42 வயசுலயும் தேவதை மாதிரி இருக்காங்க! காஸ்ட்லியான எலெக்ட்ரிக் காரை வாங்கனது அவங்களா! சொக்கி போன ரசிகர்கள்!
இந்திய சந்தையில் தற்போது எலெக்ட்ரிக் கார்களின் (Electric Cars) விற்பனை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. பிரபல மனிதர்கள் பலரும் கூட எலெக்ட்ரிக் கார்களை அதிக அளவில் வாங்க தொடங்கியுள்ளனர். குறிப்பாக பாலிவுட் நடிகைகள் மத்தியில், எலெக்ட்ரிக் கார்கள் மிக பிரபலமாக இருந்து வருகின்றன. இதை உண்மை என்று நிரூபிக்கும் வகையில், பிரபல பாலிவுட் நடிகை ஒருவர் தற்போது புத்தம் புதிய எலெக்ட்ரிக் கார் ஒன்றை வாங்கியுள்ளார். அவர் தியா மிர்ஷா (Dia Mirza) ஆவார். 42 வயதாகும் இவர், இந்தி திரைப்படங்களில் அதிகளவில் தோன்றியுள்ளார்.
கடந்த 1999ம் ஆண்டு, அரவிந்த் சாமி (Arvind Swamy) நடிப்பில் வெளியான 'என் சுவாச காற்றே' திரைப்படத்திலும் கூட, தியா மிர்ஷா நடித்துள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். எனவே தமிழ் ரசிகர்களுக்கும் கூட, தியா மிர்ஷா கொஞ்சம் அறிமுகமானவர்தான்.

இவர் தற்போது வாங்கியிருப்பது வால்வோ சி40 ரீசார்ஜ் (Volvo C40 Recharge) எலெக்ட்ரிக் கார் ஆகும். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ஒரே ஒரு வேரியண்ட்டில் மட்டுமே வால்வோ சி40 ரீசார்ஜ் எலெக்ட்ரிக் கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன் விலை 62.95 லட்ச ரூபாயாக இருக்கிறது.
இது எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். வால்வோ சி40 ரீசார்ஜ் எலெக்ட்ரிக் காரில், 78 kWh பேட்டரி ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 530 கிலோ மீட்டர்கள் பயணம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நடைமுறை பயன்பாட்டிற்கு ஏற்ற ரேஞ்ச் (Range) என்பதில் துளியும் சந்தேகமில்லை.

வசதிகளை பொறுத்தவரையில், 12 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், 9 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ட்யூயல் ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல் மற்றும் பனரோமிக் சன்ரூஃப் ஆகியவை எல்லாம் வால்வோ சி40 ரீசார்ஜ் எலெக்ட்ரிக் காரின் மிகவும் முக்கியமான அம்சங்களாக இருக்கின்றன.
பொதுவாக வால்வோ கார்கள், பாதுகாப்பில் தலைசிறந்து விளங்கும். அதற்கு வால்வோ சி40 ரீசார்ஜ் எலெக்ட்ரிக் காரும் விதிவிலக்கு அல்ல. பாதுகாப்பை பொறுத்தவரையில் இந்த காரில், அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems) மற்றும் 7 ஏர்பேக்குகள் போன்றவை மிகவும் முக்கியமான அம்சங்களாக உள்ளன.
அத்துடன் 360 டிகிரி கேமரா வசதியும் இந்த எலெக்ட்ரிக் காரில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் கியா இவி6 (Kia EV6) மற்றும் ஹூண்டாய் ஐயோனிக் 5 (Hyundai Ioniq 5) போன்ற எலெக்ட்ரிக் கார்களுக்கு மிகச்சிறந்த மாற்றாக, வால்வோ சி40 ரீசார்ஜ் எலெக்ட்ரிக் கார் கருதப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: பிரபலங்கள் எலெக்ட்ரிக் கார்களை வாங்குவது உண்மையிலேயே நல்ல விஷயம்தான். இது பொதுமக்கள் மத்தியில் எலெக்ட்ரிக் கார்கள் மீதான நம்பகத்தன்மையை அதிகரித்து, அவற்றை வேகமாக பிரபலமாக்கும். நிறைய பேர் எலெக்ட்ரிக் கார்களுக்கு மாறும்பட்சத்தில், இந்தியாவின் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும் என நாங்கள் கருதுகிறோம்.


Click it and Unblock the Notifications








