இந்த வாகனங்களை எல்லாம் ஒரே இடத்துல வச்சு பாக்குறது ரொம்ப அபூர்வம்.. ஆனா இந்தியால பாத்திருக்காங்களா? எங்கேங்க?

ஆண்டுகள் பல ஆகியிருந்தாலும் இப்போதும் இந்தியர்கள் பலரின் நினைவில் நீங்க இடத்தைக் கொண்டிருக்கும் வாகனங்களாக யமஹா ஆர்எக்ஸ்100 (Yamaha RX100), ராயல் என்பீல்டு புல்லட் (Royal Enfield Bullet), பிரீமியர் பத்மினி (Premier Padmini) மற்றும் ஹிந்துஸ்தான் அம்பாஸ்டர் (Hindu Ambassador) போன்ற வாகனங்கள் இருக்கின்றன.

இந்த வாகனங்கள் மட்டுமில்லைங்க இன்னும் ஒரு சில வாகனங்களும் இந்தியர்களின் நினைவில் நீங்க இடத்தைப் பிடித்திருக்கின்றன. இத்தனைக்கும் அந்த வாகனங்களை யாரும் நேரில்கூட பார்த்திருக்க மாட்டார்கள். இருப்பினும், அந்த வாகனங்களுக்கு நம்மில் பலர் ஃபேன்களாக இருக்கின்றனர். இந்தியர்கள் மட்டுமில்லைங்க உலகளவில் பலர் அந்த வாகனங்களுக்கு ஃபேன்களாக இருக்கின்றனர்.

Rare vehicles seen in bengaluru

அப்படி என்ன வாகனங்கள் அவை?, அப்படினுதானே கேக்குறீங்க, 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரிட் ஷோக்களில் வரும் பேட் மொபைல், பம்பிள் பீ, ஸ்கூபி டூ வேன் மற்றும் டெலோரியன் ஆகிய வாகனங்களே அவை ஆகும். இந்த வாகனங்களையே இந்தியாவின் குறிப்பிட்ட நகரத்தில் வசிக்கும் சிலர் நேரில் பார்த்ததாகக் கூறப்படுகின்றது.

அந்த வாகனங்கள் நகரத்தில் வலம் வரும் வீடியோவும் இணையத்தில் தற்போது வெளியாகி இருக்கின்றது. கர்நாடகா மாநிலம், பெங்களூருவிலேயே அந்த விநோத வாகனங்களின் நடமாட்டம் காணப்பட்டதாகக் கூறப்படுகின்றது. அவை சாலையில் வலம் வரும் வீடியோவை திவ்யா பதக் எனும் எக்ஸ் பயன்பாட்டாளர், அவரது எக்ஸ் கணக்கின் வாயிலாக பதிவிட்டுள்ளார்.

Scoobydoo van

இந்த வீடியோவே தற்போது 90-ஸ் கிட்ஸ்கள் மத்தியில் மிக வேகமாக வைரலாகிக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, அனைத்து வாகனங்களும் அடுத்தடுத்து ஓர் விடுதியில் இருந்து வெளியாகி இருப்பதுதான் ஹைலைட்டே. இன்னும் தெளிவாகக் கூற வேண்டும் என்றால் கிரெட் ஷோரூமின் பார்க்கிங் பிளேசில் இருந்தே அந்த வாகனங்கள் வெளியே வந்திருக்கின்றன.

ஆனால், உண்மையில் அந்த வாகனங்கள் உண்மை வாகனம் அல்ல என்று பலர் கருத்து தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர். அதனை பெங்களூருவின் எந்த மூலையிலும் யாரும் பார்க்கவில்லை என்றும் வாகன ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், சிலர் இந்த வாகனங்கள் அனைத்தும் கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்டவை என்றும் கூறி வருகின்றனர்.

Batmobile

வீடியோவை உற்று நோக்கி பார்க்கையில் நமக்கும் அந்த வீடியோவில் உள்ள வாகனங்கள் கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ்தான் என்பது தெரிய வருகின்றது. ஆனால், பார்க்க உண்மையானவைப் போலவே அது தெரிகின்றது. பார்வையாளர்களைக் கவரவும், ஃபாலோவர்களின் எண்ணிக்கையைக் கூட்டவும் வீடியோ கிரியேட்டர் அந்த வீடியோவை வெளியிட்டு இருக்கலாம் என கூறப்படுகின்றது.

மேலும், ஒரு சிலர் இது கிரெட் நிறுவனத்தின் விளம்பர யுக்தியாகவும் இருக்கலாம் என கருத்துத் தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர். இதை உறுதிப்படுத்தும் விதமாக கிரெட் அலுவலகத்தின் பார்க்கிங்கில் இருந்து இந்த கார்கள் வெளியேறுவதைப் போன்ற காட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன.கிரெட் ஓர் தனியார் ஃபைனான்ஸ் நிறுவனம் ஆகும்.

Bumblebee

வீடியோவில் காட்சி தந்திருக்கும் அந்த நான்கு கார்களையும் உண்மையில் சினிமாவில்கூட ஒன்றாக பார்ப்பது கடினமானதாகும். இனி வரும் காலத்தில் ஏதேனும் ஓர் இயக்குநர் இந்த அனைத்து கதாபாத்திரங்களையும் ஒன்றாக வைத்து படத்தை எடுத்தால் மட்டுமே வீடியோவில் பார்த்த அனைத்து வாகனங்களையும் ஒரே இடத்தில் வைத்து பார்க்க முடியும் என 90ஸ்கள் கூறுகின்றனர்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: நம்மையே இந்த வீடியோ ஒரு நிமிஷம் நம்ப வைத்துவிட்டது என்றே கூறலாம். அந்த அளவிற்கு மிகவும் நேர்த்தியானதாக அந்த வீடியோ இருக்கின்றது. உண்மையில் கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸைப் போல் அந்த வீடியோ துளியளவும் தெரியவில்லை. இதுமட்டுமில்லைங்க, சமீபத்தில் ஓர் கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் டிசைனர் சென்னையில் ட்ராம் வண்டிகள் வலம் வருவதை போல வீடியோ வெளியிட்டு அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்க செய்தார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Friday, September 29, 2023, 20:19 [IST]
English summary
Did the vehicles featured in famous hollywood movies come to india
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X