ஆர்சிபி அணி கொடுத்த 2 கோடி ரூபா இப்படித்தான் செலவாகி இருக்கு! ரேஞ்ச் ரோவரை வாங்கிய இந்த வீரர் யார்னு தெரியுதா?
தேவ்தத் படிக்கல் (Devdutt Padikkal), இந்த பெயரை எங்கேயோ கேட்டதுபோல் உள்ளதா? ஐபிஎல் (IPL) கிரிக்கெட் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணிக்காக விளையாடி வருபவர் தான் இந்த தேவ்தத் படிக்கல் ஆவார். ஐபிஎல் தொடர்களில் வெவ்வேறான அணிகளுக்காக விளையாடினாலும் இவர் நாடு முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகியதற்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முக்கியமான காரணம் ஆகும்.
கேரளாவில் பிறந்தவராக இருப்பினும், கர்நாடகாவில் கிரிக்கெட் வாய்ப்புக்களை பெற்றவரான தேவ்தத் படிக்கல், 2020-21 ஐபிஎல் தொடர்களில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக சிறப்பாக விளையாடி கவனத்தை ஈர்த்தார். மேலும், அதன் மூலமாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் வாய்ப்பையும் பெற்றார். ஆரம்பத்தில் எல்லாம் சுமூகமாக சென்றாலும், சமீப காலமாக தேவ்தத் படிக்கல்லின் பேட்டிங் கேள்விக்குறியாக உள்ளது.

3 வருடங்கள் வெவ்வேறான அணிக்களுக்காக விளையாடி, இந்த 2025 ஐபிஎல் தொடரின் மூலம் மீண்டும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கே வந்துள்ள தேவ்தத் படிக்கல், ஐபிஎல் மூலமாக நிறைய வருவாயை பெற்று வருகிறார் என்பது தற்போது அவர் வாங்கியிருக்கும் விலையுயர்ந்த காரை பார்த்தாலே தெரிகிறது. புதிய கார் உடன் கிரிக்கெட் வீரர் தேவ்தத் படிக்கல் எடுத்துக் கொண்ட படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.
இந்த ஆர்சிபி கிரிக்கெட் வீரர் வாங்கியிருப்பது லேண்ட் ரோவர் (Land Rover) நிறுவனத்தின் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் (Range Rover Sport) காரை ஆகும். முற்றிலும் கருப்பு நிறத்தில் வாங்கிய பிராண்ட்-நியூ ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் கார் உடன் பார்க்கிங் பகுதியில் தேவ்தத் படிக்கல் எடுத்துக் கொண்ட படங்கள் தற்போது கவனத்தை பெற்றுள்ளன.

அதிநவீன தொழிற்நுட்ப வசதிகள் மற்றும் பவர்ஃபுல்லான என்ஜின் மூலமாக செல்வந்தர்களின் பிரதானமான விருப்பமாக ரேஞ்ச் ரோவர் கார்கள் விளங்குகின்றன. அத்தகைய ரேஞ்ச் ரோவர் கார்களிலேயே விலையுயர்ந்த மாடல்களுள் ஒன்றாக ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் விளங்குகிறது. எச்.எஸ்.இ டைனாமிக் (HSE Dynamic), ஆட்டோபயோகிராபி (Autobiography) மற்றும் எஸ்வி எடிசன் (SV Edition) என 3 விதமான வேரியண்ட்களில் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் விற்பனை செய்யப்படுகிறது.
இவற்றின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.1.45 கோடியில் இருந்து ரூ.2.95 கோடி வரையில் உள்ளன. இந்த ரேஞ்ச் ரோவர் காரில் பொருத்தப்படும் 3 லிட்டர் 6-சிலிண்டர் டீசல் மைல்ட்-ஹைப்ரீட் என்ஜின் ஆனது அதிகப்பட்சமாக 345 பிஎஸ் மற்றும் 700 என்.எம் டார்க் திறன வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.
இந்த டீசல் என்ஜின் உடன் இந்த காரில் 0-இல் இருந்து 100km/h வேகத்தை வெறும் 5.9 வினாடிகளில் எட்டிவிடலாம். ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் காரில் வழங்கப்படும் 3 லிட்டர் பெட்ரோல் மைல்ட்-ஹைப்ரீட் என்ஜின் ஆனது 400 பிஎஸ் மற்றும் 550 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.
இந்த பெட்ரோல் என்ஜின் உதவியுடன் இந்த காரில் 0-இல் இருந்து 100km/h வேகத்தை இன்னும் சற்று விரைவாக 5.7 வினாடிகளில் எட்டிவிடலாம். இந்த இரு என்ஜின்கள் உடனும் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. இது என்ஜினின் ஆற்றலை காரின் நான்கு சக்கரங்களுக்கும் ஒரே நேரத்தில் வழங்குகிறது. அடாஸ் (ADAS), 360-டிகிரி கேமரா, முன் & பின்பக்க பார்க்கிங் சென்சார்கள் உள்ளிட்டவை இந்த காரின் முக்கியமான பாதுகாப்பு அம்சங்கள் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கிரிக்கெட் வீரர் தேவ்தத் படிக்கல்லின் ஸ்டைலுக்கு ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் சரியான காராகும். இந்த காரின் விலையாக மேலே குறிப்பிடப்பட்டு இருப்பது, எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே ஆகும். ஆன்-ரோடு விலை இன்னும் பல இலட்ச ரூபாய்கள் அதிகமாக வரும். ஐபிஎல் மூலம் தேவ்தத் படிக்கலுக்கு கிடைத்த வருவாய் தான் இவ்வாறு பிராண்ட்-நியூ ரேஞ்ச் ரோவர் காராக மாறி நிற்கிறது.


Click it and Unblock the Notifications








