தோனியிடம் உள்ள பைக், கார்கள் லிஸ்ட் இவ்வளவு பெருசா!! கார் ரேஸர்ஸ் கூட தோற்று போவார்கள்...

முன்னாள் இந்திய வீரரும், இந்திய கிரிக்கெட் அணிக்கு உலக கோப்பையை பெற்று தந்தவருமான மகேந்திர சிங் தோனியின் பிறந்த நாள் இன்று (ஜூலை 7). இத்தகைய பொன்னான இந்த நன்நாளில் எம்.எஸ் தோனியிடம் உள்ள பைக்குகள் மற்றும் கார்களை பற்றி பார்பது சரியாக இருக்கும் என நினைக்கிறேன். வாருங்கள் செய்திக்குள் போவோம்.

நார்டன் ஜூபிலி 250: தோனி கார்களை காட்டிலும் பைக்குகளை அதிகம் விரும்பக்கூடியவர். இவரிடம் ஐரோப்பியன் ஸ்டைல் நார்டன் ஜீபிலி 250 பைக் ஒன்று உள்ளது. தோனியிடம் உள்ள பழமையான விண்டேஜ் பைக்குகளுள் ஒன்றாக விளங்கும் இதனை தோனியின் நண்பர் சர்வீஸ் செய்து புத்துணர்ச்சியாக மாற்றி கொடுத்துள்ளார். இதற்காக நண்பரை பாராட்டி தோனி ஒரு பதிவை கூட சமூக வலைத்தளங்களில் பதிவிட்டது உங்களில் சிலருக்கு நினைவிருக்கலாம்.

ms dhonis bike & car collection

கவாஸாகி நிஞ்சா எச்2: தோனியிடம் பழமையான விண்டேஜ் பைக்குகளில் இருந்து லேட்டஸ்ட் மாடர்ன் பைக்குகள் வரையில் உள்ளன. தோனியிடம் உள்ள லேட்டஸ்ட் பைக்குகளுக்கு கவாஸாகி நிஞ்சா எச்2 ஓர் சிறந்த உதாரணம் ஆகும். அதுமட்டுமின்றி, இது விலையுயர்ந்த கவாஸாகி பைக் ஆகும். தோனியிடம் இருப்பது 2017ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட கவாஸாகி நிஞ்சா எச்2 ஆகும்.

ஜீப் கிராண்ட் செரோக்கி டிராக்ஹாவ்க்: மனைவி சாக்‌ஷி முன் இருக்கையில் அமர்ந்திருக்க, தோனி ஜீப் கிராண்ட் செரோக்கி டிராக்ஹாவ்க் காரை ஓட்டும் படத்தை கடந்த 2022ஆம் ஆண்டில் பார்த்திருப்பீர்கள். ஏனெனில் கடந்த 2022ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட செரோக்கி காரையே தோனி வாங்கி இருந்தார். கிராண்ட் செரோக்கி காரின் எக்ஸ்-ஷோரூம் விலை தற்சமயம் ரூ.80.50 லட்சம் என்ற அளவில் உள்ளது.

ms dhonis bike & car collection

மஹிந்திரா ஸ்கார்பியோ: இந்தியாவில் மிகவும் பிரபலமான எஸ்யூவி கார்களுள் ஸ்கார்பியோ ஒன்று. ஆனால் தோனியிடம் மஹிந்திரா ஸ்கார்பியோ கஸ்டமைஸ்ட் செய்யப்பட்டு உள்ளது. அதாவது, தோனியின் விருப்பத்திற்கு ஏற்ப சில மாற்றங்கள் ஸ்கார்பியோவில் செய்யப்பட்டு, அதனை தோனி பெற்றுள்ளார். இந்த காரை சர்வதேச கிரிக்கெட்டில் நுழைந்த ஆரம்பக்கால கட்டத்தில் தோனி வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

கான்ஃபேடெரேட் எக்ஸ்132 ஹெல்கட்: இப்படியொரு பெயரில் பைக்கை உங்களில் பலர் பார்த்திருக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன். ஆனால் இதனை தோனி வைத்துள்ளார். தோனி இத்தனை வருடங்களில் சேகரித்து வைத்ததில் மிகவும் அரிதான பைக் இது எனலாம். ஏனெனில் இந்த பைக் உலகளவில் வெறும் 150 யூனிட்கள் மட்டுமே உருவாக்கப்பட்டது. இந்த பைக்கை பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ் வைத்துள்ளார் என்பது கூடுதல் தகவல்.

ms dhonis bike & car collection

ரோல்ஸ்-ராய்ஸ் சிவர் வ்ரைத்-2 1980ஸ் எடிசன்: மகேந்திர சிங் தோனியிடம் அழகான நீல நிறத்திலான ரோல்ஸ்-ராய்ஸ் சிவர் வ்ரைத்-2 கார் உள்ளது. ரோல்ஸ்-ராய்ஸ் கார்கள் பல பிரபலங்களிடம் உள்ளன. ஆனால், இதில் என்ன சிறப்பு உள்ளது என கேட்டால், தோனியிடம் இருப்பது 1980ஆம் காலத்தில் உருவாக்கப்பட்ட ரோல்ஸ்-ராய்ஸ் கார் ஆகும்.

லேண்ட் ரோவர் 3 ஸ்டேஷன் வேகன் சீரிஸ்: தற்போதைய லேண்ட் ரோவர் கார்களை காட்டிலும் பழமையான லேண்ட் ரோவர் கார்கள் உலகம் முழுவதும் பிரபலமானவை. அத்தகைய பழமையான லேண்ட் ரோவர் கார்களில் ஒன்றாக, 1971ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட லேண்ட் ரோவர் 3 ஸ்டேஷன் வேகன் சீரிஸ் காரை தோனி வைத்துள்ளார். இந்த பழமையான லேண்ட் ரோவர் காரை தோனி ஓர் ஏலத்தில் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ms dhonis bike & car collection

நிஸான் ஜோங்கா: ஜப்பானிய ஸ்டைலில் உருவாக்கப்பட்ட ஆஃப்-ரோடு எஸ்யூவி வாகனம் இதுவாகும். இந்திய இராணுவத்திலும் கடந்த காலங்களில் பயன்படுத்தப்பட்ட இந்த வாகனத்தை தோனியும் வைத்துள்ளார். ஒருமுறை மகள் உடன் இணைந்து தனது நிஸான் ஜோங்கா வாகனத்தை தோனி சுத்தம் செய்யும் படங்கள் இணையத்தில் வைரலாகின. இந்த வாகனத்தை மற்றொரு கிரிக்கெட்டர் சூர்யகுமார் யாதவும் வைத்துள்ளார்.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: எம்.எஸ் தோனி கிரிக்கெட்டின் மீது பைத்தியம் போல் இருப்பார் என பலர் சொல்லி கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆனால் தோனி ஆட்டோமொபைல் வாகனங்கள் மீதும் அளவுக்கடந்த அன்பை கொண்டவர். குறிப்பாக, மோட்டார்சைக்கிள்களை இயக்குவது தோனிக்கு மிகவும் பிடித்தமான விஷயம். இதனாலேயே பொது வெளியில் பைக் ஓட்டும்போது தோனி பலமுறை அடையாளம் காணப்பட்டுள்ளார்.

Article Published On: Friday, July 7, 2023, 16:33 [IST]
English summary
Dhoni bike and car collections
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X