இந்தியாவில் பறக்கும் காருக்கு ஒப்புதல்! சென்னை நிறுவனம் செய்த மகத்தான சாதனை!
இந்தியாவில் பறக்கும் காருக்கான ஒப்புதலை சிவில் எவியேஷன் இயக்குனரகம் வழங்கியுள்ளது. இந்த ஒப்புதலைச் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் தனியார் நிறுவனம் ஒன்று பெற்றுள்ளது. இதன் மூலம் விரைவில் இந்தியாவில் பறக்கும் கார்களின் பயன்பாடு கமர்ஷியல் ரீதியாகக் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகம் முழுவதும் பல ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பறக்கும் கார்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. அவர்கள் பறக்கும் கார்களை வெவ்வேறு விதமாக வடிவமைத்து அதை மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கும் வகையில் பயன்பாட்டிற்குக் கொண்டு வர பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.

இந்தியாவிலும் சில ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இவ்வாறாகப் பறக்கும் கார்களை வடிவமைத்து விற்பனைக்குக் கொண்டு வரும் முயற்சியில் இறங்கியுள்ளது. அதில் ஒரு நிறுவனம்தான் இ பிளைன் கம்பெனி. இந்நிறுவனம் சென்னை ஐஐடியுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் தற்போது பறக்கும் காரை உருவாக்கியுள்ளது.
இந்நிறுவனம் எலக்ட்ரிக்கல் வெர்டிகல் டேக் ஆஃப் மற்றும் லேண்டிங் (eVTOL) என்ற தொழில்நுட்பத்தில் இயங்கக்கூடிய பறக்கும் காரை தற்போது வடிவமைத்துள்ளது. விமானம் போன்ற அனைத்து வகையான பறக்கும் வாகனங்களுக்கு கமர்ஷியல் பயன்பாட்டிற்கான கொண்டு வரும் ஒப்புதல் அளிக்கும் உரிமை இந்தியாவில் சிவில் ஏவியேஷன் இயக்குனரகத்துக்கு தான் இருக்கிறது.

இந்த இயக்குனரகத்திடம் ஒரு கமர்ஷியல் விமானத்திற்கான உரிமம் வாங்க வேண்டும் என்றால் அந்த விமானத்தின் அடிப்படை டிசைனை முதலில் ஒப்புதல் வாங்க வேண்டும். பறக்கும் கார்களுக்களை கமர்சியல் பயன்பாட்டிற்குக் கொண்டு வருவதற்கும் இதே வழிமுறைதான் இருக்கிறது. அதன்படி இ-பிளைன் நிறுவனம் தனது பறக்கும் காருக்கான ஒப்புதலுக்காக விண்ணப்பித்திருந்தது.
சிவில் எவியேஷன் இயக்குனரகம் டிசைன் ஆர்கனைசேஷன் அப்ரூவல் (DOA) என்ற ஒரு முதற்கட்ட ஒப்புதலை இந்த நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது. இந்த ஒப்புதல் தான் கமர்ஷியல் பறக்கும் கார்களை பயன்பாட்டிற்குக் கொண்டு வரும் முதல் கட்ட ஒப்புதல் ஆகும். இதன்படி இ-பிளைன் நிறுவனம் உருவாக்கிய இ200 eVTOLரக பறக்கும் காரை கமர்ஷியல் பயன்பாட்டுக்குக் கொண்டு வரும் என எதிர்பார்க்கலாம்.

இந்த இ-பிளைன் கம்பெனியின் நிறுவனர் சத்யநாராயணன் சக்கரவர்த்தி கூறும் போது : "எங்களுக்கு டிஓஏ சான்று கிடைத்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. இது எங்கள் நிறுவனத்தின் முக்கியமான மைல்கள். எங்களது முதல் முயற்சியே வெற்றியில் அமைந்துள்ளது. இது எங்களை அடுத்தடுத்த கட்டத்திற்கு எடுத்த செல்ல ஊக்கமளிக்கிறது.
எங்களது இ200 eVTOL ரக பறக்கும் காரை விரைவில் கமர்ஷியலுக்கு கொண்டு வருவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. இந்தியாவில் இந்த டிஏஓ சான்றுகளைப் பெற்ற முதல் ஸ்டார்ட் அப் நிறுவனம் எங்கள் நிறுவனமாக இருக்கிறது. இன்னும் பல நிறுவனங்கள் வரும் என எதிர்பார்க்கிறோம்." எனக் கூறினார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் பறக்கும் கார்கள் தொழிற்நுட்பம் பல்வேறு சிக்கல்களுக்கு தீர்வாக இருக்கும் உலகளவில் பல நிறுவனங்கள் இதைச் செயல்முறைக்குக் கொண்டு வரும் முயற்சியில் இருக்கும் நிலையில் இந்தியாவில் தற்போது தான் ஒப்புதல் நிலையில் இருக்கிறது. இந்த ஆய்வில் இன்னும் பல நிறுவனங்கள் ஈடுபட அரசு ஊக்கப்படுத்த வேண்டும்.


Click it and Unblock the Notifications









