சென்னை சாலைகளில் சுற்றிய 2 கோடி ரூபாய் கார்! உள்ளே இருந்தது யார்னு மட்டும் தெரிஞ்சா அசந்து போயிருவீங்க!

தமிழ் சினிமாவில் (Tamil Cinema) மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தனுஷ் (Dhanush). நடிகர் (Actor), பாடகர் (Singer) மற்றும் இயக்குனர் (Director) என இவருக்கு பல்வேறு முகங்கள் உள்ளன. பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினாலும் கூட, தனுஷின் திறமை அசாத்தியமானது.

இதன் காரணமாகவே தமிழ் திரையுலகையும் கடந்து, ஹாலிவுட் (Hollywood), பாலிவுட் (Bollywood) திரையுலகங்களிலும் தனுஷ் காலடி பதித்து விட்டார். சினிமாவை போலவே, இவர் கார்களையும் அதிகமாக நேசிக்க கூடியவர். அவரிடம் உள்ள விலை உயர்ந்த கார்களே இதற்கு சாட்சி. தனுஷின் கார் கலெக்ஸன் (Car Collection) மிகப்பெரியது.

BMW 7 Series

ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் (Rolls Royce Ghost), பென்ட்லீ கான்டினென்டல் ஃப்ளையிங் ஸ்பர் (Bentley Continental Flying Spur), ஆடி ஏ8 (Audi A8) மற்றும் ஃபோர்டு மஸ்டங் ஜிடி (Ford Mustang GT) உள்ளிட்ட கார்களை எல்லாம் தனுஷ் வைத்துள்ளார். இந்த வரிசையில் மேலும் ஒரு விலை உயர்ந்த காரை தனுஷ் வாங்கியுள்ளார்.

அது பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் (BMW 7 Series) ஆகும். இது சொகுசு செடான் (Luxury Sedan) ரகத்தை சேர்ந்தது. நடிகர் தனுஷின் பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் கார், சென்னை (Chennai) சாலைகளில் வலம் வரும் வைரல் வீடியோ (Viral Video) சமூக வலை தளங்களில் தற்போது காட்டு தீ போல் பரவி வருகிறது. யூடியூப் (YouTube) தளத்தில் இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ளது.

Dhanush Buys BMW 7 Series

14.9 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் என ஏகப்பட்ட வசதிகள் (Features) இந்த காரில் கொடுக்கப்பட்டுள்ளன. நடிகர் தனுஷ் வாங்கியிருப்பது 740ஐ எம் ஸ்போர்ட் (740i M Sport) வேரியண்ட் ஆகும். இதன் விலை (Price) 1.78 கோடி ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இது எக்ஸ் ஷோரூம் விலையாகும். ஆன் ரோடு விலை சுமார் 2.23 கோடி ரூபாய் வரும். பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் காரின் 740ஐ எம் ஸ்போர்ட் வேரியண்ட்டில், 3.0 லிட்டர் இன்லைன் 6 சிலிண்டர் ட்வின் டர்போசார்ஜ்டு பெட்ரோல் (Petrol) இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 375 பிஹெச்பி பவர் மற்றும் 520 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.

இந்த இன்ஜின் உடன் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டமும் (Mild Hybrid System) கொடுக்கப்பட்டுள்ளது. பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை வெறும் 5.4 வினாடிகளில் எட்டி விடக்கூடிய திறனை இந்த கார் பெற்றுள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் ஸ்பீடு மணிக்கு 250 கிலோ மீட்டர்கள் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் காரானது, இந்திய திரையுலக நட்சத்திரங்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வருகிறது. மலையாள நடிகர் துல்கர் சல்மான் (Dulquer Salmaan) உள்பட பலரும் பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் காரை வைத்துள்ளனர். இந்த வரிசையில்தான் தனுசும், பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் கார் உரிமையாளர்களின் பட்டியலில் இணைந்துள்ளார்.

More from DriveSpark

Article Published On: Wednesday, November 22, 2023, 16:54 [IST]
English summary
Dhanush buys bmw 7 series viral video all details here
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+