தீபாவளிக்காக புது கார் அல்லது டூ-வீலர் வாங்கலாம்னு இருக்கீங்களா?.. எப்போது வாங்கலாம்? எந்த நேரம் நல்ல நேரம்?..

தீபாவளி பண்டிகையின்போது புதிதாக பொருட்களை வாங்கினால் செல்வம் செழிக்கும் என்பது பலரின் நம்பிக்கை. இதனால்தான் இந்த பண்டிகைக் காலத்தில் தங்கம், வெள்ளி மற்றும் புதிய பாத்திரங்கள் உள்ளிட்டவற்றுடன் சிலர் புதிய வாகனங்களையும் வாங்கிக் கொண்டிருக்கின்றனர். இதன் வாயிலாக தங்களின் வளமும், செல்வமும் மேலும் பலமடங்காக அதிகரிக்கும் என்பதே அவர்களின் நம்பிக்கை. இதுமட்டுமில்லைங்க, இந்த பண்டிகைக் காலத்தில் வாகனங்கள் வாங்கினால் அது தங்களுக்கு பாதுகாப்பான பயணத்தை வழங்கும் என்பதும் இந்துக்கள் பலரின் நம்பிக்கையாக உள்ளது. எனவேதான் இந்த பண்டிகையில் எப்போதும் இல்லாத அளவிற்கு வாகனங்களின் விற்பனை பலமடங்காக உயர்ந்துக் காணப்படும்.

மேலும், வாடிக்கையாளர்களைக் கவரும் விதமாக வாகன உற்பத்தியாளர்களும் தங்கள் சார்பில் ஆஃபர்களை வாரி வழங்குவார்கள். அந்தவகையில், 2024தீபாவளியை முன்னிட்டும் வாகன உற்பத்தியாளர்கள் ஏகப்பட்ட ஆஃபர்களை வாரி வழங்கிக் கொண்டிருக்கின்றனர். இந்த மாதிரியான சூழலை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிற எண்ணத்தில் நீங்கள் இருக்கின்றீர்களா? மேலும், தீபாவளிக்கு எந்த நேரத்தில் காரை வாங்கினால் நல்லது என்றும் யோசித்துக் கொண்டிருக்கின்றீர்களா? இதற்கான பதிலையே இந்த பதிவில் பார்க்கவுள்ளம். விரிவான பதிவிற்குள் போகலாம், வாங்க.

Dhanteras 2024 importance of buying vehicles

தீபாவளியை முன்னிட்டு வருகின்ற அக்டோபர் 29 மற்றும் அக்டோபர் 30 இந்த இரண்டு நாளிலும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் புதிய வாகனங்களை வாங்கலாம். அனைத்து நேரமும் புதிய பொருள் மற்றும் வாகனம் ஆகியவற்றை வாங்க உகந்தது ஆகும். அதேநேரத்தில், அக்டோபர் 29 ஆம் தேதி காலை 10.31 மணியை மிக முக்கியமான நேரமாக கருதுகின்றனர்.

இதேபோல், அக்டோபர் 30 அன்று மதியம் 1.15 மணியை மிக முக்கியமானதாக கணித்திருக்கின்றனர். இந்த இரண்டு நேரங்களும் மிகுந்த அதிர்ஷ்டத்தை வாரி வழங்கும் நேரங்கள் என கூறப்படுகின்றது. ஆகையால், உங்களுடைய வாகனத்தின் சாவியை இந்த நேரத்தில் உங்கள் கைகளில் தாராளமாக வாங்கலாம்.

இதேபோல், வாகனத்தை வாங்குவதற்கான அனைத்து வேலைகளையும் ஒன்று அல்லது இரண்டு நாட்களே முடித்துவிடுவது நல்லது. அதாவது, பணம் செலுத்துவது, ஆவணங்களை சமர்பிப்பது என அனைத்து வேலைகளையும் முன்கூட்டியே செய்துவிடுவது நல்லது. அப்போதுதான் நாம் நினைத்த நேரத்தில் தடையில்லாமல் வாகனத்தை கைகளில் பெற்றுக் கொள்ள முடியும்.

தமிழகத்தில் வருகின்ற 31ஆம் தேதி அன்றே தீபாவளி அனுசரிக்கப்பட இருக்கின்றது. இதேபோல், நோன்பு இருப்பவர்கள் மறுநாள் நவம்பர் 1 அன்று தீபாவளி அனுசரிப்பார்கள். இதுமட்டுமில்லைங்க இந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இரண்டு நாட்களும், பின்னர் இரண்டு நாட்களும் மிக முக்கியமான நாளாக கருதப்படுகின்றது.

இருப்பினும், அக்டோபர் 29 மற்றும் அக்டோபர் 30 ஆகிய இரண்டு நாட்களே மிக மிக முக்கியமான நாட்களாக அனுசரிக்கப்பட இருக்கின்றது. இந்த நாளில் வாகனத்தை வாங்கும்போது பலவிதமான பலன்கள் நம்மை தேடி வரும் என்று நம்பப்படுகின்றது. குறிப்பாக, வாழ்க்கையில் வெற்றிகள் வந்து குவியும், பாதுகாப்பான பயணம் கிடைக்கும் மற்றும் வாகனமும் நீண்ட காலம் நம்முடன் நீடித்து உழைக்கும் என்றும் நம்புகின்றனர்.

இதனால்தான் இந்த பண்டிகைக் காலத்தில் இந்தியர்கள் வாகனங்களை வாங்கிக் குவிக்கின்றனர். பெரும் பணக்காரர்கள், திரை நட்சத்திரங்கள் என பலரும் இந்த காலகட்டத்தில் வாகனங்களை வாங்குவார்கள் என்பது கவனிக்கத்தகுந்தது. அந்தவகையில், 2024 தீபாவளியில் முன்னணி நடிகர்கள் பலர் புதிதாக வாகனத்தை வாங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: தீபாவளி பண்டிகைக் காலத்தில் வாகனம் வாங்கும்போது பல விதமான பலன்களை அனுபவிக்க முடியும். மிக முக்கியமாக வாகன உற்பத்தியாளர்கள் வழங்கும் சிறப்பு கேஷ்பேக், விலை தள்ளுபடி மற்றும் கட்டணமில்லா அணிகலன் என ஏகப்பட்ட ஆஃபர்களை பெற்றுக் கொள்ள முடியும். ஆகையால், இந்த தீபாவளியின்போது கார், பைக் அல்லது ஸ்கூட்டர் என எந்த வாகனத்தை வாங்கினாலும் உங்களுடைய பாக்கெட்டில் இருந்து போகும் பணத்தைக் கணிசமாக மிச்சப்படுத்திக் கொள்ள முடியும்.

More from DriveSpark

Article Published On: Saturday, October 26, 2024, 11:00 [IST]
English summary
Dhanteras 2024 importance of buying vehicles and shubh muhurat more details
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+