இவர் பின்னாடி உக்காந்து போறதுக்குலாம் குடுத்து வெச்சிருக்கணும்! கை பட்டதும் சாதாரண பைக் விலை எங்கயோ போயிருச்சு
அறிமுகமே தேவையில்லை என்னும் அளவிற்கு இந்தியா முழுக்க மிகவும் பிரபலமாக உள்ள ஒரு கிரிக்கெட் வீரர் எம்எஸ் டோனி (MS Dhoni). டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் எம்எஸ் டோனியை பற்றிய செய்திகளை நீங்கள் அதிகமாக படித்திருக்கலாம். அவர் மிகவும் தீவிரமான வாகன காதலர் என்பதுதான் அதற்கு காரணம். டோனியிடம் விலை மதிப்பு மிக்க ஏராளமான வாகனங்கள் உள்ளன. மிகவும் அரிதான கார் மற்றும் பைக்குகளையும் கூட எம்எஸ் டோனி வைத்துள்ளார். எம்எஸ் டோனி தீவிரமான வாகன காதலர் என்பதால், அவரது ரசிகர்கள் தற்போது ஒரு விஷயத்தை தொடர்ச்சியாக செய்து வருகின்றனர்.
தாங்கள் புதிதாக வாங்கும் வாகனங்களை எம்எஸ் டோனியிடம் காட்டி, அவரது ஆட்டோகிராஃப்பை வாங்குவதுதான் அந்த விஷயம். கடந்த காலங்களில் ஏராளமான கார் மற்றும் பைக்குகளின் உரிமையாளர்கள், எம்எஸ் டோனியின் ஆட்டோகிராஃப்பை வாங்கியுள்ளனர். இதே போன்றதொரு சம்பவம் தற்போது மீண்டும் ஒரு முறை அரங்கேறியுள்ளது.

கிருஷ்ணகாந்த் குப்தா என்பவரின் இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தில் தற்போது வைரல் வீடியோ (Viral Video) ஒன்று பதிவிடப்பட்டுள்ளது. இந்த வைரல் வீடியோவில், எம்எஸ் டோனியின் ரசிகர் ஒருவர், தான் புதிதாக வாங்கியுள்ள ராயல் என்பீல்டு கிளாசிக் 350 (Royal Enfield Classic 350) பைக்கில், எம்எஸ் டோனியின் ஆட்டோகிராஃப்பை வாங்குவதை நம்மால் பார்க்க முடிகிறது.
இந்த வீடியோ முழுக்க எம்எஸ் டோனி, சிரித்த முகத்துடனே காணப்படுகிறார். ஆட்டோகிராஃப் போடும்போது, பைக்கின் பெட்ரோல் டேங்க்கை அவர் தன் கைகளாலேயே சுத்தம் செய்கிறார். அத்துடன் ஆட்டோகிராஃப் போட்டு முடித்ததும், அந்த ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கை எடுத்து கொண்டு டோனி ஒரு ரவுண்டு சென்றும் வந்தார்.

ஆனால் ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கை ஓட்டும்போது, எம்எஸ் டோனி ஹெல்மெட் அணியவில்லை. அவர் பைக் ஓட்டியது ஒரு தனியார் இடம் ஆகும். அதன் காரணமாக எம்எஸ் டோனி ஹெல்மெட் அணியாமல் இருந்திருக்கலாம். இந்த பைக்கை எம்எஸ் டோனியின் ரசிகர் புதிதாக வாங்கியுள்ளார்.
இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கின் ஆரம்ப விலை 1.93 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இந்த பைக்கின் டாப் வேரியண்ட்டின் விலை 2.30 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.
ஆனால் எம்எஸ் டோனி ஆட்டோகிராஃப் போட்டுள்ளதால், தற்போது இந்த ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கின் மதிப்பு பல மடங்கு உயர்ந்திருக்கும். இந்த பைக் மட்டும் விற்பனைக்கு வந்தால், உண்மையான விலையை விட, பல லட்ச ரூபாய் அதிகமாக கொடுத்து வாங்குவதற்கு கூட பலர் தயாராக இருப்பார்கள்.
ஆனால் எம்எஸ் டோனி ஆட்டோகிராஃப் போட்டுள்ள இந்த பைக்கை, அதன் உரிமையாளர் விற்பனை செய்வாரா? என்பது கண்டிப்பாக சந்தேகம்தான். இன்னும் சொல்லப்போனால் அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை எனலாம். எம்எஸ் டோனியின் ஆட்டோகிராஃப் மட்டுமல்லாது, இந்த பைக்கின் உரிமையாளருக்கு மற்றொரு அதிர்ஷ்டமும் அடித்துள்ளது.
எம்எஸ் டோனியுடன் பைக்கில் அமர்ந்து சவாரி செய்யும் வாய்ப்புதான் அது. ஆம், எம்எஸ் டோனி ஆட்டோகிராஃப் போட்டு முடித்ததும், அந்த பைக்கை எடுத்து கொண்டு ஒரு ரைடு சென்றார் அல்லவா? அப்போது அந்த பைக்கின் உரிமையாளரையும் எம்எஸ் டோனி தன்னுடன் அழைத்து சென்றார். ரசிகரின் ஆசையை நிறைவேற்றிய இந்த செயலுக்காக எம்எஸ் டோனிக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்தியாவில் ஒரு சில பிரபலங்கள் மட்டுமே தங்கள் ரசிகர்களின் வாகனங்களில் ஆட்டோகிராஃப் போட்டு கொடுக்கின்றனர். இதில், எம்எஸ் டோனி ஒருவர். இதே போல் பிரபல நடிகர் ஜான் ஆபிரஹாமும் (John Abraham) கூட தன் ரசிகர்களின் வாகனங்களுக்கு ஆட்டோகிராஃப் போட்டு தருகிறார். அவரும் தீவிரமான வாகன காதலர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








