கார், பஸ் போல ரயிலை புக் செய்ய முடியுமா? இதுக்கு எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும்?

கார் புக் பண்ணி பாத்திருப்பீங்க, பஸ் புக் பண்ண பாத்திருப்பீங்க, ஏன் ஹெலிகாப்டர், பிரைவேட் ஜெட்டை வாடகைக்கு எடுத்துகூட பார்த்திருப்பீங்க. இதுபோல இந்தியன் ரயில்வேஸுக்கு சொந்தமான ரயில்களையும் புக் செய்துகொள்ள முடியும் என்பது உங்கள்ல எத்தன பேருக்கு தெரியும்?,

ரொம்ப நாட்களாக சேவையில் இருக்கும் இந்த சிறப்பு திட்டம் பற்றிய விரிவான விபரங்களை இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். தேவைக்கேற்ப ஒரு கோச் அல்லது ஒரு ரயிலையே புக் செய்து கொள்ள முடியும். 'ஃபுல் டாரிஃப் ரேட்' (Full Tariff Rate) எனும் திட்டத்தின்கீழ் இந்த சேவையை ஐஆர்சிடிசி (Indian Railway Catering and Tourism Corporation) வழங்கி வருகின்றது. ரயில் நிலையம் அல்லது எஃப்டிஆர் (ஃபுல் டாரிஃப் ரேட்) தளம் வாயிலாக முழு ரயில் அல்லது ஓர் பெட்டியை புக் செய்து கொள்ள முடியும்.

ரயில் புக்கிங்

எந்தெந்த பெட்டிகளை புக் செய்ய முடியும்

வெவ்வேறு விதமான கோச்களை இந்த திட்டத்தின் வாயிலாக புக் செய்து கொள்ள முடியும். ஸ்லீப்பர் (sleeper), ஏசி 2 டைர் (AC 2-tier), ஏசி 2 டைர் (AC 3-tier), ஏசி ஃபர்ஸ்ட் கிளாஸ் (AC first class), ஏசி 2 வகுப்பு டைர் (AC 2 cum 3 tier), ஏசி சலூன் (AC saloon) மற்றும் ஏசி சேர் கேர் (AC chair car) என எதை வேண்டுமானாலும் புக் செய்து கொள்ளலாம்.

கட்டணம் விபரம்

ஒரு கோச்சிற்கு ரூ. 50 ஆயிரம் கட்டணம் செலுத்த வேண்டும். இதை காசோலையாகவோ அல்லது ரொக்கமாகவோ செலுத்தலாம். ஒருவேளை முழு ரயிலையும் ஸ்பெஷலாக புக் செய்ய நினைத்தால் குறைந்தபட்சம் ஒன்பது கோச்சுகளையாவது புக் செய்ய வேண்டும். முழு ரயிலுக்கான கட்டணம் ரூ. 9 லட்சத்திற்கும் அதிகம்.

ரயில் புக்கிங்

ரொம்ப நாள் ஆகும்னா கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்

செக்யூரிட்டி கட்டணம், பதிவு கட்டணம் அனைத்தும் அடங்கும். இதுதவிர, ஒவ்வொரு நாளுக்கும் ரூ. 10 ஆயிரம் ஒவ்வொரு கோச்சுக்கும் கட்டணமாக வசூலிக்கப்படும். ஏழு நாட்களுக்கும் அதிகமாக உங்கள் பயணம் இருக்கும் எனில் இந்த கூடுதல் கட்டணம் பொருந்தும். இதுதவிர, திருப்புதல் கட்டணம், பாதுகாப்பு கட்டணம் மற்றும் காலியாக திரும்புதல் உள்ளிட்டவற்றிற்கான கட்டணங்களும் வசூலிக்கப்படும் என கூறப்படுகின்றது.

யாரை தொடர்பு கொள்ள வேண்டும்?

பதிவு கட்டணம் செலுத்திய பின்னர் கோச் புக்கிங் அல்லது ரயில் புக்கிங்கிற்கான விண்ணப்பம் தலைமை பயணிகள் போக்குவரத்து மேலாளர் (Chief Passenger Transportation Manager)-க்கு அனுப்பி வைக்கப்படும். கோச் அல்லது முழு சிறப்பு ரயில் புக்கிங் ஆறு மாதங்கள் அல்லது 30 நாட்களுக்கு முன்னரே மேற்கொள்ள வேண்டும்.

ரயில் புக்கிங்

இயற்கை பேரிடர் காரணமாக ரயில் ரத்து செய்யப்படலாம்

உங்களுக்கான ரயில் அல்லது கோச் புக் செய்யப்பட்டதை உறுதிப்படுத்தை குறிப்பிட்ட ஜோன் ரயில்வே அதிகாரி வாயிலாக உறுதி செய்யப்படும். சில நேரங்களில் வழக்கமான பயணிகள் ரயில் திடீரென ரத்து செய்யப்படும் நிகழ்வுகளை நாம் பார்த்திருப்போம். மழை, பனி அல்லது இயற்கை பேரிடர் காரணமாக ரயில் போக்குவரத்து திடீரென நிறுத்தப்படும். இதுபோன்ற காரணங்களுக்காக நாம் புக் செய்யப்படும் ரயில்கள் நிறுத்தப்பட வாய்ப்புகள் உள்ளன.

சாதாரணமான நாட்களாக இருப்பின் எந்தவித பாதிப்பும் இந்த புக்கிங்கில் ஏற்படாது என்பது குறிப்பிடத்தகுந்தது. ரயில் புக்கிங் அல்லது கோச் புக்கிங்கிற்கான பில்லை குறைந்தபட்சம் பயணத்திற்கு 72 மணி நேரத்திற்கு முன்னதாகவே வாங்கிக் கொள்ள வேண்டும். தொடர்ந்து, ரயிலில் பயணிக்க இருக்கும் பயணிகளின் முழு விபரமும் தலைமை பயணிகள் போக்குவரத்து மேலாளருக்கு வழங்கப்பட வேண்டும். இந்த விபரங்கள் 48 மணி நேரங்களுக்கு உள்ளாக வழங்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

ரயில் புக்கிங்

யார் யாருக்கெல்லாம் இது பயன் தரும்?

பெரிய குடும்பத்துடன் சுற்றுல செல்ல விரும்புபவர்களுக்கு கோச் புக்கிங் திட்டமும், பெரிய நிறுவனம் அதன் ஊழியர்களை சுற்றுலா அழைத்துச் செல்ல முழு ரயில் திட்டமும் பெரும் உதவியாக இருக்கும். இதுமட்டுமில்லைங்க, திருமணம் போன்ற முக்கியமான நிகழ்ச்சிகளில் பெரும் பட்டாளமாக செல்லவும் இந்த திட்டம் பெரும் உதவியாக இருக்கும். இந்த சேவையை இந்தியாவின் குறிப்பிட்ட முக்கிய பகுதிகளில் மட்டுமே ஐஆர்டிசி வழங்கி வருகின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

Article Published On: Wednesday, February 22, 2023, 15:09 [IST]
English summary
Details about coach or train booking
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X