“தோனி நான் பார்த்ததிலேயே வித்தியாசமான மனிதர்!!” - பைக் கேரேஜை பார்த்து வாயடைத்து போன முன்னாள் கிரிக்கெட் வீரர்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் பைக் கேரேஜை பார்வையிட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் பிரசாத் தோனியின் பைக் கலெக்‌ஷனை பார்த்து மலைத்து போய் உள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவை பற்றி இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய கிரிக்கெட் ஆண்கள் அணியின் முன்னாள் கேப்டனும், உலக கோப்பையை பெற்று தந்தவருமான மகேந்திர சிங் தோனி கிரிக்கெட்டை தாண்டி, ஆட்டோமொபைல் வாகனங்கள் மீதும் மிகுந்த ஆர்வத்தை கொண்டவர் என்பது நமக்கு தெரியும். பொது வெளியில் தோனி பல்வேறு சொகுசு பைக்குகளில் காட்சி தந்துள்ளார்.

dhoni with venkatesh prasad

சொகுசு பைக்குகள் என்று மட்டுமில்லை, பைக்குகள் என்றாலே தோனிக்கு பிடிக்கும். சில சமயங்களில் விலை குறைவான கிளாசிக் பைக்குகள் உடன் கூட தோனி காட்சி தந்துள்ளார். அத்துடன் முன்னாள் கேப்டனிடம் கார்களும் அதிக எண்ணிக்கையில் உள்ளன. இதனால் தோனியின் கேரேஜை ஒரு முறையாவது முழுமையாக பார்த்துவிட மாட்டோமா? என அவரது கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி, ஆட்டோமொபைல் பிரியர்களும் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

அவர்களுக்கு சரியான தீனியாக, முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் பந்து வீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத் சமீபத்தில் தோனியை ராஞ்சியில் உள்ள அவரது வீட்டில் சந்தித்துள்ளார். அத்துடன், தோனியின் கேரேஜிற்கு சென்ற அவர் அங்கிருந்து வீடியோ ஒன்றை பதிவு செய்து, தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றி உள்ளார்.

dhoni with venkatesh prasad

இதுகுறித்த வெங்கடேஷ் பிரசாத்தின் டுவிட்டர் பதிவில், "ஒரு நபரிடம் நான் பார்த்த பைத்தியக்கார உணர்வுகளில் ஒன்று. என்ன ஒரு கலெக்‌ஷன் மற்றும் என்ன ஒரு மனிதன் எம்.எஸ்.டி. ஒரு சிறந்த சாதனையாளர் மற்றும் இன்னும் நம்ப முடியாத நபர். இது அவரது ராஞ்சி வீட்டில் உள்ள பைக்குகள் மற்றும் கார்களின் சேகரிப்பின் ஒரு பார்வை. மனிதன் மற்றும் அவனது ஆர்வத்தால் கொண்டு செல்லப்படுகிறது" என குறிப்பிடப்பட்டுள்ளது.

109 வினாடிகள் ஓடக்கூடியதாக உள்ள இந்த டுவிட்டர் வீடியோவில் தோனியின் மனைவி சாக்‌ஷியை பற்றியும் பிரசாத் பேசியுள்ளார். வீடியோவில், "நான் என்ன சொல்ல வேண்டும்? முதல்முறையாக ராஞ்சியில் இருப்பது எப்படி உள்ளது?" என சாக்‌ஷி கேட்க, "அற்புதம்! ராஞ்சிக்கு வருவது முதல்முறை அல்ல, நான்காவது முறை. ஆனால் இந்த இடத்திற்கு (எம்.எஸ் தோனியின் பைக் கேரேஜ்) வருவது முதல்முறை.

வீடியோவில், "இது ஒரு பைக் ஷோரூமாக இருக்கலாம்" என்பதையும் ஹிந்தியில் தெரிவித்த வெங்கடேஷ் பிரசாத் நிச்சயமாக தோனியின் பைக் கேரேஜை தன் வாழ்நாளில் மறக்கவே மாட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் தோனியிடம் பைக்குகள் என்று மட்டுமே சுமார் 50 பைக்குகள் உள்ளன. இதனை தோனியே தனது முந்தைய பேட்டி ஒன்றில் தெரிவித்து இருந்தார்.

இதில், பழமையான யமஹா ஆர்.டி350 பைக்கில் இருந்து ஹார்லி-டேவிட்சன் ஃபேட் பாய், கவாஸாகி நிஞ்சா எச்2, டுகாட்டி 1098 மற்றும் சுஸுகி ஹயபுஸா என ஏகப்பட்டவை அடங்குகின்றன. உங்களில் சிலருக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் பிரசாத்தை பற்றி தெரியாமல் இருக்கலாம். இந்தியாவிற்காக 33 டெஸ்ட்கள் மற்றும் 161 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் டெஸ்ட்களில் 96 விக்கெட்களையும், ஒருநாள் போட்டியில் 196 விக்கெட்களையும் கைப்பற்றி உள்ளார்.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: தோனியின் பைக் கேரேஜ் தொடர்பான படங்களும் வீடியோக்களும் இதற்கு முன்பு கூட சிலமுறை இணையத்தில் வெளியாகியுள்ளன. ஆனால் அவை எல்லாவற்றையும் விடவும் வெங்கடேஷ் பிரசாத் தற்போது டுவிட்டரில் வெளியிட்டுள்ள வீடியோ இன்னும் முழுமையாக தோனியின் கேரேஜை காட்டுகிறது என்று தான் சொல்ல வேண்டும். இந்த வீடியோவில் தோனியின் பைக் கேரேஜை பார்த்த நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, July 18, 2023, 14:45 [IST]
English summary
Dhoni with venkatesh prasad in dhoni bike garage
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+