நடிகர் தனுஷ் ஓட்டு போட வந்த காரின் விலை என்ன தெரியுமா? இவ்வளவு காஸ்ட்லியான காரா இது?
இன்று பாராளுமன்றத்திற்கான முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து வருகிறது. தமிழகத்தில் ஒரே கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடந்து வருகிறது. இப்படியாக நடிகர் தனுஷ் தனது ரூபாய் 3.71 கோடி ரூபாய் மதிப்பிலான காரில் வந்து தனது வாக்கை பதிவு செய்தார். இந்த வீடியோ சமூக வலை தினங்களில் வைரலாக பரவி வருகிறது. பலர் இந்த கார் குறித்து பேசி வருகிறார்கள் இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக தேர்தலான இந்திய பாராளுமன்றத்திற்கான பொதுத் தேர்தல் தற்போது இந்தியாவில் நடந்து வருகிறது. முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு துவங்கிய நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்து வருகிறார்கள். இந்நிலையில் பிரபலங்களும் தங்கள் வாக்குகளை பதிவு செய்ய வாக்குச்சாவடிக்கு குவிந்த வண்ணம் உள்ளனர்.

பிரபலங்கள் தங்கள் வாக்கை பதிவு செய்ய வரும்போது அவர்கள் எப்படி வருகிறார்கள் என்று மக்கள் ஊடகங்கள் வாயிலாக கவனமாக கவனித்து வருகிறார்கள். இந்நிலையில் நடிகர் தனுஷ் தனது காஸ்ட்லியான காரில் வந்து தனது வாக்கை பதிவு செய்தார். நடிகர் தனுஷ் வந்த கார் தற்போது ஊடகங்களில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. பலர் இந்த காரை பற்றி பேசி வருகிறார்கள்.
நடிகர் தனுஷ் இன்று வாக்கு சாவடிக்கு வாக்கு செலுத்த வந்தது மெர்சிடீஸ் பென்ஸ் நிறுவனத்தின் மேபேக் ஜிஎல்எஸ் என்ற காராகும். இந்த கார் ஒரு சொகுசராக காராகும். இந்த காரை பெரும்பாலும் பிரபலங்கள் தான் வாங்கி பயன்படுத்துவார்கள். ஏனென்றால் இந்த காரின் விலை அதிகமாக இருக்கும். பெரும் தொழிலதிபர்கள், பிரபலங்கள், நடிகர், நடிகைகள் பயன்படுத்தும் காராக இது இருக்கிறது.

இந்த மெர்சிடிஸ் மேபேக் ஜிஎல்எஸ் காரை பொருத்தவரை ஒரே ஒரு வேரியன்டில் தான் இந்த கார் விற்பனையாகி வருகிறது. இந்த காரின் இன்ஜினை பொறுத்த வரை 3982 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 550 பிஎச்பி பவரையும் 730 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கார் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் காராக இருக்கிறது.
இந்த கார் 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 4.9 நொடியில் பிக்கப் செய்துவிடும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக இந்த கார் 250 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டதாக இருக்கிறது. சிறப்பான இன்ஜினால் அதிக திறன் கொண்ட பவரில் இந்த கார் பயணிக்கும் திறன் கொண்டதாக இருக்கிறது. இதுபோக இந்த காரில் சொகுசு அம்சமும் சிறப்பாக இருக்கிறது.
நடிகர் தனுஷ் வரும்போது அவர் காரை மக்கள் பல திரும்பி பார்க்க முக்கியமான காரணம் இந்த காரின் லுக் தான். சாலையில் இந்த கார் சென்றால் மற்ற அனைத்து கார்களையும் விட மக்களின் கவனம் இந்த கார் மீது தான் படும். அந்த அளவிற்கு கவனத்தை ஈர்க்கும் வகையிலான காராக இருக்கிறது. இதன் காரணமாகவே நடிகர் நடிகைகள் பலர் இந்த காரை வாங்கி வருகிறார்கள்.
இந்த காரின் விலையை பொறுத்த வரை இந்தியாவில் ரூபாய் 2.96 கோடி என்ற எக்ஸ் ஷோரூம் விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த காரை சென்னையில் பதிவு செய்து வாங்க வேண்டும் என்றால் ரூபாய் 3.71 விலையாக வருகிறது. இந்த காரின் விலை காரணமாக இந்த காரின் விற்பனை என்பது குறைவாக தான் இருக்கும். முக்கியமாக பிரபலங்கள் தான் இந்த காரை வாங்குவார்கள்.
நடிகர் தனுஷ் இந்த காரில் வந்து தனது வாக்கை செலுத்த வந்தது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இன்று நடிகர் நடிகைகள் பலர் தங்கள் சொகுசு கார்களில் வந்து வாக்கு செலுத்த வருவது நிச்சயம் அவரது கவனத்தை ஈர்க்கும். இதனால் ஊடகங்கள் இன்று பிரபலங்கள் எப்படி வாக்கு செலுத்த வருகிறார்கள். என்ற விஷயத்தை ஊடகங்கள் வாயிலாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பிரபலங்கள் இன்று பயன்படுத்தும் வாகனங்கள் மூலம் தங்கள் ரசிகர்களுக்கு பல சூசகமான தகவல்களை சொல்ல வாய்ப்பு இருக்கிறது. இதனால் ஊடகங்களில் பிரபலங்கள் வரும் வாகனங்கள் முன்னிலைப்படும் இப்படியாக அடிகள் தனுஷ் வந்த காஸ்ட்லியான கார் இன்று பலருக்கு கவனத்தை ஈர்த்துள்ளது. இதுபோல மற்ற நடிகர்கள் என்னென்ன வாகனங்களில் வருகிறார்கள் என்பதை பொருத்திருந்து பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








