விமானங்களில் புகை பிடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது... ஆனாலும் ஆஸ்ட்ரே இருக்கும்... எதற்காக தெரியுமா?

விமானங்களில் புகை பிடிப்பது தடை செய்யப்பட்டிருந்தாலும், ஏன் இன்னமும் ஆஸ்ட்ரே வைத்துள்ளனர்? என்பதற்காக காரணத்தை இந்த செய்தியில் பார்க்கலாம்.

விமானங்களில் புகை பிடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது... ஆனாலும் ஆஸ்ட்ரே இருக்கும்... எதற்காக தெரியுமா?

கடந்த 20 வருடங்களுக்கு முன்னர், வர்த்தக விமானங்களில் புகை பிடிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது சர்வதேச அளவில் அனைத்து விமானங்களிலும் புகை பிடிப்பது தடை செய்யப்பட்டு விட்டது. ஒரு சில விமான நிறுவனங்கள், கடந்த 1980களிலேயே புகை பிடிப்பதை தடை செய்வதற்கான வேலைகளை தொடங்கி விட்டன.

விமானங்களில் புகை பிடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது... ஆனாலும் ஆஸ்ட்ரே இருக்கும்... எதற்காக தெரியுமா?

ஆனால் விமானங்களில் இன்னமும் ஆஸ்ட்ரேக்கள் இருப்பதை நீங்கள் கவனித்திருக்க கூடும். விமானங்களில் புகை பிடிப்பது தடை செய்யப்பட்டு விட்ட நிலையில், ஆஸ்ட்ரேக்கள் ஏன் வைக்கப்பட்டுள்ளன? என்ற கேள்வி உங்களுக்குள் கண்டிப்பாக எழுந்திருக்கும். உங்களின் இந்த சந்தேகத்தை நாங்கள் தற்போது நிவர்த்தி செய்கிறோம்.

விமானங்களில் புகை பிடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது... ஆனாலும் ஆஸ்ட்ரே இருக்கும்... எதற்காக தெரியுமா?

பொதுவாக கழிவறைகளில்தான் ஆஸ்ட்ரேக்கள் வைக்கப்பட்டிருக்கும். எதையும் உன்னிப்பாக கவனிக்க கூடிய நபர்கள், நிச்சயம் தற்போதும் விமானங்களில் ஆஸ்ட்ரேக்களை பார்த்திருப்பார்கள். சரி, புகை பிடிப்பது தடை செய்யப்பட்டு விட்ட நிலையில் ஏன் விமானங்களில் இன்னமும் ஆஸ்ட்ரேக்களை வைத்துள்ளனர்?

விமானங்களில் புகை பிடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது... ஆனாலும் ஆஸ்ட்ரே இருக்கும்... எதற்காக தெரியுமா?

ஒரு சில பயணிகள் இன்னமும் விதிமுறைகளை மதிப்பதில்லை என்பதுதான் இதற்கான பதில். ஆம், ஒரு சில பயணிகள் விதிமுறைகளை மீறி இன்னமும் விமானங்களில் புகை பிடித்து கொண்டுதான் இருக்கின்றனர். எனவேதான் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானங்களில் இன்னமும் ஆஸ்ட்ரேக்கள் வைக்கப்பட்டுள்ளன.

விமானங்களில் புகை பிடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது... ஆனாலும் ஆஸ்ட்ரே இருக்கும்... எதற்காக தெரியுமா?

சில பயணிகள் கழிவறைக்குள் சென்று இன்னமும் புகை பிடித்து வரும் நிலையில், ஆஸ்ட்ரே இல்லாவிட்டால் விமானத்திற்கு ஆபத்து ஏற்படலாம். எனவே புகை பிடிப்பது தடை செய்யப்பட்டிருந்தாலும் கூட, யாராவது இந்த விதிமுறையை மீறி புகை பிடித்து விட்டால் என்ன செய்வது? என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே விமானங்களில் ஆஸ்ட்ரேக்கள் வைக்கப்பட்டுள்ளன.

விமானங்களில் புகை பிடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது... ஆனாலும் ஆஸ்ட்ரே இருக்கும்... எதற்காக தெரியுமா?

ஆஸ்ட்ரேக்களை விமானங்களில் வைத்திருக்க வேண்டும் என்ற விதிமுறை தற்போதும் உள்ளது. சிகரெட்டை குடித்து விட்டு, அதனை குப்பையில் போடுவதன் காரணமாக விமானத்தின் கேபினில் தீப்பற்றுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே சிகரெட்டை அணைப்பதற்கு ஆஸ்ட்ரேக்கள்தான் பாதுகாப்பான இடமாகும்.

விமானங்களில் புகை பிடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது... ஆனாலும் ஆஸ்ட்ரே இருக்கும்... எதற்காக தெரியுமா?

இதன் காரணமாகவே விமானங்களில் ஆஸ்ட்ரேக்கள் வைக்கப்பட்டுள்ளன. புகைபிடிக்க கூடாது என்ற விதிமுறையை மீறுவது என ஒரு பயணி முடிவு செய்து விட்டால், அவர் ஆஸ்ட்ரேக்களை பயன்படுத்தி கொள்ளலாம். விமானங்களில் இன்னமும் ஏன் ஆஸ்ட்ரேக்கள் வைக்கப்பட்டுள்ளன? என்ற உங்களது சந்தேகத்திற்கு தற்போது சரியான பதில் கிடைத்திருக்கும் என நம்புகிறோம்.

விமானங்களில் புகை பிடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது... ஆனாலும் ஆஸ்ட்ரே இருக்கும்... எதற்காக தெரியுமா?

நாங்கள் ஏற்கனவே கூறியபடி விமானத்தில் ஆஸ்ட்ரேக்கள் இருக்க வேண்டும் என்பது விதிமுறை. சரியான ஆஸ்ட்ரே இல்லை என்ற காரணத்திற்காக விமானம் தாமதமாக புறப்பட்ட நிகழ்வுகள் கடந்த காலங்களில் நடைபெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் கூடுமான வரை புகைபிடிக்காமல் இருப்பது உங்களுடைய உடல் நலத்திற்கு நல்லது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Did You Know: Why Airplanes Still Have Ashtrays Even Though Smoking Is Banned. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X