என்னுடைய புதிய சூப்பர் பைக் இதுதான், கண்டுபிடிங்க பார்ப்போம்... புதிர்போட்டோ டோணி!
பைக்குகள் மீதான டோணியின் காதல் எல்லையற்று விரிந்துகொண்டே இருக்கிறது. உலகக்கோப்பை கிரிக்கெட்டை முடித்துக் கொண்டு ராஞ்சியில் சில நாட்களாக இருந்த டோணி பிஎஸ்ஏ மோட்டார்சைக்கிளில் வலம் வந்தது குறித்து ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இந்த நிலையில், அடுத்து ஒரு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார் டோணி.
டிவிட்டரில் அவர் சற்றுமுன் வெளியிட்டிருக்கும் ஒரு தகவலில், "இறுதியில் காத்திருப்பு முடிந்தது. புதிய பைக்கை வாங்கிவிட்டேன், ஆனால், அடுத்த இரு மாதங்களுக்கு பின்தான் இந்த பைக்கை ஓட்ட முடியும். சரி, இது என்ன பைக் கண்டுபிடியுங்கள் பார்ப்போம் என்று புதிரை போட்டு தனது புதிய சூப்பர்பைக்கின் படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கிறார்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தை பின்தொடர்பவர்கள், அது எந்த பைக் என்பதை உடனடியாக யூகித்திருப்பீர்கள். ஆம், அது எந்த பைக் என்னென்ன சிறப்புகள் என்பதை ஸ்லைடரில் காணலாம்.

லிமிடேட் எடிசன்
சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட இந்த புதிய கவாஸாகி பைக் மொத்தமாக 5 பைக்தான் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதில், ஒருவர் டோணி என்பது இப்போது உறுதியாகியுள்ளது.

சக்திவாய்ந்த எஞ்சின்
டோணி வாங்கியிருக்கும் புதிய பைக்கில் 197 பிஎச்பி சக்தியையும், 133.5 என்எம் டார்க்கையும் வழங்க வல்ல 4 சிலிண்டர் 998சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

குயிக்ஷிஃப்டர்
டோணி வாங்கியிருக்கும் புதிய சூப்பர் பைக்கின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று குயிக்ஷிஃப்டர் வசதி. பெரும்பாலும் ரேஸ் பைக்குகளில் தரப்படும் இந்த குயிக்ஷிஃப்டர் வசதி மூலம், கியரை மாற்றுவதற்கு கிளட்ச் மற்றும் ஆக்சிலேட்டரை தொடாமல் நேரடியாக மாற்ற முடியும்.

முன்புற அமைப்பு
இந்த பைக்கின் முகப்பு புரொஜெக்டர் ஹெட்லைட், பைலட் விளக்குகள் மற்றும் ஏர் இன்டேக் சிஸ்டத்துடன் ஹெட்லைட் ஹவுசிங் டிசைன் செய்யப்பட்டுள்ளது.

பாதுகாப்பு வசதிகள்
டோணியின் புதிய சூப்பர் பைக்கில் கிப்ஸ் ஏபிஎஸ், ட்ராக்ஷன் கன்ட்ரோல், ஸ்டீயரிங் டேம்பர் ஆகியவை உள்ளன. மிரர் கோட்டட் பிளாக் என்ற ஒரே வண்ணத்தில் மட்டுமே கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விலை
ரூ.29. லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் இந்த புதிய சூப்பர் பைக் விற்பனைக்கு வந்தது.

அது எந்த பைக்?
டோணி வாங்கியிருக்கும் புதிய பைக் நேற்றுமுன்தினம் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட புதிய கவாஸாகி நின்ஜா எச்2 சூப்பர் பைக்தான் அது. ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் துவங்கியிருப்பதால், இன்னும் இரு மாதங்களுக்கு இந்த பைக்கை ஓட்ட முடியாது என்று தனது ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications








