அடுத்த ஐபிஎல் விளையாடுவாரா? மாட்டாரா? வீடியோல மெசேஜ் சொன்ன டோனி! மொத்த இந்தியாவும் இப்ப இதை பத்திதான் பேசுது!

2025ம் ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் (IPL) கிரிக்கெட் தொடர் பற்றிய பேச்சுக்கள் தற்போதே அனல் பறக்க தொடங்கி விட்டன. குறிப்பாக சிஎஸ்கே என்று சுருக்கமாக அழைக்கப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK - Chennai Super Kings) அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் டோனி (MS Dhoni) விளையாடுவாரா? மாட்டாரா? என ரசிகர்கள் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். தற்போதைய நிலையில் பார்த்தால், 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் எம்எஸ் டோனி விளையாடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பது போலவே தோன்றுகிறது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான புதிய விதிமுறைகள் (New Rules), சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. இந்த விதிமுறைகளின்படி பார்த்தால், எம்எஸ் டோனி விளையாடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். இது சிஎஸ்கே மற்றும் எம்எஸ் டோனியின் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

MS Dhoni

ஆனால் எம்எஸ் டோனி விளையாடுவாரா? என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. இது தொடர்பாக ரசிகர்கள் காரசாரமான விவாதங்களில் ஈடுபட்டு கொண்டுள்ள நிலையில், எம்எஸ் டோனியோ, தனக்கே உரிய பாணியில், கூலாக பைக் ஓட்டி கொண்டுள்ளார். சமூக வலை தளங்களில் தற்போது வைரல் வீடியோ (Viral Video) ஒன்று பரவி வருகிறது.

இந்த வைரல் வீடியோவில் டோனி கூலாக ஜாவா 2 ஸ்ட்ரோக் (Jawa 2 Stroke) பைக்கை ஓட்டி கொண்டிருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. இது ராஞ்சி (Ranchi) நகரில் உள்ள டோனியின் பண்ணை வீட்டில் எடுக்கப்பட்டிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வைரல் வீடியோவில், விண்டேஜ் கார் ஒன்றையும் நம்மால் காண முடிகிறது.

Dhoni Spotted Riding Jawa 2 Stroke

அது ஃபோக்ஸ்வேகன் பீட்லி (Volkswagen Beetle) ஆகும். எம்எஸ் டோனி, விண்டேஜ் வாகனங்களை அதிகமாக விரும்ப கூடியவர் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான். அவரிடம் ஏராளமான விண்டேஜ் வாகனங்கள் உள்ளன. எம்எஸ் டோனி இந்த விண்டேஜ் வாகனங்களை சேகரிப்பதுடன் நின்று விடாமல், அவ்வப்போது ஓட்டி கொண்டும் உள்ளார்.

கடந்த காலங்களில், அவர் விண்டேஜ் வாகனங்களை ஓட்டும் நிறைய வீடியோக்கள் வெளியாகி, வைரல் ஆகியுள்ளன. இந்த வரிசையில் தற்போது வெளியாகியுள்ள புதிய வீடியோவும், சமூக வலை தளங்களில் வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோவில் நாம் பார்க்கும் வாகனங்கள் தவிர, எம்எஸ் டோனியிடம் இன்னும் நிறைய வாகனங்கள் உள்ளன.

இதில், மினி மார்க் I (Mini Mark I), ரோல்ஸ் ராய்ஸ் சில்வர் வ்ரெய்த் II (Rolls-Royce Silver Wraith II), ஹம்மர் ஹெச்2 (Hummer H2), பழைய தலைமுறை லேண்ட் ரோவர் டிஃபெண்டர் 110 (Land Rover Defender 110), 1970 ஃபோர்டு மஸ்டங் (1970 Ford Mustang), யமஹா ஆர்டி 350 (Yamaha RD 350), கவாஸாகி நின்ஜா இஸட்எக்ஸ்-14ஆர் (Kawasaki Ninja ZX-14R) போன்றவை குறிப்பிடத்தக்கவை.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: நிலைமை எவ்வளவு மோசமாக இருந்தாலும், எம்எஸ் டோனி சாந்த சொரூபியாகவே காட்சியளிப்பார். அவர் படைத்த சாதனைகளுக்கு இது மிகவும் முக்கியமான காரணங்களில் ஒன்று. இரண்டாவதாக ஒரு காரணமும் உள்ளது. எம்எஸ் டோனி, தனது கவனத்தை சிதற விடுவதில்லை.

என்ன வேலை செய்கிறோமோ, அதில் மட்டுமே அவரின் கவனம் இருக்கும். கோடிக்கணக்கான ரசிகர்களின் கனவை சுமந்து கொண்டுள்ள கிரிக்கெட் வீரர் என்பதால் ஏற்படும் உச்சகட்ட அழுத்தங்களுக்கு எல்லாம் அவர் செவிமடுப்பதில்லை. தற்போது வைரலாக பரவி வரும் வீடியோ கூட அதற்கு ஒரு சான்றுதான்.

இந்தியா மட்டுமின்றி உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரின் கவனமும், எம்எஸ் டோனி மீது குவிந்திருக்க, அவர் எவ்வித பதற்றமும் இன்றி பைக் ஓட்டி கொண்டுள்ளார். அழுத்தங்களை எல்லாம் பொருட்படுத்தாமல், தேவையற்ற விஷயங்களை பற்றி விவாதித்து நேரத்தை விரயம் செய்யாமல், செய்யும் வேலையில் கவனமாக இருக்க வேண்டும் என ரசிகர்களுக்கு எம்எஸ் டோனி கூறிய மெசேஜ் என இந்த வீடியோவை புரிந்து கொள்ளலாம்.

More from DriveSpark

Article Published On: Monday, September 30, 2024, 20:33 [IST]
English summary
Dhoni spotted riding jawa 2 stroke bike viral video
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+