பிறந்த நாளை முன்னிட்டு புத்தம் புதிய காரை வாங்கிய ஹாக்கி ஸ்டார் தன்ராஜ் பிள்ளை... விலை எவ்ளோனு தெரியுமா?

பிறந்த நாளை முன்னிட்டு புத்தம் புதிய காரை தன்ராஜ் பிள்ளை வாங்கியுள்ளார். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பிறந்த நாளை முன்னிட்டு புத்தம் புதிய காரை வாங்கிய ஹாக்கி ஸ்டார் தன்ராஜ் பிள்ளை... விலை எவ்ளோனு தெரியுமா?

இந்தியாவின் புகழ்பெற்ற ஹாக்கி வீரர்களில் முக்கியமானவர் தன்ராஜ் பிள்ளை. அவருக்கு இன்று (ஜூலை 16) பிறந்த நாள். இதை கொண்டாடும் விதமாக எம்ஜி க்ளோஸ்ட்டர் எஸ்யூவி (MG Gloster SUV) காரை தன்ராஜ் பிள்ளை வாங்கியுள்ளார். மும்பையில் உள்ள எம்ஜி ஷோரூம் ஒன்றில், தன்ராஜ் பிள்ளை க்ளோஸ்ட்டர் எஸ்யூவி காரை வாங்கியுள்ளார்.

பிறந்த நாளை முன்னிட்டு புத்தம் புதிய காரை வாங்கிய ஹாக்கி ஸ்டார் தன்ராஜ் பிள்ளை... விலை எவ்ளோனு தெரியுமா?

அவர் சிகப்பு நிறத்தில் எம்ஜி க்ளோஸ்ட்டர் எஸ்யூவி காரை தேர்வு செய்துள்ளார். இந்திய சந்தையில் எம்ஜி க்ளோஸ்ட்டர் எஸ்யூவி கடந்த ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. தற்போதைய நிலையில் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் எம்ஜி நிறுவனத்தின் முதன்மையான காராக க்ளோஸ்ட்டர் திகழ்கிறது.

பிறந்த நாளை முன்னிட்டு புத்தம் புதிய காரை வாங்கிய ஹாக்கி ஸ்டார் தன்ராஜ் பிள்ளை... விலை எவ்ளோனு தெரியுமா?

இது ஃபுல்-சைஸ் எஸ்யூவி கார் ஆகும். இந்திய சந்தையில் டொயோட்டா பார்ச்சூனர், ஃபோர்டு எண்டேவியர் உள்ளிட்ட கார்களுடன் எம்ஜி க்ளோஸ்ட்டர் போட்டியிட்டு வருகிறது. இதுதவிர மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 காருக்கும், எம்ஜி க்ளோஸ்ட்டர் போட்டியாக திகழ்கிறது. இந்திய சந்தையில் எம்ஜி க்ளோஸ்ட்டர் எஸ்யூவி காரின் ஆரம்ப விலை 29.98 லட்ச ரூபாய் ஆகும்.

பிறந்த நாளை முன்னிட்டு புத்தம் புதிய காரை வாங்கிய ஹாக்கி ஸ்டார் தன்ராஜ் பிள்ளை... விலை எவ்ளோனு தெரியுமா?

அதே சமயம் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 36.88 லட்ச ரூபாயாக உள்ளது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும். எம்ஜி க்ளோஸ்ட்டர் எஸ்யூவி காரில் மொத்தம் இரண்டு இன்ஜின் தேர்வுகள் கிடைக்கின்றன. இவை இரண்டுமே 2.0 லிட்டர் டீசல் இன்ஜின்கள்தான். இந்த இரண்டு இன்ஜின்களுக்கும் டர்போசார்ஜரில் மட்டுமே வித்தியாசம் உள்ளது.

பிறந்த நாளை முன்னிட்டு புத்தம் புதிய காரை வாங்கிய ஹாக்கி ஸ்டார் தன்ராஜ் பிள்ளை... விலை எவ்ளோனு தெரியுமா?

விலை குறைந்த வேரியண்ட்களில், சிங்கிள் டர்போ இன்ஜின் மட்டுமே வழங்கப்படுகிறது. அதே நேரத்தில் விலை உயர்ந்த வேரியண்ட்களில், ட்வின்-டர்போ இன்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது. இதில், சிங்கிள் டர்போ இன்ஜின் அதிகபட்சமாக 163 பிஎஸ் பவரையும், 375 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. அதே நேரத்தில் ட்வின்-டர்போ இன்ஜின் 218 பிஎஸ் பவரையும், 480 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

பிறந்த நாளை முன்னிட்டு புத்தம் புதிய காரை வாங்கிய ஹாக்கி ஸ்டார் தன்ராஜ் பிள்ளை... விலை எவ்ளோனு தெரியுமா?

எம்ஜி க்ளோஸ்ட்டர் எஸ்யூவி காரின் வருகையால், டொயோட்டா பார்ச்சூனர் மற்றும் ஃபோர்டு எண்டேவியர் ஆகிய கார்களுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. விலை உயர்ந்த கார் என்னும் நிலையிலும், அதற்கு ஏற்ற வகையில் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை எம்ஜி நிறுவனத்திற்கு க்ளோஸ்ட்டர் எஸ்யூவி ஈட்டி தந்து கொண்டுள்ளது.

பிறந்த நாளை முன்னிட்டு புத்தம் புதிய காரை வாங்கிய ஹாக்கி ஸ்டார் தன்ராஜ் பிள்ளை... விலை எவ்ளோனு தெரியுமா?

இந்திய சந்தையில் க்ளோஸ்ட்டர் தவிர, ஹெக்டர், ஹெக்டர் ப்ளஸ் ஆகிய கார்களையும் எம்ஜி நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இதுதவிர இஸட்எஸ் எலெக்ட்ரிக் காரையும் எம்ஜி நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு வைத்துள்ளது. இவை அனைத்துமே எஸ்யூவி ரக கார்கள்தான் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

பிறந்த நாளை முன்னிட்டு புத்தம் புதிய காரை வாங்கிய ஹாக்கி ஸ்டார் தன்ராஜ் பிள்ளை... விலை எவ்ளோனு தெரியுமா?

இந்தியாவில் எஸ்யூவி ரக கார்களுக்கு டிமாண்ட் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, தொடர்ச்சியாக எஸ்யூவி கார்களையே எம்ஜி நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்து வருகிறது. அந்த நிறுவனத்தின் அனைத்து கார்களுக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி, அதிகம் விற்பனையாகி வரும் எலெக்ட்ரிக் கார்களில் ஒன்றாக திகழ்கிறது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Dhanraj Pillay Buys MG Gloster SUV: Check Details Inside. Read in Tamil
Story first published: Friday, July 16, 2021, 15:23 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X