பாஜக நிர்வாகியின் பிராண்ட்-நியூ காருக்குள் ஏறி தோனி செய்த செயல்... காலத்துக்கும் இதை அவர் மறக்க மாட்டார்!

எம்.எஸ் தோனி (MS Dhoni), இந்திய முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர். உலக கோப்பையை பெற்றுதந்த முன்னாள் கேப்டன், சிஎஸ்கே (CSK) வீரர் என சொல்லிக்கொண்டே போகலாம். அதேநேரம், எம்.எஸ் தோனி மிக பெரிய ஆட்டோமொபைல் ரசிகர் (Automobile Fan) என்பது எல்லாருக்கும் தெரியும். குறிப்பாக, விலையுயர்ந்த பைக்குகளை மிகவும் விரும்பக்கூடியவர். அதேநேரம், கார்கள் மீதும் தோனிக்கு ஆர்வம் அதிகம். அதன் வெளிப்பாடாக, ரசிகர் வாங்கிய பிராண்ட்-நியூ மஹிந்திரா தார் ராக்ஸ் (Mahindra Thar ROXX) வாகனத்தில் கையெழுத்திட்டு தோனி பரவசப்படுத்தி உள்ளார்.

இந்தியாவின் முன்னணி கார் நிறுவனங்களுள் ஒன்றாக விளங்கும் மஹிந்திரா (Mahindra) சமீப காலத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்த கார்களுள் தார் ராக்ஸ் ஒன்றாகும். 2020ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட 3-கதவு தார் வாகனத்தின் 5-கதவு வெர்சனாக தார் ராக்ஸ் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தின்போது அறிமுகம் செய்யப்பட்டது.

dhoni put signature in thar

மஹிந்திரா தார் வாகனத்திற்கு ஏற்கனவே சிறப்பான வரவேற்பு கிடைத்துவந்ததால், எதிர்பார்த்தப்படி தார் ராக்ஸ் வாகனத்தையும் மக்கள் போட்டி போட்டுக் கொண்டு வாங்கி வருகின்றனர். அவ்வாறு இந்த மஹிந்திரா வாகனத்தை வாங்கிய முன்னாள் எம்.எல்.ஏ ஒருவர், அதனை கிரிக்கெட் வீரர் தோனியிடம் காண்பித்து அவரது ஆட்டோகிராபை பெற்றுள்ளார். அவரது பெயர், குணால் சாரங்கி (Kunal Sarangi).

2014ஆம் ஆண்டில் இருந்து 2019 வரையில் ஜார்காண்ட் மாநிலத்தின் பஹாராகோரா சட்டமன்ற தொகுதியின் உறுப்பினராக பதவி வகித்தவர். ஆரம்பத்தில் மாநில கட்சியான ஜார்காண்ட் முக்தி மோர்ச்சாவில் அங்கம் வகித்த குணால் சாரங்கி, அதன்பின் 2019இல் பாஜக-இல் இணைந்தார். இந்த நிலையில், குணால் சாரங்கி தனது இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தில் சில போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

dhoni put signature in thar

அவற்றில், எம்.எஸ் தோனி உடன் குணால் சாரங்கி இருக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதைவிட முக்கியமாக, குணால் சாரங்கியின் புதிய மஹிந்திரா தார் ராக்ஸ் வாகனத்தையும் பார்க்க முடிகிறது. அதாவது, ஜார்காண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் வசிக்கும் தோனி, எம்.எல்.ஏ குணால் சாரங்கியின் இருப்பிடத்திற்கு நேரில் சென்றுள்ளார். அப்போது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த குணால் சாரங்கியின் பிராண்ட்-நியூ தார் ராக்ஸ் வாகனத்தை பார்வையிட்டுள்ளார்.

பின்னர், வாகனத்திற்கு உள்ளே பின் இருக்கை வரிசையில், இருக்கைகளுக்கு மத்தியில் தனது கையொப்பத்தை போட்டுள்ளார். இதுதொடர்பான இன்ஸ்டாகிராம் பதிவில், தார் ராக்ஸ் போன்றதான வாகனத்தை உருவாக்கியதற்காக மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திராவை குறிப்பிட்டு குணால் சாரங்கி தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார். இவர் வாங்கியிருப்பது, சில்வர் கிரே நிறத்திலான தார் ராக்ஸ் வாகனம் ஆகும்.

dhoni put signature in thar

இது உள்பட மொத்தம் 7 விதமான கலர் ஆப்ஷன்களில் தார் ராக்ஸ் விற்பனை செய்யப்படுகிறது. குணால் சாரங்கியின் தார் ராக்ஸ் வாகனத்தில் பனோராமிக் சன்ரூஃப்-ஐ பார்க்க முடிகிறது. ஆதலால், இவர் வாங்கியிருப்பது தார் ராக்ஸின் டாப் வேரியண்ட் என்பதை அறிய முடிகிறது. 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் எம்ஹாவ்க் டீசல் என 2 விதமான என்ஜின் ஆப்ஷன்களில் தார் ராக்ஸ் விற்பனை செய்யப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பாஜக நிர்வாகி குணால் சாரங்கியும், எம்.எஸ் தோனியும் நெருங்கிய நண்பர்கள் போல தெரிகிறது. நண்பராக இருப்பினும், தோனி உலகளவில் பிரபலமான விஐபி என்பதால், அவரது ஆட்டோகிராஃப் எவரொருவருக்கும் ஸ்பெஷலே. இந்த தார் ராக்ஸ் வாகனம் அழிந்தாலும், தோனி கையொப்பமிட்டது குணால் சாரங்கியின் மனதில் காலத்திற்கும் நிற்கும்.

More from DriveSpark

Article Published On: Friday, January 24, 2025, 20:02 [IST]
English summary
Dhoni put his signature in former mlas brand new mahindra thar roxx
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X