பெர்முடா முக்கோணம் போல இதுக்கு மேல எந்த விமானம் பறந்தாலும் உள்ளே இழுத்துக்குதாம்!

இந்த உலகம் பல அதிசயங்களும், ஆச்சரியங்களும் நிறைந்தது. இந்த உலகில் நடக்கும் பல விஷயங்களுக்கு அறிவியல் விளக்கம் அளித்தாலும் அறிவியலால் கூட விளக்க முடியாத பல விஷயங்கள் இன்னும் இந்த உலகிலிருந்து கொண்டே தான் இருக்கிறது. இப்படியாக அறிவியலால் நீண்ட காலமாக விளக்க முடியாத பிரபலமான ஒரு விஷயம் தான் பெர்முடா முக்கோணம்.

இந்த முக்கோண பகுதிக்குள் கப்பல், விமானம் என எது சென்றாலும் அது அவ்வப்போது மாயமாவது, அல்லது காணாமல் போகும் சம்பவம் நடந்துள்ளது. இப்படியா மாயமான விமானங்கள், கப்பல்கள் எங்குச் சென்றது என யாருக்கும் தெரியவில்லை. அறிவியலால் கூட விளக்க முடியவில்லை. இது மட்டுமல்ல கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மலேசிய விமானம் ஒன்று காணாமல் போனது அந்த விமானமும் எங்கு இருக்கிறது என யாருக்கும் தெரியவில்லை.

பெர்முடா முக்கோணம் போல இதுக்கு மேல எந்த விமானம் பறந்தாலும் உள்ளே இழுத்துக்குதாம்!

அறிவியலால் அந்த விமானம் காணாமல் போனதற்கான காரணம் இன்று வரை தெரியவில்லை. இப்படியாக மர்மமான மற்றுமொரு விஷயம் கூட இந்த உலகில் இருக்கிறது. நீண்ட ஆண்டுகளாக இது மர்மமான ஒரு விஷயமாக இருந்தாலும் இது பெரிய பிரபலமாகவில்லை. அறிவியலால் இந்த மர்மமான விஷயத்திற்கு விளக்கமும் ஏற்படுத்த முடியவில்லை. இந்த மர்மமான இடம் தான் மர்னி மர்ம சுரங்கம்.

சைபிரியா நாட்டில் உள்ள ஒரு சிறிய நகரம் தான் மிர்னி, இங்குக் கடந்த 1957ம் ஆண்டு சோவியத் யூனியன் இருந்த போது இங்கு விலை மதிக்க முடியாத அறிய வகை வைரக் கற்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் பல ஆய்வுகள் நடத்தப்பட்ட பின்பு இங்குள்ள வைரக் கற்களைத் தோண்டி எடுக்கும் பணி கடந்த 1960ல் துவங்கியது. இந்த பணி சுமார் 2004ம் ஆண்டு வரை நடந்தது.

பெர்முடா முக்கோணம் போல இதுக்கு மேல எந்த விமானம் பறந்தாலும் உள்ளே இழுத்துக்குதாம்!

இந்த சுங்கத்திலிருந்து சுமார் 13 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான வைர கற்கள் தோண்டி எடுக்கப்பட்டுவிட்டன. அதன்பின்னர் அந்த அறிய வகை கற்கள் இல்லாததால் இந்த சுரங்கம் தோண்டப்படுவது நிறுத்தப்பட்டது. இந்த வைரத்தை எடுப்பதற்காக வட்ட வடிவில் சுமார் 3900 மீட்டர் விட்ட அளவில் 1200 மீட்டர் ஆழத்தில் இந்த சுரங்கம் தோண்டப்பட்டுள்ளது.

இந்த உலகில் உள்ள மிகப்பெரிய சுரங்களில் இதுவும் ஒன்று. சரி இதில் என்ன மர்மம் இருக்கிறது என்றால் இந்த சுரங்கம் தோண்டப்பட்ட பகுதிக்கு மேல் விமானங்களால் பறக்க முடியவில்லை. இந்த பகுதிக்கு மேல் ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்ய முடியாது முயன்றால் ஹெலிகாப்டர் சுரங்கத்திற்குள் இழுக்கப்பட்டு விபத்தில் சிக்கி விடுகிறது. மிகப்பெரிய அளவிலான விமானங்கள் செல்லும் போது கூட இது இந்த சுரங்கத்திற்குள் இழுக்கப்படுகிறது.

பெர்முடா முக்கோணம் போல இதுக்கு மேல எந்த விமானம் பறந்தாலும் உள்ளே இழுத்துக்குதாம்!

அதனால் தற்போது இந்த சுரங்கத்திற்கு மேலே விமானங்கள் பறக்க அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. இந்த சுரங்கம் என்னதான் 2004ம் ஆண்டே மூடப்பட்டாலும் அதில் கடந்த 2010ம் ஆண்டு வரை ஆய்வுகள் நடந்தது இந்த ஆய்விற்காகத் தான் இப்பகுதியில் ஹெலிகாப்டரில் செல்லும் போது செல்ல முடியாமல் விபத்தில் ஹெலிகாப்டர்கள் சிக்கியது. இந்த சுரங்கம் தோண்டப்படும் போது இப்படியாக விமானங்கள், ஹெலிகாப்டர்கள் சுரங்கத்தை நோக்கி இழுக்கப்படவில்லை.

ஆனால் சுரங்கம் பெரியதாக மாறிய பின்பு தான் இப்படியாக விமானங்கள், ஹெலிகாப்டர்கள் இழுக்கப்படுகிறது. இது மட்டுமல்ல சுரங்கத்திற்கு உள்ள வெளியே இருக்கும் காற்றை விடக் காற்றின் அழுத்தம் அதிகமாக மாறுகிறது. அதே நேரம் வெப்பத்தின் அளவும் கணிசமாக அதிகமாகிறது. இது கூட காரணமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து அறிவியல் விஞ்ஞானிகள் ஆய்வு செய்த போது அதற்கான காரணம் தெரியவில்லை. இன்று வரை இது மர்மமாகவே இருக்கிறது. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

Article Published On: Monday, February 20, 2023, 18:30 [IST]
English summary
Diamond mine take down flights know full details
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+