா? என்பது உறுதியாக தெரியவில்லை. இருந்தாலும் அவர் சிறையில் நாட்களை கழித்து கொண்டிருப்பதற்கு, அவர் வாக்குவாத்தில் ஈடுபட்டதை காவல் துறையினர் முக்கியமான ஆதாரமாக செல்போனில் பதிவு செய்து கொண்டதே காரணமாக கூறப்படுகிறது.

அதே சமயம் பிரியங்கா மோக்ரோ தொடர்ந்து போக்குவரத்து விதிமுறை மீறல்களில் ஈடுபட்டு வந்ததும், ஒரு முக்கியமான காரணமாக கூறப்படுகிறது. இதுகுறித்து கடந்த ஆண்டு தி இந்து செய்தி வெளியிட்டிருந்தது. இச்சம்பவம் நிகழ்ந்த சமயத்தில் காவல் துறை அதிகாரிகள் கூறுகையில், ''கைது செய்யப்படுவதற்கு சில மாதத்திற்கு முன், குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக பிரியங்கா மோக்ரே மீது வழக்கு பதியப்பட்டது.

மேலும் தலை கவசம் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டியதாகவும், முறையான ஆவணங்கள் எதையும் அவர் வைத்திருக்கவில்லை என்ற காரணத்திற்காகவும் அவருக்கு சமீபத்தில் அபராதம் விதிக்கப்பட்டது. இதனால் அவர் மீது முன்பு பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் விபரங்களையும் சேகரித்து கொண்டிருக்கிறோம்'' என்றார்.
பிரியங்கா மோக்ரே இன்னும் சிறையில் நாட்களை கழித்து வருவதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். இந்தியாவில் சாலை விபத்துக்கள் மிகவும் அதிக அளவில் நடப்பதற்கு, வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதே முதன்மையான காரணமாக உள்ளது. அப்படிப்பட்ட சூழலில் நடந்துள்ள இச்சம்பவத்தில் இருந்து விதிகளை மீறுபவர்கள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.