பெரிய மனசுக்காரன்... 1,260 கார்களை தீபாவளி பரிசாக வழங்கிய சூரத் வைர வியாபாரி

Written By:

"உங்கள் பணியாளர்களை நன்றாக கவனித்துக்கொள்ளுங்கள். அவர்கள் உங்கள் வாடிக்கையாளர்களை சிறப்பாக கவனித்துக் கொள்வார்கள்," என்ற புதுமொழிக்கு ஏற்ப, பணியாளர்களுக்கு கார், அடுக்கு மாடி குடியிருப்புகளை தீபாவளி பரிசாக தந்து அசத்தி வருகிறார் சூரத்தே சேர்ந்த வைர வியாபார நிறுவனத்தின் அதிபர் சவ்ஜி தோலக்யா.

தீபாவளி வந்துவிட்டாலே ஹரே கிருஷ்ணா வைர ஏற்றுமதி நிறுவனத்தின் ஊழியர்களுக்கு ஜாக்பாட் அடித்துவிடுகிறது. ஆம், கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் கார் மற்றும் அடுக்குமாடி வீடுகளை பணியாளர்களுக்கு தீபாவளி பரிசாக அளித்து அசத்தியிருக்கிறார் ஹரே கிருஷ்ணா நிறுவனத்தின் அதிபர் சவ்ஜி தோலக்யா.

1,260 பணியாளர்களுக்கு தீபாவளி பரிசாக கார் வழங்கிய தொழிலதிபர்!

ஆனால், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பரிசுகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக உயர்த்தியிருக்கிறார் தோலக்யா. இந்த ஆண்டு 1,260 பணியாளர்களுக்கு கார்களையும், 400 பணியாளர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகளையும் தீபாவளி பரிசாக வழங்கியிருக்கிறார் தோலக்யா.

1,260 பணியாளர்களுக்கு தீபாவளி பரிசாக கார் வழங்கிய தொழிலதிபர்!

கடந்த ஆண்டு ஃபியட் புன்ட்டோ கார் தீபாவளி பரிசாக வழங்கப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு எந்த கார் மாடல் பரிசளிக்கப்பட்டது என்ற விபரத்தை ஹரே கிருஷ்ணா நிறுவனம் வெளியிடவில்லை. மாருதி ஆல்ட்டோ கார்கள் பரிசளிக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது.

1,260 பணியாளர்களுக்கு தீபாவளி பரிசாக கார் வழங்கிய தொழிலதிபர்!

கடந்த செவ்வாய்க் கிழமை எந்தவொரு ஆடம்பரமும் இல்லாமல் பரிசளிப்பு நிகழ்ச்சியை சூரத்தில் நடத்தியிருக்கிறார் தோலக்யா. கார் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளை தீபாவளி பரிசாக வழங்கியதற்காக ரூ.51 கோடி வரை செலவு செய்திருக்கிறார் தோலக்யா.

1,260 பணியாளர்களுக்கு தீபாவளி பரிசாக கார் வழங்கிய தொழிலதிபர்!

கார் மற்றும் வீடுகளுக்கான டவுண்பேமன்ட் மற்றும் முதல் 5 ஆண்டுகளுக்கு ரூ.5,000 மாதத் தவணைத் தொகையை தோலக்யாவின் ஹரே கிருஷ்ணா நிறுவனம் செலுத்தும். அதன்பிறகு சம்பந்தப்பட்ட பணியாளர்கள் மீதிக் கடனை செலுத்த வேண்டும்.

1,260 பணியாளர்களுக்கு தீபாவளி பரிசாக கார் வழங்கிய தொழிலதிபர்!

ஹரே கிருஷ்ணா நிறுவனத்தின் வைர பட்டை தீட்டும் பிரிவு சூரத் நகரிலும், ஏற்றுமதியை கவனிக்கும் பிரிவு மும்பையிலும் செயல்பட்டு வருகிறது. அமெரிக்கா அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், ஐரோப்பிய நாடுகளுக்கு இந்த நிறுவனம் வைரத்தை ஏற்றுமதி செய்கிறது.

1,260 பணியாளர்களுக்கு தீபாவளி பரிசாக கார் வழங்கிய தொழிலதிபர்!

இந்த நிறுவனத்தில் 6,000 பேர் பணியாற்றுகினறனர். நிறுவனத்தின் வளர்ச்சிக்காக சிறப்பாக செயல்படும் பணியாளர்களை தேர்வு செய்து அவர்களை ஊக்கப்படும் விதத்தில் இந்த பரிசுகளை வழங்கி வருகிறார் தோலக்யா.

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Surat-based billionaire diamond merchant Savji Dholakia has this year too kept over a thousand cars and 400 flats to his well-performing staffers with the company bearing part of the monthly instalments.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more