கழிவறைக்கு செல்வதாக நினைத்த சக பயணிகள்... நடுவானில் பயணி செய்த அதிர்ச்சிகர காரியம்!!

நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் பயணி ஒருவர் செய்த செயல் மொத்த விமானத்தையும் பதற்றமடைய செய்துள்ளது. அவர் அப்படி என்ன செய்தார் உள்ளிட்ட விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

கழிவறைக்கு செல்வதாக நினைத்த சக பயணிகள்... நடுவானில் பயணி செய்த அதிர்ச்சிகர காரியம்!!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து நாஷ்வில்லி நகரத்தை நோக்கி டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் 386 என்ற பயணிகள் விமானம் ஒன்று நடுவானில் பறந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென பயணி ஒருவர் தனது இருக்கையை விட்டு எழும்பியுள்ளார்.

கழிவறைக்கு செல்வதாக நினைத்த சக பயணிகள்... நடுவானில் பயணி செய்த அதிர்ச்சிகர காரியம்!!

மற்ற சக பயணிகள் அவர் கழிவறைக்கு செல்வதாக நினைத்ததால் அவரிடம் யாரும் கேள்வி எழுப்பவில்லை. ஆனால் அவர் விமானி அறைக்குள் அதிரடியாக நுழைய முயன்றுள்ளார். இதை பார்த்து அதிர்ந்த மற்ற பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் உடனே சுதாரித்து கொண்டு அந்த பயணியை பிடித்து இழுத்து அவரை தடுத்துள்ளனர்.

கழிவறைக்கு செல்வதாக நினைத்த சக பயணிகள்... நடுவானில் பயணி செய்த அதிர்ச்சிகர காரியம்!!

இருப்பினும் அவர் விமான அறைக்குள் நுழைய முயற்சித்ததால், அவரை கீழே தள்ளி, அவரது கை கால்களை கயிற்றால் கட்டினர். அந்த பயணி விமானி அறைக்குள் நுழைந்து விமானத்தை கடத்த திட்டமிட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

கழிவறைக்கு செல்வதாக நினைத்த சக பயணிகள்... நடுவானில் பயணி செய்த அதிர்ச்சிகர காரியம்!!

இதனையடுத்து விமானம் அல்புகர்கி விமான நிலையத்திற்கு திருப்பிவிடப்பட்டு, அவசரமாக தரையிறக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் பயணிகள் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

Source: USAToday

கழிவறைக்கு செல்வதாக நினைத்த சக பயணிகள்... நடுவானில் பயணி செய்த அதிர்ச்சிகர காரியம்!!

விமானம் தரையிறக்கப்பட்டதும் விமானத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த பயணியை காவல்துறை மற்றும் எஃப்பிஐ அதிகாரிகள் கைது செய்து அழைத்து சென்றனர். தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ள பயணியிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கழிவறைக்கு செல்வதாக நினைத்த சக பயணிகள்... நடுவானில் பயணி செய்த அதிர்ச்சிகர காரியம்!!

இந்த விமானத்தில் மொத்தம் 162 பயணிகள் பயணம் செய்துள்ளனர். நடுவானில் நடைபெற்றுள்ள இந்த நிகழ்வை காட்சிப்படுத்தி இவர்களில் சிலர் வெளியிட்ட வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இந்த வீடியோக்களுக்கு பலர் தங்களது கருத்து தெரிவித்து வருகின்றனர். அல்புகர்கியில் விமானம் கடந்த 4ஆம் தேதி சரியாக பிற்பகல் 2:18 மணியளவில் தரையிறக்கப்பட்டுள்ளது. அதன்பின் கிட்டத்தட்ட 5 மணிநேரங்கள் தாமதமாகவே விமானம் நாஷ்வில்லியை அடைந்துள்ளது.

கழிவறைக்கு செல்வதாக நினைத்த சக பயணிகள்... நடுவானில் பயணி செய்த அதிர்ச்சிகர காரியம்!!

டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனம் இந்த சம்பவம் குறித்தோ, இந்த பயணியை பற்றிய விபரங்கள் குறித்தோ அல்லது அந்த பயணி விமானத்தை கடத்தவே முயற்சி செய்தார் என்பதை உறுதிப்படுத்தும் வகையிலோ எந்தவொரு அறிக்கையையும் உடனடியாக வெளியிடவில்லை.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Delta Flight Attendants Tackel Potential hijackers.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X