இந்தியாவின் பிரபல கார் டிசைனர் திலீப் சாப்ரியாவின் கார் கலெக்ஷன்!

By Saravana Rajan

வாகனங்களை பிரிமியம் வசதிகளுடன் மாற்றித் தருவதில் இந்தியாவின் பிரபலமான நிறுவனம் டிசி டிசைன்ஸ். இதன் நிறுவனர் திலீப் சாப்ரியா ஜெனரல் மோட்டார்ஸ் உள்ளிட்ட உலகின் மிகப்பெரிய கார் நிறுவனங்களில் டிசைனராக பணியாற்றியவர். இந்த நிலையில், தான் உலக அளவில் கற்ற வித்தையை இந்தியாவிலேயே காட்டும் விதத்தில், டிசி டிசைன்ஸ் நிறுவனத்தை துவங்கியதுடன், இன்று இந்தியாவின் முன்னணி வாகன கஸ்டமைஸ் நிறுவனமாக அதனை மாற்றியிருக்கிறார்.

கார்களை கஸ்டமைஸ் செய்து தருவது, திரை நட்சத்திரங்கள் மற்றும் தொழிலதிபர்களுக்கான விசேஷ வாகனங்களை வடிவமைத்து கொடுப்பது என அசத்தி வருகிறது திலீப் சாப்ரியாவின் டிசி டிசைன். அத்துடன் நின்றுவிடாமல், டிசி அவந்தி என்ற பெயரில் இந்தியாவின் முதல் ஸ்போர்ட்ஸ் கார் மாடலை வடிவமைத்து உற்பத்தியும் செய்து வருகிறது டிசி டிசைன் நிறுவனம். வாகன உலகில் உழன்று வரும் திலீப் சாப்ரியாவிடம் என்னென்ன கார்கள் இருக்கிறது என்பதை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

அஸ்டன் மார்ட்டினுடன் நெருக்கம்

அஸ்டன் மார்ட்டினுடன் நெருக்கம்

திலீப் சாப்ரியாவிற்கும் அஸ்டன் மார்ட்டின் நிறுவனத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. 2003ம் ஆண்டு அஸ்டன் மார்ட்டின் ஏஎம் வி8 வேண்டேஜ் மாடலின் புரோட்டோடைப் மாடலை உருவாக்கித் தந்தவர் திலீப் சாப்ரியா. அந்த காரை அப்போதைய அஸ்டன் மார்ட்டின் சிஇஓ.,வாக இருந்த உல்ரிச் பெஸ் மற்றும் பிரிமியர் ஆட்டோமேட்டிவ் குழுமத்தின் சிஇஓ., மார்க் ஃபீல்ட்ஸ் ஆகியோர் அமெரிக்காவில் நடந்த நிகழ்ச்சியில் அறிமுகம் செய்தனர்.

சொந்தமாக அஸ்டன் மார்ட்டின்

சொந்தமாக அஸ்டன் மார்ட்டின்

அஸ்டன் மார்ட்டின் நிறுவனத்துடன் ஏற்பட்ட நெருக்கம் காரணமாக, சொந்தமாக அஸ்டன் மார்ட்டின் காரை வாங்கும் எண்ணம் அவருக்கு ஏற்பட்டது. அதன் விளைவாக அவர் வாங்கி வைத்திருக்கும் கார்தான் அஸ்டன் மார்ட்டின் வாங்கிஷ். தற்போது திலீப் சாப்ரியா கராஜில் அஸ்டன் மார்ட்டின் வாங்கிஷ் காரும் உள்ளது.

 வாங்கிஷ் சிறப்புகள்

வாங்கிஷ் சிறப்புகள்

கிராண்ட் டூரர் ரகத்தில் வெளியிடப்பட்ட அஸ்டன் மார்ட்டின் வாங்கிஷ். அஸ்டன் மார்ட்டின் விராஜ் வரிசைக்கு மாற்றாக இந்த வேண்டேஜ் மாடல்கள் வந்தன. 2001ம் ஆண்டு கான்செப்ட்டாக அறிமுகம் செய்யப்பட்டு 2005ல் விற்பனைக்கு வந்தது. இந்த காரின் புரோட்டோடைப்பையும் ஃபோர்டு நிறுவனத்துடன் இணைந்து திலீப் சாப்ரியாதான் உருவாக்கித் தந்தார். இந்திய நிறுவனம் ஒன்று வெளிநாட்டு காரின் புரோட்டோடைப் மாடலை தயாரித்து தந்த பெருமையும் திலீப் சாப்ரியாவையே சேரும்.

ஜேம்ஸ்பாண்ட் கார்

ஜேம்ஸ்பாண்ட் கார்

மேலும், இந்த கார் 2002ம் ஆண்டு வெளிவந்த 'டை அனதர் டே' ஜேம்ஸ்பாண்ட் படத்தின் அதிகாரப்பூர்வ கார் மாடலாகவும் இது பயன்படுத்தப்பட்டது. 2004ம் ஆண்டு அதிசக்திவாய்ந்த எஞ்சினுடன் மேம்படுத்தப்பட்டது. 2007ல் வாங்கிஷ் கார் மாடலுக்கு பதிலாக டிபிஎஸ் பிராண்டு அறிமுகம் செய்யபட்டது. 2012ம் ஆண்டில் மீண்டும் டிபிஎஸ் பிராண்டுக்கு பதிலாக வாங்கிஷ் பிராண்டில் கார்களை அஸ்டன் மார்ட்டின் அறிமுகம் செய்தது.

பிஎம்டபிள்யூ எக்ஸ்8 எம்

பிஎம்டபிள்யூ எக்ஸ்8 எம்

திலீப் சாப்ரியாவிடம் பிஎம்டபிள்யூ எக்ஸ்8 எம் காரும் உள்ளது. ஸ்போர்ட்ஸ் ஆக்டிவிட்டி வெஹிக்கிள் எனும் ரகத்தில் புதமையான வடிவமைப்பு கொண்டது. அதாவது, எஸ்யூவி போன்ற செயல்திறன், செடான் கார் போன்ற சொகுசு ஆகிய இரண்டும் சேர்ந்த கிராஸ்ஓவர் ரக மாடல் இது.

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

பிஎம்டபிள்யூ எக்ஸ்6 காரின் எம் ரக பேட்ஜ் கொண்ட மாடல். எனவே, செயல்திறன் பற்றி கேட்கவே வேண்டாம். இந்த காரில் 4.4லிட்டர் வி8 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 555 பிஎஸ் பவரையும், 680என்எம் டார்க்கையும் வழங்கும். ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டது. கார் வடிவமைப்பு நிபுணரான திலீப் சாப்ரியாவுக்கு பிஎம்டபிள்யூ எக்ஸ்6 எம் காரின் வித்தியாசமான டிசைன் மற்றும் செயல்திறன் மிகவும் பிடித்துப்போய்விட்டது. மற்றொரு பிஎம்டபிள்யூ காரும் அவரிடம் உள்ளது.

 பிஎம்டபிள்யூ ஐ8 கார்

பிஎம்டபிள்யூ ஐ8 கார்

உலகின் அதிவேக ஹைபிரிட் ஸ்போர்ட்ஸ் கார் என்ற பெருமைமிக்க பிஎம்டபிள்யூ ஐ8 காருக்கு உண்டு. விற்பனையிலும் கலக்கி வருகிறது. சச்சின், ஷாரூக்கான், ஷில்ஃபா ஷெட்டி என பல பிரபலங்கள் இந்த காரை வாங்கியிருக்கின்றனர். இந்த காரும் மிகவும் வித்தியாசமான வடிவமைப்பு கொண்டது. அதுதான் திலீப் சாப்ரியாவை கவர்ந்திருக்கிறது.

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

கார்பன் ஃபைபர் கட்டமைப்பில் உருவாக்கப்பட்டிருக்கும் இலகு எடையும், அதிக உறுதியான கட்டமைப்பு கொண்ட கார் இது. இந்த காரில் இருக்கும் மின் மோட்டார் மற்றும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் இணைந்து அதிகபட்சமாக 362 பிஎச்பி பவரையும், 570என்எம் டார்க்கையும் வழங்கும். 0- 100 கிமீ வேகத்தை 4.5 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 250 கிமீ வேகம் வரை செல்லும் வல்லமை கொண்டது. இந்தியாவி்ல ரூ.3 கோடி ஆன்ரோடு விலையில் கிடைக்கிறது.

மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிடி

மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிடி

மெர்சிடிஸ் பிராண்டின் அதிசக்திவாய்ந்த ஸ்போர்ட்ஸ் கார் மாடலான மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிடி காரையும் திலீப் சாப்ரியா வைத்திருக்கிறார். இந்த காரும் ரூ.3 கோடி ஆன்ரோடு விலையில் இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கிறது.

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

இந்த காரில் இருக்கும் 4.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 503 பிஎச்பி பவரையும், 650என்எம் டார்க்கையும் வழங்கும். 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டது. ரியர் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட இந்த காரில் 8 ஏர்பேக்குகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அசத்தலான டிசைன், பாதுகாப்பு, செயல்திறன் என அனைத்து விதத்திலும் கில்லி அடிக்கும் ஸ்போர்ட்ஸ் கார் இது.

ஆடி ஏ8

ஆடி ஏ8

தினசரி பயன்பாட்டிற்கு ஆடி ஏ8 காரை பயன்படுத்துவதாக திலீப் சாப்ரியா கூறியிருக்கிறார். திரை நட்சத்திரங்களின் பலரின் விருப்பமான தேர்வாக இருக்கிறது இந்த ஆடி ஏ8 சொகுசு கார். 1994ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந் ஃபுல் சைஸ் செடான் கார் தற்போது மூன்றாம் தலைமுறை மாடலாக விற்பனையில் இருக்கிறது. இந்தியாவில் முதலில் அறிமுகம் செய்யப்பட்ட ஆடி கார் என்பதுடன், 2005ம் ஆண்டுக்கான CNBC-Autocar India விருதுகளில் சிறந்த இறக்குமதி காருக்கான விருதையும் பெற்றது. இந்த விருது தேர்வில் இடம்பெற்ற 7 நீதிபதிகளில் திலீப் சாப்ரியாவும் ஒருவர்.

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

வடிவமைப்பு, வசதிகள், இடவசதி, பாதுகாப்பு என அனைத்திலும் சிறந்த சொகுசு கார் மாடல் ஆடி ஏ8. இதனாலேயே, இந்தியாவின் அதிகம் விரும்பப்படும் ஃபுல் சைஸ் சொகுசு கார் மாடல் என்ற பெருமைக்குரியது. அதிசக்திவாய்ந்த எஞ்சின், ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் போன்றவை இந்த காரின் மதிப்பை உயர்த்தும் அம்சங்கள்.

இந்தியாவுக்கான சிறந்த கார்

இந்தியாவுக்கான சிறந்த கார்

இந்தியாவுக்கான சிறந்த கார் மாருதி ஸ்விஃப்ட்தான் என்றும் திலீப் சாப்ரியா ஒருமுறை கருத்து கூறியிருக்கிறார். அதன் விற்பனையே அதற்கு சாட்சி என்றும், ஸ்விஃப்ட் காரின் டிசைன்தான் அதன் மிக முக்கிய அம்சமாகவும் தெரிவித்திருக்கிறார்.

 சவாலான கார்

சவாலான கார்

போர்ஷே 911 காரை கஸ்டமைஸ் செய்வது மிக கடினமான காரியம் என்றும் திலீப் சாப்ரியா கூறியிருக்கிறார். போர்ஷே 911 ஸ்போர்ட்ஸ் காரின் வித்தியாசமான டிசைன் அவரை மிகவும் கவர்ந்த ஒன்று, அதில் கைவைத்தால் நன்றாக இருக்காது என்ற தொனியில் அவர் கருத்து கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அப்படியா

அப்படியா

நாடு முழுவதும் பலருக்கு கார்களை கஸ்டமைஸ் செய்து தரும் திலீப் சாப்ரியா, தனது சொந்த கார்களில் கைவைத்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அனைத்தையும் எந்த மாற்றங்களும் இல்லாமலேயே பயன்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல கார் டிசைனர் திலீப் சாப்ரியாவின் கார் கலெக்ஷன்!

டிசி நிறுவனத்தை பிரபலமடையச் செய்த கார் மாடல்கள்

பிரபல கார் டிசைனர் திலீப் சாப்ரியாவின் கார் கலெக்ஷன்!

அடுத்து ஒரு ஆடம்பர பஸ் வாங்கிய ஷாரூக்கான்... விலை 3 கோடி!!

Sources: Wikipedia And The Hindu

Most Read Articles
English summary
Designer Dilip Chabria's Car Collection.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X