இது கண்களில்பட ஒரு வருஷமாயிருச்சா திரு துணை முதல்வர் அவர்களே! விவசாயி மகன் உருவாக்கிய அதிகம் மைலேஜ் தரும் கார்

விவசாயியின் மகன் உருவாக்கிய இந்த காரில் 150 ரூபாக்கு ஹைட்ரஜனை நிரப்பினால் 300 கிமீ தூரம் வரை டிராவல் செய்ய முடியும். ஒரு வருடத்திற்கு காரை உருவாக்கியவருக்கு பாராட்டை தெரிவித்த மாநிலத்தின் துணை முதலமைச்சர். இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

ஹராஷ்டிராவின் சந்திராபூரைச் சேர்ந்தவர் ஹர்ஷல் நக்சேன். வீட்டிலேயே வைத்து சூப்பரான காரை தயாரித்ததன் காரணத்தினால் சென்ற ஆண்டு இவர் தலைப்பு செய்திகளில் இடம் பெற்றிருந்தார். அவர் வடிவமைத்தது பெட்ரோல், டீசலில் ஓடக் கூடிய வாகனம் அல்ல என்பது குறிப்பிடத்தகுந்தது. அது ஓர் ஹைட்ரஜன் பவர்டு வாகனம் ஆகும்.

Hydrogen car

இந்த வாகனங்கள் மிக குறைவான செலவை வழங்கக் கூடியதாகும். தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால் மின்சார கார்களைப் போல அதிக லாபத்தை வழங்கக் கூடிய வாகனமே ஹைட்ரஜன் பவர்டு வாகனம் ஆகும். இத்தகைய வாகனத்தையே வீட்டிலேயே வைத்து தயார் செய்ததன் காரணத்தினால் ஹர்ஷல் நக்சேனை பலர் பாராட்டி வருகின்றனர்.

இந்த நிலையிலேயே, சரியாக ஓராண்டுகள் கழித்து தற்போது மஹாராஷ்டிரா மாநிலத்தின் துணை முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ், ஹர்ஷல் நக்சேன் தயாரித்த காரை பார்த்து அவரை வெகு பாராட்டி இருக்கின்றார். ஹர்ஷல் நக்சேன், ஓர் விவசாயியின் மகன் ஆவார். சூழல் இப்படியாக இருக்க காரை உருவாக்குவதில் அவர் தனித் திறமையைக் காட்டி இந்த உலகைக் கவர்ந்திருக்கின்றார்.

Devendra fadnavis praises hydrogen car

இது சாதாரணமான ஹைட்ரஜன் பவர்டு வாகனம் என்று மட்டுமே நினைத்துக் கொள்ள வேண்டாம். இது ஓர் ஏஐ திறன் கொண்ட காரும்கூட. பல வகையான தானியங்கி சேவையைப் பெற்றுக் கொள்ள இது மிகுந்த வசதியாக இருக்கும். வீட்டிலேயே வைத்து இத்தகைய வாகனத்தை தயார் செய்வது எல்லாம் சாத்தியமற்றது ஆகும்.

இதனால்தான் ஒரு வருடம் ஆகிய பின்னரும் நேரில் சென்று விவசாயியின் மகன் தயாரித்த அந்த காரை பார்த்து அவருக்கு பாராட்டு தெரிவித்திருக்கின்றார் தேவேந்திர ஃபட்னாவிஸ். தொடர்ந்து, தன்னுடைய பாராட்டுக்களை தனது எக்ஸ் கணக்கின் வாயிலாகவும் அவர் பகிர்ந்திருக்கின்றார். இந்த காரை தயாரிக்க ஹர்ஷலுக்கு சுமார் ரூ. 25 லட்சம் வரை செலவாகி இருக்கின்றது.

அதேவேளையில், வெறும் ரூ. 150க்கு இந்த காரில் ஹைட்ரஜனை நிரப்பினால், அதனால் 300 கிமீ தூரம் வர பயணிக்க முடியும் என கூறப்படுகின்றது. நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் பெட்ரோல், டீசல் கார்களில் ரூ. 200 க்கு எரிபொருளை நிரப்பினால் கூட 40 கிமீ மைலேஜை பெறுவதே சந்தேகம்தான்.

அதுவும், இந்த கார் தானாக இயங்கும் வசதியுடன் உருவாக்கப்பட்டு இருப்பதுதான் இன்னும் கூடுதல் சிறப்பாகக் காட்சியளிக்கின்றது. ஏஐ தொழில்நுட்பத்தின் வாயிலாகவே இந்த அம்சம் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. இதுதவிர, இந்த காரை மிகவும் அழகிய மற்றும் கவர்ச்சியான தோற்றம் கொண்ட காராகவும் ஹர்ஷல் வடிவமைத்து இருக்கின்றார்.

Devendra fadnavis

அந்தவகையில், சிசர் டோர்கள், சன்ரூஃப் வசதி, பிரீமியமான இன்டீரியர் என ஏகப்பட்ட அம்சங்களை இந்த காரில் சேர்த்து இருக்கின்றார். எதிர்காலத்தில் இந்த காரை உற்பத்தி செய்யும் திட்டத்தில் ஹர்ஷல் இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது. தன்னிடத்தில் குறைந்தபட்சம் 100 கார்களை தயாரிக்கும் அளவிற்கு உதிரி பாகங்கள் கிடைக்கும் எனில் அந்த காரின் உற்பத்தியை அவர் கட்டாயம் தொடங்குவேன் என தெரிவித்து இருக்கின்றார்.

ஆனால், இது எப்போது நடக்கும் என்பது தெரியவில்லை. இதுகுறித்த தகவலையும் அவர் வெளியிடவில்லை. மேலும், இப்போது வரை அந்த வாகனம் பயன்படுத்தத் தடை செய்யப்பட்ட வாகனமாக மட்டுமே இருக்கின்றது. ஓர் வாகனத்தை சாலையில் வைத்து பயன்படுத்த வேண்டும் எனில், அந்த வாகனம் உரிய அனுமதியை அரசிடம் பெற்றிருக்க வேண்டும் என்பது அவசியமாகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஹைட்ரஜன் பவர்டு வாகனங்கள் இன்னும் முழுமையாக பயன்பாட்டிற்கு வரவில்லை. இப்போதே அவை சோதனைக் கட்டத்தில் இருக்கின்றன. டொயோட்டா உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் அதன் ஹைட்ரஜன் பவர்டு வாகனங்களை இந்தியாவில் களமிறக்குவதில் அதி தீவிரமாக ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Wednesday, November 8, 2023, 12:05 [IST]
English summary
Devendra fadnavis praises youth who build hydrogen powered car
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X