டீசல் ரயில் ஒரு லிட்டருக்கு எவ்ளோ மைலேஜ் தரும்? எதன் அடிப்படையில் டீசலை நிரப்புவாங்க! வெளி உலகம் அறியாத ஒன்று!
நம்மில் பலர் ரோல்ஸ் ராய்ஸ் மற்றும் பென்ஸ் போன்ற சொகுசு கார்களே மிக மிக குறைவான மைலேஜை வழங்குவதாக நினைத்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால், இந்தியன் ரயில்வேஸின் பயன்பாட்டில் இருக்கும் டீசல் எஞ்ஜின் ரயில்கள் எவ்வளவு மைலேஜ் தரும்னு நினைச்சு பார்த்தது உண்டா? இதுகுறித்த தகவலைக் காணலாம், வாங்க.
இந்தியன் ரயில்வேஸ் முழுமையான மின்சார இயக்கத்தை நோக்கி மிக வேகமாக நகர்ந்துக் கொண்டிருக்கின்றது. அதாவது, முழுமையாக எலெக்ட்ரிக் ரயில்களை பயன்பாட்டிற்குக் கொண்டு வரும் பணியில் மிக தீவிரமாக இந்தியன் ரயில்வேஸ் ஈடுபட்டு வருகின்றது. இந்த தகவல் நம்மில் ஒரு சிலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம்.

குறிப்பாக, "என்ன முழுமையாக எலெக்ட்ரிக் ரயில்களை பயன்பாட்டிற்குக் கொண்டு வரும் முயற்சியில் இந்தியன் ரயில்வேஸ் ஈடுபட்டு வருகிறதா?.. அப்போ இந்தியால இன்னும் எலெக்ட்ரிக் அல்லாத ரயில்கள் ஓடிக் கொண்டு இருக்கின்றதா" என்பது போன்ற பல்வேறு சந்தேகங்களும், கேள்விகளும்கூட எழும்பி இருக்கக் கூடும்.
இதுபோன்ற எந்த சந்தேகமும் வேண்டாம் இந்தியாவில் இப்போதும் டீசல் மற்றும் நிலக்கரியில் ஓடும் ரயில்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. நாட்டின் குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டுமே அவை தற்போது பயன்பாட்டில் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது. நாடு முழுவதும் மின்சாரத்தால் ஓடும் ரயில்கள் மட்டுமே பயன்பாட்டில் இருப்பதாக நினைத்துக் கொண்டிருந்தவர்களுக்கு இந்த தகவல் கட்டாயம் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும்.

ஆனால், இதுதான் உண்மை. இந்தியா முழுமையாக மின்சார ரயில் பயன்பாட்டிற்கு மாறவில்லை. அதேவேளையில் விரைவில் இந்த இலக்கை அது எட்டிவிடும். இந்தியன் ரயில்வேஸ் நாடு முழுவதும் உள்ள ரயில் வழித் தடத்தை மின்சாரத்திற்கு அப்கிரேட் செய்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே நம்மில் ஒரு சிலருக்கு இந்த கேள்வியும் எழும்பியிருக்கக் கூடும்.
அதாவது, டீசல் எஞ்ஜின் கொண்ட ரயில் ஒரு லிட்டருக்கு எவ்வளவு மைலேஜ் கொடுக்கும் என்கிற கேள்வியே அது ஆகும். இந்த கேள்விக்கான பதிலையும் இந்த பதிவில் பார்த்துவிடலாம். பொதுவாக ஓர் வாகனம் ஒரு லிட்டர் டீசலை நிரப்பினால் 20 கிமீ வரையில் மைலேஜ் தரும்.

இந்த மைலேஜ் திறன் உங்கள் வாகனத்தைப் பொருத்தும் பயன்பாட்டைப் பொருத்தும் மாறுபடும். இதுபோலவே ரயில்களிலும் அதன் பயன்பாட்டைப் பொருத்தும், பெட்டிகளின் எண்ணிக்கையைப் பொருத்தும் மைலேஜ் திறன் மாறுபடுகின்றது. உதாரணமாக லோக்கல் பயணிகள் ரயிலைக் காட்டிலும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் அதிக மைலேஜை வழங்கக் கூடியவையா இருக்கின்றன.
ஏனெனில், லோக்கல் ரயில் அதிக நிறுத்தத்தில் நிறுத்தப்படுகின்றன. ஆனால், வெளியூர் எக்ஸ்பிரஸ் ரயில்கள் குறைவான நிறுத்தங்களிலேயே நிறுத்தப்படுகின்றன. அதேநேரத்தில் இவற்றின் பெட்டிகளின் எண்ணிக்கையையும் கொண்டு மைலேஜ் திறன் மாறுபடும். இதேபோல், ரயில்கள் ஒரு லிட்டர் டீசலுக்கே ஒரு கிமீ, 2 கிமீ எல்லாம் வரையில் மைலேஜ் கொடுக்கும் என நினைத்துக் கொள்ள வேண்டாம்.
பல லிட்டர்கள் டீசலை நிரப்பினால்தான் ஒரு கிமீ மைலைஜையே அது வழங்கும். உதாரணமாக, 12 பெட்டிகளைக் கொண்ட பயணிகள் ரயில் ஒரு கிமீட்டர் இயங்க சுமார் 5-6 லிட்டர் வரை டீசல் செலவாகுமாம். அதுவே, எக்ஸ்பிரஸ் போன்ற அதிக பெட்டிகளைக் கொண்ட ரயில் என்றால் ஒரு கிமீ 6 லிட்டர் வரை டீசல் செலவழிக்கும்.
இதேபோல், 12 பெட்டிகளுடன் இயங்கும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஒரு கிமீ இயங்க 4-4.5 லிட்டர் வரை டீசல் தேவைப்படுகின்றது. எனவே ரயில்களின் ஒரு லிட்டருக்கான மைலேஜ் திறன் 180 மீட்டர் முதல் 230 மீட்டர் வரையில் இருக்கின்றது. இருப்பினும், இந்த ரயிலுக்கு கிமீட்டரை அடிப்படையாகக் கொண்டு டீசல் நிரப்பப்படாது என்றும் ஒரு மணி நேரம் இயங்க ரயிலுக்கு எத்தனை லிட்டர் டீசல் தேவைப்படும் என கணக்கிடப்பட்டே டீசல் நிரப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியன் ரயில்வேஸை சுற்றிலும் இதுபோன்ற பல மர்மமான தகவல்கள் வலம் வந்த வண்ணம் இருக்கின்றன. குறிப்பாக இந்த மைலேஜ் திறன் பற்றிய தகவல் உங்களை கட்டாயம் ஆச்சரியப்படுத்தி இருக்கும் என நம்புகின்றோம். இதுபோன்ற முக்கியமான மற்றும் சுவராஷ்யமான தகவல்களுக்கு எங்களுடன் இணைந்திருங்கள்.


Click it and Unblock the Notifications









