விமானத்தின் முன் பக்க கண்ணாடியில் 3 பந்துகள் இருக்கும்... ஏன் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

விமானத்தின் முன் பக்க கண்ணாடியில் ஏன் 3 பந்துகள் இருக்கிறது? என்பதற்கான காரணங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

விமானத்தின் முன் பக்க கண்ணாடியில் 3 பந்துகள் இருக்கும்... ஏன் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

விமானங்களை பற்றிய பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் வாசகர்களுக்கு தொடர்ச்சியாக வழங்கி வருகிறது. இந்த வரிசையில் இன்றும் ஒரு பயனுள்ள தகவலை நமது வாசகர்களுக்காக வழங்கியுள்ளோம். விமானங்களின் காக்பிட்டில் இருக்கும் Eye-Position-Indicator பற்றிய தகவல்களைதான் இன்று நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

விமானத்தின் முன் பக்க கண்ணாடியில் 3 பந்துகள் இருக்கும்... ஏன் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

கார்களை போல் விமானங்களின் முன் பகுதியிலும் கண்ணாடி இருக்கும் என்பது நம் அனைவருக்கும் தெரியும். இதனை Windshield என்கின்றனர். இந்த Windshield-ன் நடுவே தூண் போன்ற அமைப்பு வழங்கப்பட்டிருக்கும். இதில், மூன்று பந்துகளை நீங்கள் பார்த்திருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. நேரடியாகவோ அல்லது புகைப்படங்கள் மூலமாகவோ நீங்கள் இதனை பார்த்திருக்கலாம்.

விமானத்தின் முன் பக்க கண்ணாடியில் 3 பந்துகள் இருக்கும்... ஏன் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

இதில், நடுவே இடம்பிடித்திருக்கும் பந்து சிகப்பு நிறத்தில் இருக்கும். அதன் இரு பக்கமும் இரண்டு வெள்ளை பந்துகள் வைக்கப்பட்டிருக்கும். ஆக மொத்தம் Windshield தூணின் நடுவே மூன்று பந்துகளை நீங்கள் பார்க்கலாம். இங்கே மற்றொரு முக்கியமான விஷயத்தை குறிப்பிட்டாக வேண்டும். நடுவே இருக்கும் பந்து பெரும்பாலும் சிகப்பு நிறத்தில்தான் இருக்கும்.

விமானத்தின் முன் பக்க கண்ணாடியில் 3 பந்துகள் இருக்கும்... ஏன் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

சில சமயங்களில் ஆரஞ்ச் நிற பந்து கூட நடுவில் வைக்கப்பட்டிருக்கும். ஆனால் பெரும்பாலான விமானங்களில் சிகப்பு நிற பந்துதான் நடுவில் இருக்கும். சரி, விமானங்களில் எதற்காக இப்படி வெள்ளை மற்றும் சிகப்பு நிற பந்துகளை வைத்துள்ளார்கள்? என்ற சந்தேகம் உங்களுக்கு இருக்கலாம். அந்த சந்தேகத்திற்கு இந்த பதிவில் தெளிவாக விடை வழங்கியுள்ளோம்.

விமானத்தின் முன் பக்க கண்ணாடியில் 3 பந்துகள் இருக்கும்... ஏன் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

ஒரு சிலர் இந்த பந்துகளை ஸ்விட்ச் என நினைத்து கொண்டுள்ளனர். அத்துடன் இது ஒளிரும் தன்மை உடையது எனவும் நம்புகின்றனர். ஆனால் இது எதுவும் உண்மை இல்லை. இவை வெறும் பந்துகள் மட்டும்தான். ஆனால் இந்த சிறிய பந்துகள் வைக்கப்பட்டிருப்பதற்கு பின்னால் மிகப்பெரிய காரணம் ஒன்று உள்ளது.

விமானத்தின் முன் பக்க கண்ணாடியில் 3 பந்துகள் இருக்கும்... ஏன் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

நாங்கள் ஏற்கனவே கூறியபடி இந்த பந்துகளை Eye-Position-Indicator என்கின்றனர். பொதுவாக கார், பஸ், லாரி என எந்தவொரு வாகனம் என்றாலும், Seating Position மிகவும் முக்கியம். அதாவது டிரைவர் அமரும் நிலை. டிரைவர் சரியான பொஷிஷனில் அமர்ந்தால் மட்டுமே வாகனத்தை பாதுகாப்பாகவும், சௌகரியமாகவும் இயக்க முடியும்.

விமானத்தின் முன் பக்க கண்ணாடியில் 3 பந்துகள் இருக்கும்... ஏன் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

விமானங்களின் பைலட்களுக்கும் இந்த Seating Position மிகவும் முக்கியமானது. சரியான பொஷிஷனை பைலட்கள் கண்டறிய வேண்டும் என்பதற்காகதான், இந்த பந்துகள் வழங்கப்பட்டுள்ளன. கார்களை போலவே விமானங்களில் பைலட்களுக்கான இருக்கையையும், முன்னும், பின்னும், மேலும், கீழும் என அட்ஜெஸ்ட் செய்து கொள்ள முடியும்.

விமானத்தின் முன் பக்க கண்ணாடியில் 3 பந்துகள் இருக்கும்... ஏன் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

இதன்படி பைலட்கள் நடுவே இருக்கும் சிகப்பு பந்தை பார்த்து கொண்டே இருக்கையை முன்னும், பின்னுமோ அல்லது மேலும், கீழுமோ அட்ஜெஸ்ட் செய்வார்கள். சிகப்பு பந்துக்கு பின்னால் ஒரு வெள்ளை பந்து மறைய வேண்டும். அதே சமயம் மற்றொரு வெள்ளை பந்து, சிகப்பு பந்துக்கு இணையாக ஒரே வரிசையில் இருக்க வேண்டும்.

விமானத்தின் முன் பக்க கண்ணாடியில் 3 பந்துகள் இருக்கும்... ஏன் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

இப்படி தெரியும் வகையில் இருக்கையை அட்ஜெஸ்ட் செய்தால், சரியான Seating Position கிடைத்து விடும். இதன் மூலம் பைலட்களுக்கு சரியான View கிடைக்கும். அதாவது PFD எனப்படும் Primary Flight Display மற்றும் ND எனப்படும் Navigation Display போன்ற உபகரணங்களை பைலட்களால் எளிதாக பார்க்க முடியும்.

விமானத்தின் முன் பக்க கண்ணாடியில் 3 பந்துகள் இருக்கும்... ஏன் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

மேலும் வெளிப்புறத்தையும் பைலட்களால் நன்றாக பார்க்க முடியும். Windshield தூணின் நடுவே உள்ள பந்துகளை பார்த்து கொண்டே இருக்கையை அட்ஜெஸ்ட் செய்தால், இப்படி தெளிவான Seating Position கிடைக்கும். இதன் காரணமாகதான் விமானங்களில், வெள்ளை மற்றும் சிகப்பு நிற பந்துகள் வழங்கப்படுகின்றன.

விமானத்தின் முன் பக்க கண்ணாடியில் 3 பந்துகள் இருக்கும்... ஏன் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

இந்த Seating Position மூலம் பைலட்களுக்கு நல்ல View கிடைக்கும் என்பதுடன், காக்பிட்டில் உள்ள ஸ்விட்ச்கள் மற்றும் உபகரணங்களை எளிதாக பயன்படுத்தவும் முடியும். விமானங்களில் வெள்ளை மற்றும் சிகப்பு நிற பந்துகள் ஏன் வழங்கப்படுகிறது? என்ற சந்தேகம் உங்களுக்கு தற்போது நிவர்த்தியாகி இருக்கும் என நம்புகிறோம்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Details about airplane cockpit eye position indicator
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X