கொரோனாவோடு சேர்ந்து கூத்தடிக்கும் வெட்டுக்கிளிகள்... விமானங்களுக்கு காத்திருக்கும் பேராபத்து!

கொரோனா பிரச்னை பெரும் திண்டாட்டத்தை ஏற்படுத்தி உள்ள வெட்டுக்கிளிகளாலும் விமானப் போக்குவரத்து துறைக்கு அடுத்த சிக்கல் எழுந்துள்ளது.

கொரோனாவோடு சேர்ந்து கூத்தடிக்கும் வெட்டுக்கிளிகள்... விமானங்களுக்கு காத்திருக்கும் பேராபத்து!

கொரோனா பிரச்னையால் உலக அளவில் விமானப் போக்குவரத்து பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. கடந்த இரண்டு மாதங்களாக ஆயிரக்கணக்கான விமானங்கள் சேவையில் ஈடுபடுத்தப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. விமானப் போக்குவரத்து துறையின் இருண்ட காலமாக மாறி இருக்கிறது.

கொரோனாவோடு சேர்ந்து கூத்தடிக்கும் வெட்டுக்கிளிகள்... விமானங்களுக்கு காத்திருக்கும் பேராபத்து!

கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வருவதற்கான உத்திகளை விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் ஆராய்ந்து வருகின்றன. மேலும், பாதுகாப்பு விதிகளை பின்பற்றி விமானங்களை இயக்குவதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளன. அண்மையில்தான் உள்நாட்டு விமானப் போக்குவரத்து துவங்கியதுடன், குறைவான எண்ணிக்கையில் மட்டும் விமானங்கள் இயக்கப்படுகின்றன.

MOST READ : பருவமழை காலம் வருதுங்க... உங்க வண்டி பத்திரம்!

கொரோனாவோடு சேர்ந்து கூத்தடிக்கும் வெட்டுக்கிளிகள்... விமானங்களுக்கு காத்திருக்கும் பேராபத்து!

இந்த நிலையில், கொரோனா பிரச்னையையடுத்து, தற்போது பாலைவன வெட்டுக்கிளிகளால் விமானப் போக்குவரத்துத் துறைக்கு அடுத்த சிக்கல் எழுந்துள்ளது. ஆம், ராஜஸ்தானில் படையெடுத்த வெட்டுக்கிளிகள் அங்கு விவசாயப் பயிர்களை நாசம் செய்து வருகின்றன.

கொரோனாவோடு சேர்ந்து கூத்தடிக்கும் வெட்டுக்கிளிகள்... விமானங்களுக்கு காத்திருக்கும் பேராபத்து!

ராஜஸ்தானை தொடர்ந்து பஞ்சாப், குஜராத், மஹாராஷ்டிரா மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் வெட்டுக்கிளிகளால் விவசாயப் பயிர்கள் நாசமாகி வருகின்றன. அடுத்து தென் இந்தியா மீதும் வெட்டுக்கிளிகள் படையெடுக்கும் என்ற அச்சம் நிலவுகிறது.

கொரோனாவோடு சேர்ந்து கூத்தடிக்கும் வெட்டுக்கிளிகள்... விமானங்களுக்கு காத்திருக்கும் பேராபத்து!

தமிழகத்திலும் இந்த பீதி உள்ளது. ஊட்டி மற்றும் கிருஷ்ணகிரியில் வெட்டுக்கிளி கூட்டம் தென்பட்டதாக நேற்று படங்களுடன் செய்திகள் வெளியானது. ஆனால், இது உள்நாட்டு வகை வெட்டுக்கிளிகள் என்று விளக்கம் தரப்பட்டுள்ளது.

கொரோனாவோடு சேர்ந்து கூத்தடிக்கும் வெட்டுக்கிளிகள்... விமானங்களுக்கு காத்திருக்கும் பேராபத்து!

இந்த நிலையில், வெட்டுக்கிளிகளால் விமானப் போக்குவரத்து துறை அடுத்த சிக்கலை சந்திக்கும் நிலை உள்ளது. அதாவது, விமானங்கள் மேலே எழும்பும்போது, தரை இறங்கும்போது வெட்டுக்கிளிகள் கூட்டம் எஞ்சின் மற்றும் ஏசி சிஸ்டத்திற்குள் புகுந்துவிடும் அபாயம் இருப்பதாக மத்திய விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் (DGCA) எச்சரித்துள்ளது.

கொரோனாவோடு சேர்ந்து கூத்தடிக்கும் வெட்டுக்கிளிகள்... விமானங்களுக்கு காத்திருக்கும் பேராபத்து!

வெட்டுக்கிளிகள் விமானத்தின் சில முக்கிய பாகங்களில் புகுந்துவிட்டதால், விமானத்தின் வேகம், திசைக்காட்டு கருவி உள்ளிட்டவை செயல் இழப்பதற்கான வாயப்புகள் உள்ளதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே, வெட்டுக்கிளிகள் நடமாட்டத்தை கண்காணித்து உரிய பாதுகாப்பு முறைகளுடன் விமானங்களை இயக்குவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனாவோடு சேர்ந்து கூத்தடிக்கும் வெட்டுக்கிளிகள்... விமானங்களுக்கு காத்திருக்கும் பேராபத்து!

அதிக உயரத்தில் விமானங்கள் பறக்கும்போது வெட்டுக்கிளிகளால் பிரச்னை இருக்காது. ஏனெனில், வெட்டுக்கிளிகள் குறைவான உயரத்தில் பறக்கக்கூடியவையாக தெரிவிக்கப்படுகிறது.

கொரோனாவோடு சேர்ந்து கூத்தடிக்கும் வெட்டுக்கிளிகள்... விமானங்களுக்கு காத்திருக்கும் பேராபத்து!

ஆனால், விமானங்களை தரை இறக்கும்போது, மேலே எழுப்பும்போது கவனமாகவும் எச்சரிக்கையாகவும் செயல்படுமாறு விமானிகளுக்கு அறிவுரை வழங்கி இருக்கிறது. மேலும், விமானங்களை பரிசோதிக்கும் பொறியாளர் குழுவும் மிக கவனமாக சோதனைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தி உள்ளது.

கொரோனாவோடு சேர்ந்து கூத்தடிக்கும் வெட்டுக்கிளிகள்... விமானங்களுக்கு காத்திருக்கும் பேராபத்து!

கடந்த இரண்டு மாதங்களாக ஸ்தம்பித்து இருந்த விமானப் போக்குவரத்து பெரும் சோதனைகளுக்கு பின் ஓரளவு மீண்டும் செயல்பட துவங்கி இருக்கிறது. ஆனால், வெட்டுக்கிளிகளால் விமானப் போக்குவரத்துக்கு அடுத்த பிரச்னை ஏற்பட்டுள்ளது விமானப் போக்குவரத்து நிறுவனங்கள், பயணிகள் மத்தியில் அதிர்ச்சியையும், அச்சத்தையும் தந்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Saturday, May 30, 2020, 12:28 [IST]
English summary
DGCA has issued guidelines for Pilots and aircraft maintanence engineers to deal with locust swarms problem.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+