சென்னையில் சுற்றும் 10 கோடி ரூபா கார் அந்த நடிகரோடதா? பாக்க ஒல்லியா இருந்தாலும் 3 ஆயிரம் கிலோ காரை ஓட்றாரு!

சமூக வலை தளங்களில் தற்போது வைரல் வீடியோ (Viral Video) ஒன்று வேகமாக பரவி வருகிறது. இந்த வைரல் வீடியோவில், சென்னை (Chennai) நகரின் சாலைகளில், மிகவும் விலை உயர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் (Rolls Royce Spectre) கார் ஒன்று உலாவி கொண்டிருப்பதை நம்மால் காண முடிகிறது. இந்த காரின் எக்ஸ்-ஷோரூம் விலையே (Ex-showroom Price) 7.50 கோடி ரூபாய் வருகிறது. இந்த கார் மிகவும் விலை உயர்ந்தது என்பதுடன், இதற்கு மற்றொரு சிறப்பம்சமும் இருக்கிறது.

இதுதான் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் (Rolls Royce's First Electric Car) ஆகும். உலகின் பல்வேறு கார் நிறுவனங்களும் தற்போது தொடர்ச்சியாக எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்து வருகின்றன என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான்.

Dhanush s Rolls Royce Spectre Spotted In Chennai

இந்த வரிசையில் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள முதல் எலெக்ட்ரிக் கார்தான் ஸ்பெக்டர். மிகவும் விலை உயர்ந்தது மற்றும் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் போன்ற பெருமைகளை எல்லாம் கொண்டிருப்பதால், சென்னை மக்கள் இந்த ஸ்பெக்டர் காரை ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.

சென்னையை சேர்ந்த பாஷ்யம் கன்ஸ்ட்ரக்ஸன்ஸ் (Baashyaam Constructions) நிறுவனத்தின் பாஷ்யம் யுவராஜிடம் (Baashyaam Yuvaraj) ஏற்கனவே ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் கார் உள்ளது. எனவே இது அவருடைய காராக இருக்கலாம் என பலரும் நினைத்து கொண்டுள்ளனர். ஆனால் அது இவருடைய கார் கிடையாது.

Rolls Royce Spectre

உண்மையில் இது நடிகர் தனுசுக்கு (Dhanush) சொந்தமான கார் ஆகும். சென்னை சாலைகளில் சுற்றி வரும் ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் கார் நடிகர் தனுசுக்கு சொந்தமானது என தற்போது வைரலாக பரவி வரும் வீடியோவிலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது. வெகு சமீபத்தில்தான் நடிகர் தனுஷ் இந்த காரை டெலிவரி பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகர் தனுசின் கார் கலெக்ஸன் (Car Collection) ஏற்கனவே பெரியதாகதான் உள்ளது. ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் (Rolls Royce Ghost), பென்ட்லீ கான்டினென்டல் ஃபிளையிங் ஸ்பர் (Bentley Continental Flying Spur), ஃபோர்டு மஸ்டங் ஜிடி (Ford Mustang GT) மற்றும் பிஎம்டபிள்யூ 7-சீரிஸ் (BMW 7-Series) உள்ளிட்ட கார்களை எல்லாம் தனுஷ் வைத்துள்ளார்.

இந்த வரிசையில் அவரது வீட்டிற்கு தற்போது வந்திருப்பதுதான் ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர். இந்த காரில் பொருத்தப்பட்டிருப்பது, 102 kWh பேட்டரி ஆகும். இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 530 கிலோ மீட்டர்கள் வரை பயணம் செய்ய முடியும். இது ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படும் டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) ஆகும்.

ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் காரின் எடை சுமார் 3 டன்கள் ஆகும். அதாவது 3 ஆயிரம் கிலோ. இவ்வளவு அதிக எடை கொண்டதாக இருந்தாலும் கூட, பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை வெறும் 4.5 வினாடிகளில் எட்டி வடும் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: நடிகர் தனுசுடைய வளர்ச்சியின் ஒரு அங்கமாக, ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் காரை கருதலாம். நடிகர் தனுஷ் புதிதாக நடிக்க வந்த சமயத்தில், உருவ கேலிகளுக்கு ஆளானவர். ஆனால் அதை எல்லாம் பொருட்படுத்தாமல், திரைத்துறையில் தனி முத்திரையை அவர் பதித்துள்ளார். இதன் காரணமாகவே அவரால் இவ்வளவு விலை உயர்ந்த கார்களை எல்லாம் வாங்க முடிகிறது.

நடிகர் தனுஷ் வாங்கியுள்ள ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை 7.50 கோடி ரூபாயாக இருந்தாலும் கூட, அதன் ஆன்-ரோடு விலை (On-Road Price) சுமார் 10 கோடி ரூபாய் வரும் என நாங்கள் கருதுகிறோம். அவர் தனது விருப்பத்திற்கு ஏற்ப ஒரு சில மாற்றங்களை செய்திருக்கலாம். எனவே இதன் மொத்த மதிப்பு சுமார் 10 கோடி ரூபாய் என்ற அளவில் இருக்கலாம்.

இங்கே மற்றொரு விஷயத்தையும் நாங்கள் கண்டிப்பாக குறிப்பிட வேண்டும். ரோல்ஸ் ராய்ஸ் கார்களை பற்றி மக்கள் மத்தியில் பல்வேறு கட்டுக்கதைகள் உலாவி கொண்டுள்ளன. எவ்வளவு பணம் இருந்தாலும், ஒரு சிலரால் ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்க முடியாது என்பதுதான் அந்த கட்டுக்கதை.

அதாவது பரம்பரை பரம்பரையாக கோடீஸ்வரர்களாக உள்ளவர்களுக்கு மட்டுமே ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் விற்பனை செய்யப்படும் என ஒரு சிலர் நம்புகின்றனர். ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் காரை விற்பனை செய்வதற்கு முன்னால், அவர்களின் வரலாற்றை ஆய்வு செய்யும் என்பதும் மக்களின் நம்பிக்கையாக உள்ளது.

இதன்படி தனுசின் வரலாற்றை ஆய்வு செய்த பின், அவருக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் மறுக்கப்பட்டது என்ற ஒரு கட்டுக்கதை மக்கள் மத்தியில் உள்ளது. ஆனால் இவை எதுவுமே உண்மை கிடையாது. போதுமான பணம் இருந்தால், யார் வேண்டுமானாலும் ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்க முடியும் என்பதே உண்மை. நடிகர் தனுஷ் ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் காரை வாங்கியிருப்பதன் மூலம், அந்த உண்மை அழுத்தம் திருத்தமாக மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, January 15, 2025, 16:50 [IST]
English summary
Dhanushs rolls royce spectre spotted in chennai viral video
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+