6 கோடி ரூபா காரை வாங்கிய கொஞ்ச நாள்ல ஓனர் செஞ்ச காரியம்! இதை வெளியில் போய் சொன்னா ஒருத்தரும் நம்ப மாட்டாங்க!
நீங்கள் தீவிரமான கார் காதலர் என்றால், 'டீடெய்லிங் டெவில்ஸ்' (Detailing Devils) நிறுவனத்தை பற்றி தெரிந்திருக்கும். இது ஒரு 'கார் டீடெய்லிங்' நிறுவனம் ஆகும். இந்தியா முழுக்க 100க்கும் மேற்பட்ட ஸ்டோர்களை 'டீடெய்லிங் டெவில்ஸ்' கொண்டுள்ளது. சவுரப் அகுஜா (Sourabh Ahooja) என்பவர்தான், இந்த நிறுவனத்தின் உரிமையாளர் ஆவார். இவர் 'தி ரெகுலர் இந்தியன் கை' (The Regular Indian Guy) என்ற யூடியூப் சேனலையும் (YouTube Channel) நடத்தி வருகிறார். இந்த யூடியூப் சேனலில் தற்போது புதிய வைரல் வீடியோ (Viral Video) ஒன்று பதிவிடப்பட்டுள்ளது.
இது சவுரப் அகுஜாவின் பிறந்தநாளை (Birthday) முன்னிட்டு வாங்கப்பட்ட புத்தம் புதிய காரை பற்றிய வீடியோ ஆகும். சவுரப் அகுஜாவிடம் ஏற்கனவே ஏராளமான விலை உயர்ந்த கார்கள் உள்ளன. உண்மையில் சவுரப் அகுஜாவின் கார் கலெக்ஸன் (Car Collection) மிகவும் பெரியது.

இதில், ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் (Range Rover Sport), மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி 43 ஏஎம்ஜி (Mercedes Benz GLC 43 AMG), மெர்சிடிஸ் பென்ஸ் ஜி-க்ளாஸ் ஜி350டி 4மேட்டிக் (Mercedes Benz G-Class G350d 4MATIC) மற்றும் கியா இவி6 ஜிடி (Kia EV6 GT) போன்றவை எல்லாம் குறிப்பிடத்தக்கவை ஆகும்.
இதுதவிர மெக்லாரன் ஆருத்ரா (McLaren Artura) கார் ஒன்றையும் சவுரப் அகுஜா வைத்துள்ளார். இந்த காரை நாங்கள் தனியாக குறிப்பிட காரணம் உள்ளது. சுமார் 6 கோடி ரூபாய் மதிப்புடைய மெக்லாரன் ஆருத்ரா காரை, சவுரப் அகுஜா கடந்த ஒரு சில வாரங்களுக்கு முன்புதான் வாங்கியிருந்தார்.

அதற்குள்ளாக பிறந்தநாள் வந்த காரணத்தால் தற்போது புதிதாக மெர்சிடிஸ் பென்ஸ் ஜி63 ஏஎம்ஜி (Mercedes Benz G63 AMG) காரை சவுரப் அகுஜா வாங்கியுள்ளார். இந்த காரை வாங்கியதற்கு 2 முக்கியமான காரணங்களை சவுரப் அகுஜா தற்போது வெளியிட்டுள்ள வைரல் வீடியோவில் கூறியுள்ளார்.
புத்தம் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜி63 ஏஎம்ஜி காரை வாங்க வேண்டும் என்பது சவுரப் அகுஜாவின் நீண்ட நாள் கனவுகளில் ஒன்றாகும். அத்துடன் சவுரப் அகுஜா முன்மாதிரியாக கொண்டுள்ள பஞ்சாபி பாடகரான சித்து மூசவாலாவிற்கும் (Sidhu Moosewala) மெர்சிடிஸ் பென்ஸ் ஜி63 ஏஎம்ஜி கார் பிடிக்கும். இந்த 2 காரணங்களுக்காகவே மெர்சிடிஸ் பென்ஸ் ஜி63 ஏஎம்ஜி காரை அவர் வாங்கியுள்ளார்.
இதற்காக பிரம்மாண்டமான விழா நடத்தி காரை டெலிவரி எடுத்துள்ளனர். முன்னதாக புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜி63 ஏஎம்ஜி காரை டெலிவரி எடுப்பதற்காக, மெர்சிடிஸ் பென்ஸ் ஜி63 ஏஎம்ஜி காரிலேயே சவுரப் அகுஜா பயணம் செய்துள்ளார். இந்த காட்சிகளை எல்லாம் தற்போது வைரலாக பரவி வரும் சவுரப் அகுஜாவின் புதிய வீடியோவில் நம்மால் காண முடிகிறது.
சவுரப் அகுஜா பயணம் செய்த மெர்சிடிஸ் பென்ஸ் ஜி63 ஏஎம்ஜி கார் மேட் ஆரஞ்ச் நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவர் புதிதாக வாங்கிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜி63 ஏஎம்ஜி கார் ஒபிசிடியன் பிளாக் நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. இந்த காரின் விலை (Price) 4.60 கோடி ரூபாய் ஆகும்.
இந்த காரில் மிகவும் சக்தி வாய்ந்த 4.0 லிட்டர் ட்வின் சர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 577 பிஹெச்பி பவர் மற்றும் 850 என்எம் டார்க் திறனை உருவாக்கி சாலைகளில் சீறிப்பாய்ந்து செல்ல கூடிய வகையில், இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மெர்சிடிஸ் பென்ஸ் ஜி63 ஏஎம்ஜி, இந்திய கோடீஸ்வரர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள கார்களில் ஒன்றாகும். ஆனந்த் அம்பானி (Anant Ambani), மஹேந்திர சிங் டோனி (Mahendra Singh Dhoni), ஹர்திக் பாண்டியா (Hardik Pandya), ஸ்ரேயாஸ் அய்யர் (Shreyas Iyer) மற்றும் ரன்பீர் கபூர் (Ranbir Kapoor) போன்ற பிரபலங்களிடம், மெர்சிடிஸ் பென்ஸ் ஜி63 ஏஎம்ஜி கார் உள்ளது.


Click it and Unblock the Notifications








