நகை கடை ஓனராக இருந்தாலும் இந்த துயரத்தை எப்படித்தான் தாங்கிக்க போறாரோ... ஃபெராரி கார் அப்பளம்போல!
ஜோஸ்கோ ஜூவல்லர்ஸ் (Josco Jewellers), கேரளாவில் செயல்படும் முன்னணி தங்கம் மற்றும் வைரம் சில்லறை விற்பனையாளர். இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராகவும், சிஇஓ ஆகவும் இருப்பவர் டோனி ஜோஸ் (Tony Jose). இவரது விலையுயர்ந்த ஃபெராரி (Ferrari) கார் பெரிய விபத்தில் சிக்கி பலத்த சேதாரமாகி உள்ளது. என்ன நடந்தது? அப்படி எந்த மாதிரியான ஃபெராரி காரை டோனி ஜோஸ் வைத்துள்ளார். வாருங்கள் அதனை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இந்தியாவில் சாலை விபத்துகளுக்கு பஞ்சமே இல்லை. பல விலையுயர்ந்த கார்கள் கூட சர்வ சாதாரணமாக விபத்தில் சிக்கி சின்னா பின்னமானதை செய்திகளில் பார்த்திருக்கிறோம். அந்த வரிசையில் தற்போது பிரபல கேரள நகை கடை உரிமையாளரான பிஏ ஜோஸின் மகனான டோனி ஜோஸின் ஃபேராரி 488 ஜிடிபி (GTB) கார் விபத்தில் சிக்கி அப்பளம் போல் நசுங்கியுள்ளது.

செல்வந்தர்கள் பலர் ஸ்போர்ட்ஸ் கார் பிரியர்களாக உள்ளனர். அத்தகைய பணக்காரர்களுள் டோனி ஜோஸும் ஒருவர் ஆவார். இவரிடம் பல விலையுயர்ந்த & அதிவேகமாக இயங்கக்கூடிய கார்கள் இருப்பதாக கூறுகின்றனர். இந்த நிலையில், டோனி ஜோஸின் லக்சரி கார் கலெக்ஷனில் உள்ள ஃபெராரி 488 ஜிடிபி கார் லாரியுடன் ஏற்பட்ட மோதலில் பலத்த சேதாரங்களை சந்தித்துள்ளது.
கேரளாவின் கொச்சி (Kochi)-க்கு அருகே உள்ள காலமாச்சேரியில் மருத்துவ கல்லூரிக்கு அருகே இந்த விபத்து ஜனவரி 28 மதியம் 12:50 மணியளவில் நடைபெற்றுள்ளது. விபத்திற்குள்ளான ஃபெராரி 488 ஜிடிபி காரில் சென்றவர்கள், முன்னால் சென்றுக் கொண்டிருந்த மஹிந்திரா எக்ஸ்யூவி500 (Mahindra XUV500) காரை முந்த முற்பட்ட போது சாலையின் நடுவில் இருந்த தடுப்பில் மோதி இந்த விபத்து நடந்துள்ளது.

இந்த மோதலில் ஃபெராரி 488 ஜிடிபி காரின் வலதுப்பக்கம் முழுவதுமாக சேதமடைந்துள்ளது. இதில் இருந்து இந்த விபத்து எவ்வளவு வேகத்தில் நடைபெற்றிருக்கும் என்பதை அறிய முடிகிறது. ஆனால், இந்த ஃபெராரி கார் டிரைவர் முந்த முயன்ற மஹிந்திரா எக்ஸ்யூவி500 காரில் சின்ன கீறல் கூட ஏற்பட்டதுபோல தெரியவில்லை.
விபத்து நடைபெற்றது இத்தனைக்கும் இருவழி சாலை ஆகும். சாலையின் பாதைகள் நன்கு விசாலமானதாக தான் உள்ளன. இருப்பினும், சாலையின் ஓரத்தில் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், சாலையில் வாகனங்கள் குறுகலான பாதையில்தான் செல்ல வேண்டிய சூழல் உள்ளது. இதுவும் இந்த விபத்துக்கு ஒரு காரணம் என சொல்ல வேண்டும்.

நல்லவேளையாக, இந்த விபத்தில் யாருக்கும் எந்த காயமும் இல்லை. ஆனால், பலத்த சேதாரங்களை சந்தித்திருக்கும் ஃபெராரி 488 ஜிடிபி காரின் வலதுப்பக்க சக்கரங்கள் தனியாக கழன்றிருப்பதுடன், ஃபெண்டர்கள் மற்றும் பம்பர்கள் என முழு காரும் அதிகம் சேதாரமாகி உள்ளது. கார் மொத்தமாகவே கீழே அமுக்கப்பட்டதுபோல் உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: காரின் ஒருபக்கம் மட்டும் பலத்த சேதாரங்களை சந்திருப்பதில் இருந்து விபத்தின்போது டிரைவரின் கட்டுப்பாட்டில் இருந்து கார் கைமீறி சென்றுள்ளதை அறிய முடிகிறது. இருப்பினும், டிரைவர் முடிந்தவரையில் காரை நிறுத்த முயற்சி செய்துள்ளார். இவ்வாறான குறுகலான சாலைகளில் முடிந்தவரையில் ஓவர்-டேக்கிங்கை தவிர்ப்பது நல்லது.


Click it and Unblock the Notifications









