நடிகர் தனுஷை வைத்து படம் எடுத்தவர் இன்று விலையுயர்ந்த காரில்!! ஷோரூமுக்கு குடும்பத்துடன் போய்ட்டாரு!
தனுஷ் (Dhanush) நடித்த மாரி திரைப்படத்தின் தயாரிப்பாளர் புதியதாக விலையுயர்ந்த மினி காரை வாங்கி உள்ளார். குடும்பத்துடன் அவர் புதிய காரை டெலிவிரி பெறும்போது எடுக்கப்பட்ட வீடியோ இன்ஸ்டாகிராமில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. யார் அந்த தயாரிப்பாளர்? அவர் வாங்கியுள்ள மினி காரின் சிறப்பம்சங்கள் என்னென்ன? என்பதை இனி பார்க்கலாம்.
சினிமா நடிகர், நடிகைகள் புதியதாக கார் வாங்கினாலே அது சமூக வலைத்தளங்களில் வைரலாகி விடுகிறது. ஏனெனில், அந்த அளவிற்கு விலையுயர்ந்த லக்சரி கார்களையே அவர்கள் வாங்குகின்றனர். லக்சரி கார் & பைக்குகளை வாங்கிய சினிமா பிரபலங்கள் பலரை பற்றி இதற்கு முன் நமது செய்தித்தளத்தில் பார்த்துள்ளோம்.

அந்த வரிசையில், பிரபல மலையாள திரைப்பட தயாரிப்பாளர் லிஸ்டின் ஸ்டீபன் (Listin Stephen) புதியதாக விலையுயர்ந்த மினி கார் ஒன்றை வாங்கியுள்ளார். 2011ஆம் ஆண்டில் மோலிவுட்டில் டிராஃபிக் என்கிற ஹிட் படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகிய லிஸ்டின் ஸ்டீபன், அதே படத்தை தமிழில் சென்னையில் ஒருநாள் என்கிற பெயரில் எடுத்து கோலிவுட்டிலும் தன்னை அறிமுகப்படுத்தி கொண்டார்.
அதன்பின், நடிகர் சரத்குமாரின் சண்டமாருதம், தனுஷின் மாரி மற்றும் விக்ரம் பிரபுவின் இது என்ன மாயம் உள்ளிட்ட தமிழ் படங்களை தயாரித்தாலும், மலையாளத்தில் தான் நிறைய திரைப்படங்களை இவர் தயாரித்துள்ளார், தொடர்ந்து தயாரித்தும் வருகிறார். லிஸ்டின் ஸ்டீபனின் மேஜிக் ஃப்ரேம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து அடுத்ததாக நடிகர்கள் நிவின் பாலி மற்றும் டோவினோ தாமஸின் திரைப்படங்கள் திரைக்குவர உள்ளன.

இதற்கிடையில்தான், தயாரிப்பாளர் லிஸ்டின் ஸ்டீபன் புதியதாக விலையுயர்ந்த மினி கார் ஒன்றை வாங்கி உள்ளார். இவர் வாங்கியிருப்பது மினி நிறுவனத்தின் கூப்பர் எஸ் டிராக் எடிசன் கார் ஆகும். குடும்பத்துடன் வந்து மினி காரை லிஸ்டின் ஸ்டீபன் டெலிவிரி எடுக்கும் வீடியோவை சம்பந்தப்பட்ட மினி கார் ஷோரூம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
மினி கூப்பர் காரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், இது சொகுசு கார்களின் இராணி என அழைக்கப்படுகிறது. இத்தகைய காரின் எஸ் டிராக் எடிசனை லிஸ்டின் ஸ்டீபன் வாங்கியுள்ளார். பொதுவாகவே, மினி கார்கள் அளவில் சிறியதாக, நிறைய பேர் பயணிக்க முடியாததாக உள்ளன. இருப்பினும், மினி கார்களின் இத்தகைய உடலமைப்புக்காகவே நிறைய பேர் மினி கார்களை வாங்குகின்றனர். குறிப்பாக, மலையாள சினிமா உலகில் துல்கர் சல்மான் போன்ற முன்னணி நடிகர்கள் கூட மினி கார்களை வாங்கியுள்ளனர்.

இந்தியாவில் தற்சமயம் மினி கூப்பர் எஸ் டிராக் எடிசன் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.42.70 லட்சமாக உள்ளது. கொச்சியில் இந்த காரின் ஆன்-ரோடு விலை ரூ.54.40 லட்சம் என்கிற அளவில் உள்ளது. இவ்வளவு காசு கொடுத்து வாங்கும் இந்த மினி காரில் 3-கதவுகள் மட்டுமே கொடுக்கப்படுகின்றன. மினி கூப்பர் எஸ் கார் இந்தியாவில் 2021ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த அளவில்-சிறிய லக்சரி ஹேட்ச்பேக் கார் முழுவதுமாக வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்டு, இந்தியாவில் சிபியூ முறையில் விற்பனை செய்யப்படுகிறது. மினி கூப்பர் எஸ் காரில் அளவில் பெரியதான பம்பர்கள், கருப்பு நிறத்தில் ஃபினிஷ் செய்யப்பட்ட முன்பக்க கிரில், பாடி டிகால்ஸ் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. காரின் அளவு சிறியதாக இருப்பினும், மினி கூப்பர் எஸ் காரில் பெரிய 18-இன்ச் அலாய் சக்கரங்கள் பொருத்தப்படுகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மினி கார்களை வாங்குவது மலையாள சினிமா உலகில் ஒரு டிரெண்ட் ஆக மாறி வருகிறது. மினி காரை வாங்கினாலும், நிச்சயமாக உங்களிடம் வேறொரு சொகுசு காரும் இருக்க வேண்டியது அவசியமாகும். ஏனெனில், அனைத்து விதமான பயணங்களுக்கும் உங்களால் மினி காரை பயன்படுத்த முடியாது. லிஸ்டின் ஸ்டீபனிடம் ஏற்கனவே மெர்சிடிஸ்-பென்ஸ் மற்றும் லேண்ட் ரோவர் கார்கள் உள்ளன.


Click it and Unblock the Notifications









