மஹாராஷ்டிரால ஓடுற ரயிலுக்கு இங்கிலாந்துல இருக்க நிறுவனத்துக்கு கப்பம் கட்டும் இந்தியா.. எவ்வளவு தெரியுமா?

இந்தியாவின் மஹாராஷ்டிரா மாநிலத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் ஓர் ரயிலுக்காக நமது இந்திய அரசாங்கம் இப்போதும் பிரிட்டனைச் சேர்ந்த ஓர் நிறுவனத்திற்கு கப்பம் கட்டிக் கொண்டிருப்பதாக அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

ரயில்கள் பற்றியும், ரயில் சேவை பற்றியும் அறிந்திராத பல்வேறு சுவாரஷ்ய தகவல்களை சமீப சில காலமாக நாம் பார்த்த வண்ணம் இருக்கின்றோம். அந்தவகையில், நம்மில் பலருக்கு தெரிந்திருக்காத ஓர் ரயில் தடம் பற்றிய சுவாரஷ்ய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம்.

அதாவது, இந்தியாவில் இயங்கிக் கொண்டிருக்கும் ஓர் ரயிலுக்கு நம்முடைய அரசாங்கம் பிரிட்டனைச் சேர்ந்த ஓர் நிறுவனத்திற்கு கோடிக் கணக்கில் பணத்தை வழங்கிக் கொண்டிருக்கின்றது. யவத்மல் மற்றும் முர்திஜாபூர் இந்த தடத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் ரயிலுக்கே இந்திய அரசாங்கம் பிரிட்டன் நிறுவனத்திற்கு பணத்தை வழங்கிக் கொண்டிருக்கின்றது.

இந்த வழிதடம் மற்றும் ரயில் பிரிட்டிஷ் நிறுவனத்திற்கு சொந்தமான ஆகும். இது இப்போதும் பொது மக்கள் பயன்பாட்டில் இருக்கின்றது. சகுந்தலா ரயில்வேஸ் எனும் பெயரில் இந்த வழித் தடத்தில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சுமார் 190 கிமீ தூரம் கொண்ட இந்த வழித் தடத்தில் நாள்தோறும் ஆயிரக் கணக்கான மக்கள் பயணித்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்திய அரசாங்கம் கடந்த கால ஆட்சியாளர்களைக் காட்டிலும் தங்களுடைய அரசாங்கம் அதிகளவில் புதிய ரயில் வழித்தட்தை உருவாக்கிக் கொண்டிருப்பதாக கூறி வருகின்றது. இந்நிலையிலேயே இந்த அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதேவேளையில், பல ஆண்டுகளாக இந்த செயல்பாடு நடைமுறையில் இருக்கிறது என்பது கவனிக்கத்தகுந்தது.

ஆனால், இப்போதே சமூக வலைதளங்களினால் வெளியுலகில் பிரபலமடையத் தொடங்கி இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. பிரிட்டிஷ்காரர்கள் நம் நாட்டை விட்டு வெளியேறி பல தசாப்தங்கள் ஆகின்றன. இந்த நிலையில் இப்போதும் ஓர் பிரிட்டிஷ் நிறுவனத்திற்கு இந்திய அரசாங்கம் கப்பம் கட்டிக் கொண்டிருப்பதே அனைவரும் அதிர்ச்சி அடைய காரணமாக இருக்கின்றது.

ஆங்கிலேயர்களின் ஆட்சி காலத்தின்போது உருவாக்கப்பட்ட வழி தடமே இது ஆகும். காலனித்துவத்தின்போது இந்த பாதையில் தி கிரேட் இந்தியன் பெனின்சுலர் ரயில்வே (The Great Indian Peninsular Railway) ரயில்களை இயக்கிக் கொண்டிருக்கின்றது. வெள்ளையர்களின் வெளியேற்றத்தின்போது, இந்த வழித்தடம் புறக்கணிக்கப்பட்டது. ஆனால், பிரிட்டிஷ் நிறுவனத்திற்கு இது சொந்தம் என்பது மட்டும் மாற்றப்படவில்லை.

இதன் விளைவாகவே இப்போதும் இந்திய அரசாங்கம் கில்லிக் நிக்சன் எனும் பிரிட்டனைச் சேர்ந்த நிறுவனத்திற்கு கோடி ரூபாயை கட்டணமாக வழங்கிக் கொண்டிருக்கின்றது. 1910 ஆம் ஆண்டில் கில்லிக் -நிக்ஸனால் தொடங்கப்பட்டதே சகுந்தலா ரயில்வேஸ் ஆகும். ஒற்றை சுற்று பயணமாக சகுந்தலா ரயில்வேஸ் தன்னுடைய ரயில்களை யவத்மால் முர்திஜபூர் வழி தடத்தில் இயக்கிக் கொண்டிருக்கின்றது.

குறிப்பு: படங்கள் அனைத்தும் உதாரணத்திற்கு வழங்கப்பட்டவை

ஏழை மற்றும் அடித்தட்டு மக்களுக்கு மிகுந்த உதவியாக இந்த வழித் தடம் இருக்கின்றது. இதன் அதிகபட்ச கட்டணமே ரூ. 150தான் என கூறப்படுகின்றது. எனவேதான் இப்போதும் பலரால் பயன்படுத்தப்படும் ரயில் சேவையாக சகுந்தலாக ரயில்வேஸின் சேவை இருக்கின்றது. ஏ இசட்டி ஸ்டீம் எஞ்ஜின் கொண்டே ரயில்களே இந்த வழி தடத்தில் இயக்கப்பட்டன.

இது மிகவும் பழைமையான எஞ்ஜின் ஆகும். 1921 இல் மான்செஸ்டரில் இது தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. 70 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த எஞ்ஜின் பயன்பாட்டில் இருந்தது. தற்போது இந்த டீசல் மோட்டார் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. 1994 இல் தயாரிக்கப்பட்ட எஞ்ஜினே பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதில் பயணிக்கும் மக்கள் பலர் தங்களுடைய கிராமத்தில் விளையும் பொருட்களை சந்தைப் படுத்தவே பயன்படுத்துகின்றனர். குறிப்பாக, பருத்தி உள்ளிட்ட முக்கிய விவசாய பொருட்கள் யவத்மாலில் இருந்து மும்பைக்குக் கொண்டு வர பயன்படுத்துவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிக்னலிங், டிக்கெட் வழங்குவது, வண்டிகளில் இருந்து எஞ்ஜினை பிரித்தெடுத்தல் போன்ற அனைத்து பணிகளையும் ஏழு பேர் கொண்ட ஓர் குழு மட்டுமே மேற்கொண்டு வருகின்றது.

மேலும், இந்த ரயில் இப்போதும் குறுகிய ரயில் பாதையாகவே உள்ளது. இதனை விரைவில் அகல பாதையாக மாற்ற இருப்பதாக மத்திய ரயில்வே அமைச்சர் அண்மையில் கூறி இருந்தார். ரூ. 1,500 கோடி செலவில் யவத்மால் முர்திசாபூர் ரயில் பாதை புணரமைக்கப்பட இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Friday, March 10, 2023, 20:09 [IST]
English summary
Details about shakuntala railways owned by british company
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X