இந்த 1980ஸ் ரோல்ஸ்-ராய்ஸ் காரை உலகில் எங்கு தேடினாலும் பார்ப்பது கஷ்டம்!! தல தோனியிடம் இருக்கு - நம்பவே முடியல

ரோல்ஸ்-ராய்ஸ் (Rolls-Royce) கார்களுக்கு நீண்ட கால வரலாறு உள்ளது. எந்த அளவிற்கு என்றால், கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேல் ரோல்ஸ்-ராய்ஸ் கார்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், 1980களில் உருவாக்கப்பட்ட ரோல்ஸ்-ராய்ஸ் கார் ஒன்றை முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ் தோனி ராஞ்சியில் ஓட்டி செல்லும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஓர் ஆட்டோமொபைல் பிரியர் என்பது நம் அனைவருக்கும் நன்றாகவே தெரியும். சமீபத்தில் கூட, முன்னாள் இந்திய கிரிக்கெட் பந்து வீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத் மூலமாக தோனியின் கேரேஜின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி, பலரது கவனத்தை பெற்று இருந்தது.

dhoni drives rare rolls-royce

ஏனெனில் அந்த அளவிற்கு, அதிக எண்ணிக்கையில் பைக்குகளும், கார்களும் தோனியின் கேரேஜில் உள்ளன. இதனாலேயே பெரிய அளவிலான குடோனை கேரேஜாக தோனி பயன்படுத்தி வருகிறார். பைக்குகள் தான் தோனிக்கு மிகவும் பிடித்தவை. இருப்பினும், இவரிடம் பழமையான கிளாசிக் கார்களும் ஏகப்பட்டவை உள்ளன என்பதை வெங்கடேஷ் பிரசாத் டுவிட்டரில் வெளியிட்ட வீடியோவின் மூலம் அறிய முடிந்தது.

இந்த நிலையில், 1980ஆம் காலக்கட்டத்தில் தயாரிக்கப்பட்ட பழமையான கிளாசிக் ரோல்ஸ்-ராய்ஸ் கார் ஒன்றை சாலையில் எம்.எஸ் தோனி இயக்கி செல்லும் வீடியோ ஒன்று இன்ஸ்டாகிராம் வெளியாகி, தோனி ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. எம்.எஸ் தோனி வசிக்கும் பகுதியான ஜார்காண்ட் மாநிலத்தின் தலைநகர் ராஞ்சியில் இருந்து வெளியாகியுள்ள அந்த இன்ஸ்டாகிராம் வீடியோவை கீழே காணலாம்.

தோனியின் ரசிகர் ஒருவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோவில், பழைய ரோல்ஸ்-ராய்ஸ் கார் ஒன்றை தோனி வேகமாக சாலையில் ஓட்டிச் செல்வதையும், அந்த ரோல்ஸ்-ராய்ஸ் கார் நீல நிறத்தில் இருப்பதையும் காண முடிகிறது. காரின் மேற்கூரை, பில்லர்கள், வுட் மற்றும் பூட் பகுதிகள் இளம் நீல நிறத்திலும், காரின் மற்ற பகுதிகள் அடர் நீல நிறத்திலும் உள்ளன.

காருக்கு உள்ளே கேபின் ஆனது பழுப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. நிச்சயமாக, 1980களில் தயாரிக்கப்பட்ட கார் இவ்வாறான பளபளக்கும் தோற்றத்தில் தற்போது வரையில் இருக்க வாய்ப்பே இல்லை. ஆக, இந்த ரோல்ஸ்-ராய்ஸ் கார் சமீபத்தில்தான் சர்வீஸ் செய்யப்பட்டிருக்க வேண்டும். பழைய கிளாசிக் கார்களை சர்வீஸ் செய்து பயன்படுத்துவதை தோனி விரும்பக்கூடியவர். ஆகையால், இந்த ரோல்ஸ்-ராய்ஸ் காரையும் அவர் தான் சர்வீஸ் செய்திருக்கலாம்.

dhoni drives rare rolls-royce

இந்த வீடியோவில் எம்.எஸ் தோனி ஓட்டியிருப்பது ரோல்ஸ்-ராய்ஸ் சில்வர் வ்ரைத் 2 காரை ஆகும். ரோல்ஸ்-ராய்ஸ் சில்வர் வ்ரைத் பெயர் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் பிரபலமானது. இதனாலேயே சில்வர் வ்ரைத் 2 காரும் வடிவமைக்கப்பட்டு 1976ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. சில்வர் வ்ரைத் கார்கள் பொதுவாகவே அதிக நீளமானவை. மேலே பதிவிடப்பட்டுள்ள வீடியோவில் காரின் நீளத்தை பார்த்த பின்பு உங்களுக்கே தெரிந்திருக்கும்.

இருப்பினும், ரோல்ஸ்-ராய்ஸ் சில்வர் வ்ரைத் முதல் பதிப்பு கார் ஏற்படுத்திய தாக்கத்தை 2வது பதிப்பால் ஏற்படுத்த முடியவில்லை. இதனால் 1976இல் அறிமுகம் செய்யப்பட்ட சில்வர் வ்ரைத் 2 கார் 1980ஆம் ஆண்டு வரையில் மட்டும் உற்பத்தி செய்யப்பட்டது. 4 வருடங்கள் உற்பத்தி செய்யப்பட்டாலும், ரோல்ஸ்-ராய்ஸ் கார் என்பதால் மிகவும் குறைவான எண்ணிக்கையிலேயே சில்வர் வ்ரைத் 2 கார்கள் தயாரிக்கப்பட்டன. ஆனால் அதில் ஒரு கார் எம்.எஸ் தோனியிடம் உள்ளது.

dhoni drives rare rolls-royce

சமீபத்தில் வெங்கடேஷ் பிரசாத் வெளியிட்ட தோனியின் கேரேஜ் வீடியோவில் இந்த பழமையான ரோல்ஸ்-ராய்ஸ் காரை பார்க்க முடியவில்லை (ஒருவேளை எங்களது கண்களுக்கு புலப்படவில்லையா என தெரியவில்லை). ராஞ்சியில் இவ்வாறு தோனியை சில சமயங்களில் கிளாசிக் கார்களில் காண முடியும் என அங்கிருக்கும் மக்கள் தெரிவிக்கின்றனர். அவ்வாறு, ரோல்ஸ்-ராய்ஸ் காரில் தோனி வெளிவந்த போது இந்த வீடியோ எடுக்கப்பட்டு உள்ளது.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: பொதுவாகவே, பழமையான கார்கள் அதிக எரிபொருளை குடிக்கும். பழமையான & நீளமான ரோல்ஸ்-ராய்ஸ் கார் என்றால் எவ்வளவு குடிக்கும் என்று நீங்களே கற்பனை செய்து பாருங்கள். ஆனால் இவ்வாறான ஒரு காரை தோனி ஒரு சிறிய பயணத்திற்காக கூட பயன்படுத்தி இருக்கலாம். இவ்வாறான அரிதான ரோல்ஸ்-ராய்ஸ் காரை எல்லாம் பார்ப்பதே கடினம், ஆனால் இந்த மனிதர் சர்வ சாதாரணமாக பயன்படுத்தி வருகிறார்.

More from DriveSpark

Article Published On: Wednesday, July 26, 2023, 17:44 [IST]
English summary
Dhoni drives rare rolls royce silver wraith 2 car in ranchi
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X