ஊரே வாங்க நினைக்கும் ஜாகுவார் காரில் சென்றது அவரா? நல்லா உத்து பாருங்க... யாருனு தெரியும்!!

மகேந்திர சிங் தோனி (Mahendra Singh Dhoni), இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் உலக கோப்பையை பெற்று தந்தவர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. கிரிக்கெட்டை தாண்டி தோனிக்கு கார் & பைக்குகள் என்றால் மிகவும் பிடித்தமான விஷயங்கள் ஆகும். இதனாலேயே தோனியின் கேரேஜில் பல விலையுயர்ந்த கார் & பைக்குகள் குவிந்து கிடக்கின்றன. அவ்வாறு, தன்னிடம் உள்ள விலையுயர்ந்த ஜாகுவார் (Jaguar) காரில் தோனி தற்போது வெளியில் காட்சி தந்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட படங்களும், வீடியோக்களும் இணையத்தில் கவனத்தை பெற்று வருகின்றன.

நடிகர் அஜித்குமாரை போன்று தொழில் ஒருபக்கம் இருந்தாலும், கார் & பைக்குகளை ஓட்டுவதில் மிகவும் ஆர்வமிக்கவர் எம்.எஸ் தோனி ஆவார். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டாலும், கார் & பைக்குகள் உடனான அவரது பிணைப்பை யாராலும் பிரிக்க முடியவில்லை. இன்னும் சொல்லப்போனால், கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதற்கு பிறகே தனது வாகனங்களில் தோனி அதிகமாக வெளியே தெரிய ஆரம்பித்தார்.

dhoni spotted with his jaguar

இதற்காகவே, ராஞ்சியில் எம்.எஸ் தோனி வசிக்கும் வீட்டிற்கு முன்பாக எப்போதும் ஒரு பெரிய கூட்டம் நிற்கிறது. தோனி வெளியே வரும் சமயத்தில் அவரை எப்படியாவது போட்டோ பிடித்து, தனது யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு பார்வையாளர்களை கவர வேண்டும் என்பதுதான் அத்தகையவர்களின் எண்ணமாக உள்ளது. அவ்வாறு சமீபத்தில் தோனி தனது விலையுயர்ந்த ஜாகுவார் காரில் வெளியே வந்த சமயத்தில் சுற்றியிருந்தவர்கள் போட்டோக்களையும், வீடியோக்களையும் எடுத்து குவித்துள்ளனர்.

அவற்றில் தோனி உடன் காட்சி தருவது, ஜாகுவார் எஃப்-டைப் (F-Type) என்கிற சூப்பர் கார் ஆகும். இதன் முக்கியமான சிறப்பம்சம் என்னவென்றால், இதில் வி8 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதனாலேயே இந்த காரை எஃப்-டைப் வி8 என அழைக்கின்றனர். இந்த ஜாகுவார் சூப்பர்காரை முற்றிலும் கருப்பு நிறத்தில் எம்.எஸ் தோனி வைத்துள்ளார்.

dhoni spotted with his jaguar

இதற்கேற்றவாறு, பளிச்சிடும் பச்சை நிறத்திலான டி-சர்ட்டில் தோனி காரை ஓட்டுவதை காணலாம். தோனியின் இந்த ஜாகுவார் காருக்கு உள்ளே பழுப்பு நிறத்தில் கேபின் உள்ளது. ஜாகுவார் எஃப்-டைப் காரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், எம்.எஸ் தோனி போன்ற உலகளவில் பிரபலமான விவிஐபி (VVIP)-கள் மட்டுமே இந்த காரை வைத்துள்ளனர்.

எஃப்-டைப் உள்பட இந்தியாவில் ஜாகுவார் கார்கள் டாடா மோட்டார்ஸ் (Tata Motors)-இன் கீழ் விற்பனை செய்யப்படுகின்றன. 12 வழிகளில் எலக்ட்ரிக் மூலமாக அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய மெமரி ஃபங்க்சனை கொண்ட முன் இருக்கைகள், ஆர் பிராண்டின் லெதர் ஸ்டேரிங் சக்கரம், க்ளோவ் பாக்ஸ் பொத்தான் போன்ற உயர்த்தரத்திலான மெட்டீரியல்களில் அதிநவீன தொழிற்நுட்பங்கள் உடன் ஜாகுவார் எஃப்-டைப் உருவாக்கப்படுகிறது.

dhoni spotted with his jaguar

காருக்குள் டேஸ்போர்டில் வழங்கப்படும் 12.3-இன்ச் இண்டர் ஆக்டிவ் டிரைவர் டிஸ்பிளே (Interactive Driver Display) ஆனது ஃபுல் 3டி மேப் (Full 3D Maps)-ஐ வழங்கக்கூடியதாக உள்ளது. இந்த ஜாகுவாரில் பவர்ஃபுல்லான 5.0 லிட்டர் வி8 என்ஜின் உடன் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. 0-இல் இருந்து 100kmph வேகத்தை வெறும் 3.7 வினாடிகளில் எட்டிவிடக்கூடிய இந்த காரின் டாப்-ஸ்பீடு மணிக்கு 300கிமீ ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கிரிக்கெட் வீரர் எம்.எஸ் தோனியிடம் பழமையான கிளாசிக் கார்களில் இருந்து, மாடர்ன் தரத்திலான கார்கள் வரையில் உள்ளன. அவ்வாறு தோனியிடம் உள்ள மாடர்ன் கார் தான் ஜாகுவார் எஃப்-டைப் வி8 ஆகும். இந்த கார் கர்நாடகா மாநில நம்பர் பிளேட்டை கொண்டிருப்பது கூடுதல் சிறப்பு ஆகும்.

More from DriveSpark

Article Published On: Monday, January 6, 2025, 17:31 [IST]
English summary
Dhoni spotted with his jaguar f type v8 supercar in ranchi
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X