மேக்-அப் தொழில் செய்யும் நபர் வாங்கிய 6 கோடி ரூபா காரை பெட்டிக்குள்ள போட்டு டெலிவரி கொடுத்த விற்பனையாளர்!

மேக்-அப் தொழிலில் ஈடுபட்டு வரும் ஒரு நபர் மிக மிக விலை உயர்ந்த கார் மாடல் ஒன்றை வாங்கி அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்க செய்திருக்கின்றார். சுமார் 6 கோடி ரூபாய் மதிப்புள்ள மெக்லாரன் சூப்பர் கார் (McLaren Super Car)-ரையே அந்த நபர் வாங்கி இருக்கின்றார். மேக்-அப் என்ற உடன் பெண்களுக்கான ஒப்பணை அலங்காரம் செய்பவர்னு நினைச்சுக்காதீங்க. அவர் கார்களை அலங்காரம் செய்யும் தொழிலையே மேற்கொண்டு வருகின்றார். 'டீடெய்லிங் டெவில்ஸ்' (Detailing Devils ) எனும் நிறுவனத்தையே அவர் நடத்தி வருகின்றார்.

இந்த நிறுவனத்தின் உரிமையாளர் புத்தம் புதிய மெக்லாரன் சூப்பர் காரை டெலிவரி பெறும் வீடியோவே தற்போது இன்ஸ்டா உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது. அவருக்கு கார் மிகவும் தனித்துவமான வகையில் டெலிவரி கொடுக்கப்பட்டு இருக்கின்றது. காரின் விலை மற்றும் தனித்துவமான டெலிவரி யுக்தி இவற்றாலேயே தற்போது கார் டெலிவரி செய்யும் வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகிக் கொண்டிருக்கின்றது.

Detailing devils founder takes delivery of mclaren artura supercar

ஆர்சி பாக்ஸ்-இல் வைத்தே கார் டெலிவரி கொடுக்கப்பட்டு இருக்கின்றது. அதாவது, குட்டி ஸ்கேல் கார் மாடல்களை சிறிய பெட்டிக்குள் அடைத்து விற்பனையாளர்கள் வழங்குவதை போலவே இந்த பிரமாண்ட விலைக் கொண்ட சூப்பர் காரை மெக்லாரன் கார் விற்பனையாளர் டெலிவரி வழங்கி இருக்கின்றார்.

டீடெய்லிங் டெவில்ஸ் உரிமையாளர் சௌரப் அஹூஜா வாங்கி இருப்பது மெக்லாரன் ஆர்சுரா (McLaren Artura) சூப்பர் கார் மாடல் ஆகும். இதன் எக்ஸ்-ஷோரூம் விலைதான் ரூ. 6 கோடி என்பது இங்கே கவனிக்கத்தகுந்தது. இந்த கார் தனித்துவமான பச்சை நிறத்தால் அலங்கரிக்கப்பட்டு இருக்கின்றது.

இது அக்காருக்கு கூடுதல் கவர்ச்சியான தோற்றத்தை வழங்கும் வகையில் உள்ளது. இத்துடன், 19 அங்குல அலாய் வீல்களும் இந்த காரை அலங்கரிக்கும் விதமாக பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. அதற்கு கன்மெட்டல் கிரே நிறம் வழங்கப்பட்டு இருப்பது கவனிக்கத்தகுந்தது. மணிக்கு 330 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்ட ஓர் சூப்பர் கார் மாடலே மெக்லாரன் ஆர்சுரா ஆகும்.

இந்த அதீத திறனுக்காக மெக்லாரன் ஆர்சுரா கார் மாடலில் 3.0 லிட்டர் ட்வின்-டர்போ வி6 எஞ்சினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது 577 பிஎச்பி மற்றும் 584 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. இத்துடன், 94 பிஎச்பி மற்றும் 225 என்எம் டார்க் ஆற்றலை உருவாக்கும் திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டாரும் ஹைபிரிட் தொழில்நுட்பத்தின்கீழ் இந்த காரில் மெக்லாரன் வழங்கி இருக்கின்றது.

Detailing devils founder takes delivery of mclaren supercar

இந்த காருக்கு பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை எட்ட வெறும் 3 செகண்டுகளே போதுமானது. இதுபோன்று இன்னும் பல வியக்க வைக்கும் திறன்களையே இந்த கார் கொண்டிருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. இதனால்தான் இதன் விலை ரூ. 6 கோடிக்கும் அதிகமாக உள்ளது.

இத்தகைய விலை உயர்ந்த காரையே கார் டீடெய்லிங் தொழிலில் ஈடுபட்டும் வரும் சௌரப் அஹூஜா தற்போது வாங்கி இருக்கின்றார். கார்களை புதிதுபோல் மற்றும் மிகவும் கவர்ச்சியானதாகக் காண்பிக்கும் ஓர் நிறுவனமே இந்த டீடெய்லிங் டெவில்ஸ் என்பது இங்கே கவனிக்கத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சூப்பர் கார்கள் மீதான மோகம் இந்தியர்கள் மத்தியில் மிகப் பெரிய அளவில் வளர்ந்துக் காணப்படுகின்றது. இதற்கு சான்றாகவே இந்த நிகழ்வு தற்போதையே மெக்லாரன் ஆர்சுரா சூப்பர் கொள்முதல் சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. ஆனால், இந்த கார்களின் உச்சபட்ச வேகத்தை இந்தியாவில் எங்கு ஓட்டி பார்க்க முடியாது என்பதுதான் இங்கு வேதனை அளிக்கும் வகையில் உள்ளது. அதேவேளையில், குறிப்பிட்ட ரேஸ் டிராக்குகளில் இந்த கார்களின் டாப் ஸ்பீடை சோதித்து பார்த்துக் கொள்ள முடியும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, October 30, 2024, 11:26 [IST]
English summary
Detailing devils founder sourabh ahooja takes delivery of rs 6 crore mclaren artura supercar
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+