தனுஷின் கேரவனுக்கு முறையற்ற வகையில் மின்சார இணைப்பு: அபராதம் விதித்த மின்சார வாரியம்..!!

Written By:

தேனியில் முன் அனுமதியின்றி பொதுவழி மின்சாரத்தை கேரவனுக்கு பயன்படுத்தியதாக கூறி நடிகர் தனுஷ் மீது மின்சார வாரியம் அபராதம் விதித்துள்ளது.

தனுஷ் கேரவனுக்கு மின்சார வாரியம் அபராதம்..!!

ஆடி பெருக்கை முன்னிட்டு குலதெய்வ வழிபாட்டிற்காக நடிகர் தனுஷ் தன் மனைவி ஐஸ்வர்யா, மகன்கள் மற்றும் அம்மா, அப்பா, சகோதிரிகள் ஆகியோருடன் தேனி சென்றிருந்தார்.

தனுஷ் கேரவனுக்கு மின்சார வாரியம் அபராதம்..!!

அதற்காக முத்துரெங்கபுரம் என்ற ஊருக்கு வந்த தனுஷ் குடும்பத்தினர், அங்குள்ள அவர்களது குலதெய்வதிற்காக வழிபாடு நடத்தினர்.

தனுஷ் கேரவனுக்கு மின்சார வாரியம் அபராதம்..!!

தனுஷ் குடும்பத்தாரின் வசதிக்காக, ஏ.சி வசதியுடன் கூடிய கேரவன் ஒன்றும் அவர்களுடன் அந்த கோயிலில் நின்றது.

தனுஷ் கேரவனுக்கு மின்சார வாரியம் அபராதம்..!!

இதற்கான மின்சாரம் எங்கே இருந்து வருகிறது என்பதை ஆராய்ந்த அப்பகுதி ஊர்மக்கள், ஊர் பொது மின் கம்பத்தில் இருந்து கேரவனுக்கு மின்சாரம் வருவதை கண்டறிந்தனர்.

Recommended Video - Watch Now!
Jeep Compass Full Details In Tamil - DriveSpark தமிழ்
தனுஷ் கேரவனுக்கு மின்சார வாரியம் அபராதம்..!!

தனுஷ் குடும்பத்தினர் முத்துரெங்கபுரம் கோவிலுக்கு வருவதற்கு முன்பே, காலை எட்டு மணி முதல் கேரவனுக்கான மின்சார பொது மின்கம்பத்தில் இருந்து எடுக்கப்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

தனுஷ் கேரவனுக்கு மின்சார வாரியம் அபராதம்..!!

கேரவனுக்கு முறையற்ற வகையில் மின்சாரம் பயன்படுத்தப்பட்ட செய்தியை கேட்ட அப்பகுதியின் தெற்கு மண்டல உதவி பொறியாளர் ராஜேஷ் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார்.

தனுஷ் கேரவனுக்கு மின்சார வாரியம் அபராதம்..!!

அதில் தனுஷின் கேரவனுக்காக காலை எட்டு மணி முதல் மதியம் மூன்று மணி வரை முத்துரெங்கபுரம் ஊரின் பொதுமின்கம்பத்தின் இருந்த்து மின்சாரம் முறையின்றி எடுக்கப்பட்டதை உறுதி செய்தார்.

தனுஷ் கேரவனுக்கு மின்சார வாரியம் அபராதம்..!!

இதனால், 7 ஆயிரம் வாட்ஸ் மின்சாரம் முறையின்றி பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறி, அபராதம் விதிக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.

தனுஷ் கேரவனுக்கு மின்சார வாரியம் அபராதம்..!!

அதன் படி தற்போது தனுஷின் கேரவன் ஓட்டுநருக்கு ரூ.15,670 அபராதம் விதித்து, மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது.

தனுஷ் கேரவனுக்கு மின்சார வாரியம் அபராதம்..!!

இந்த விவகாரம் அதிகாரிகள் பார்வைக்கு கொண்டு செல்லும் முன்னரே, நடிகர் தனுஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் முத்துரெங்கபுரத்தில் இருந்து கிளம்பிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Read in Tamil: Dhanush gets Penalty for using Illegal Current Connection For Caravan. Click for Details...
Story first published: Friday, August 4, 2017, 14:02 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark