இராணுவ உடையில் எம்.எஸ் தோனி... பக்கா மிலிட்டரி மேனாக மாறிவிட்டார்!! அவர் வந்த காரோட விலை எவ்வளவு தெரியுமா?

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி விலையுயர்ந்த லேண்ட் ரோவர் டிஃபெண்டர் காரில் காட்சி தந்துள்ளார். எம்.எஸ் தோனி கார் & பைக்குகளில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் என்பது நமக்கு தெரிந்த விஷயமே. இதற்கு தோனியிடம் உள்ள லக்சரி கார்கள் & பைக்குகள் தான் சாட்சியாகும். தோனியை ஒரே கார் அல்லது பைக்கில் மீண்டும் மீண்டும் பார்ப்பது அரிதான விஷயமாகும். ஏனெனில், அந்த அளவிற்கு ஒவ்வொரு முறையும் புது, புது வாகனங்களில் காட்சி தருவார்.

இந்த வகையில், தற்போது லேண்ட் ரோவர் டிஃபெண்டர் காரில் தோனி காட்சி தந்துள்ளார். மும்பை விமான நிலையத்திற்கு வந்த எம்.எஸ் தோனி விலையுயர்ந்த லேண்ட் ரோவர் டிஃபெண்டர் காரில் வந்திறங்கினார். ஆனால், இது தோனி வாங்கிய கார் கிடையாது. வேறொருவர் உடைய காரை தோனி பயன்படுத்தி உள்ளார். ஏனெனில், பொதுவாகவே தான் பயணிக்கும் வாகனத்தை தான் ஓட்டவே எம்.எஸ் தோனி பெரும்பாலும் விரும்புவார்.

dhoni in land rover defender

ஆனால், மும்பை நிலையத்திற்கு இந்த டிஃபெண்டர் காரை தோனி ஓட்டிவரவில்லை. அதுமட்டுமின்றி, காரின் பின் இருக்கைகளில் வேறு சிலர் அமர்ந்திருந்தனர். இதனையடுத்து, காரின் நம்பர் பிளேட்டை வைத்து ஆராய்ந்து பார்த்ததில், இந்த டிஃபெண்டர் கார் தோனிக்கு சொந்தமானது கிடையாது. ஏஒஎன் இந்தியா இன்ஸ்சூரன்ஸ் பிரோகர்ஸ் என்கிற தனியார் நிறுவனத்திற்கு சொந்தமானது ஆகும்.

காரை விட்டு இறங்கியதும் தனது பாஸ்போர்ட்டை எடுத்துக் கொண்டு தோனி வேக வேகமாக செல்வதை இதுதொடர்பாக இணையத்தில் வெளியாகியுள்ள வீடியோவில் காணலாம். தோனி பயணம் செய்தது லேண்ட் ரோவர் டிஃபெண்டர் 110 கார் ஆகும். இந்தியாவில் 90, 110 மற்றும் 130 என மூன்று விதமான வெர்சன்களில் டிஃபெண்டர் கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன. தோனி இந்த பயணத்திற்கு பயன்படுத்தியுள்ள டிஃபெண்டர் கார் பன்கேயா பச்சை நிறத்தில் உள்ளது.

dhoni in land rover defender

எம்.எஸ் தோனியிடம் இரு பழமையான லேண்ட் ரோவர் கார்கள் உள்ளன. இதில் டிஃபெண்டர் 110 கார் ஆனது கான் எக்ஸ்-லேண்டர் கிரில் உடன் கஸ்டமைஸ் செய்யப்பட்டதாக உள்ளது. இந்த வாகனத்தில் ரோவர் வி8 கார்புரேட்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. பிரபலமான ஜெனரல் மோட்டார்ஸின் புயிக் வி8 என்ஜின் டிசைனின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்த வி8 என்ஜின் ஆனது அதிகப்பட்சமாக 130 பிஎச்பி வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

இந்த கிளாசிக் டிஃபெண்டர் 110 கார் உடன் லேண்ட் ரோவர் சீரிஸ் ஸ்டேஷன் வேகன் என்கிற பழமையான லேண்ட் ரோவர் காரையும் தோனி வைத்துள்ளார். இது 1971ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது ஆகும். இதனை பிக் பாய் டாய்ஸ் என்கிற ஆன்லைன் ஏலம் மூலமாக தோனி வாங்கினார். 1971ஆம் ஆண்டில் இருந்து 1985ஆம் ஆண்டு வரையில் உற்பத்தி செய்யப்பட்ட லேண்ட் ரோவர் சீரிஸ் ஸ்டேஷன் வேகன் கார் மஞ்சள் நிறத்தில் தோனியிடம் உள்ளது.

dhoni in land rover defender

இந்த லேண்ட் ரோவர் கார்கள் மட்டுமின்றி, விற்பனையில் இவற்றிற்கு போட்டியாக விளங்கிய வேறு கார் பிராண்ட்களின் பழமையான கார்களையும் தோனி வைத்துள்ளார். இந்த வகையில் இவரிடம் நிஸான் ஜோங்கா 1-டன் வாகனம் உள்ளது. பட்டி, டிங்கரிங் பார்த்து இது தற்போதைய காலத்திற்கு ஏற்றவாறு முழுவதுமாக மாற்றப்பட்டதாக உள்ளது. தோனியிடம் இந்த நிஸான் வாகனம் பச்சை நிறத்தில் உள்ளது.

ராஞ்சி சாலைகளில் நிஸான் ஜோங்கா வாகனத்தை தோனி பலமுறை ஓட்டி சென்றுள்ளார். இந்திய முன்னாள் கேப்டன் எம்.எஸ் தோனியிடம் ரூ.3.5 கோடி மதிப்பிலான மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி63 ஏஎம்ஜி லக்சரி எஸ்யூவி கார் ஒன்றும் உள்ளது. இதனை மேக்னடைட் கருப்பு நிறத்தில் தோனி வைத்துள்ளார். மேலும், இந்த பென்ஸ் காருக்கு '0007' என்கிற ஃபேன்ஸி நம்பர் பிளேட்டை தோனி பொருத்தியுள்ளார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மும்பை விமான நிலையத்தில் விமானத்தை பிடிக்க வேறொருவரது டிஃபெண்டர் காரில் எம்.எஸ் தோனி பயணம் செய்து வந்துள்ளார். இவ்வாறு மற்றவர்களின் வாகனங்களை தோனி பயன்படுத்துவதை கடந்த காலங்களில் சிலமுறை பார்த்துள்ளோம். சிலரது வாகனங்களை விருப்பப்பட்டு தோனி ஓட்டியும் உள்ளார். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின் தான் ஈட்டிய பணத்தை தோனி பல்வேறு விதமான தொழில்களில் முதலீடு செய்ய முனைப்பு காட்டி வருகிறார்.

More from DriveSpark

Article Published On: Thursday, August 1, 2024, 11:53 [IST]
English summary
Dhoni arrived mumbai airport in land rover defender 110 check all details here
மேலும்... #off beat #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X