திடீரென குறைந்த டீசல் விற்பனை! அதிர்ச்சியில் உறைந்த மத்திய அரசு! இது தான் உண்மையான காரணமா?
இந்தியாவில் கடந்த நவம்பர் மாதம் டீசல் தேவை 7.5% வரை குறைந்து விட்டதாக சமீபத்தில் வெளியான அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது. தீபாவளி பண்டிகை காரணமாக சரக்கு போக்குவரத்து வாகனங்கள் பல செயல்படாமல் இருந்ததால் டீசல் விற்பனை குறைந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் எரிபொருள் விற்பனை என்பது மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது. அதிகமான எரிபொருள் விற்பனை நடக்கும் பட்சத்தில் இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி ஏற்பட போகிறது என்பதற்கான அறிகுறியாக இது காணப்படுகிறது. அதிக எரிபொருள் தேவைப்படுகிறது என்றால் அதிகமான சரக்குகள் வாங்கப்படுகிறது என அர்த்தம். அதிகமான சரக்குகள் வாங்கப்பட்டால் இந்தியாவில் நுகர்வு சக்தி அதிகமாகிறது என அர்த்தம்.

இதனால் ஒவ்வொரு மாதமும் இந்தியாவில் விற்பனையாகவும் பெட்ரோல் டீசல்களின் அளவுகளை கணக்கீடு செய்வது வழக்கம் இப்படியாக கடந்த நவம்பர் மாதமும் பெட்ரோல் டீசல் விற்பனை குறித்த கணக்கீடு நடந்தது அதில் கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் மொத்தம் 7.33மில்லியன் டன் அளவிலான டீசல் விற்பனையாகி இருந்தது. ஆனால் கடந்த நவம்பர் மாதம் வெறும் 6.78மில்லியன் டன் டீசல் மட்டுமே விற்பனையாக இருந்தது அதாவது விற்பனையில் 7.5% சரிவை சந்தித்துள்ளது.
இந்த சரிவிற்க்கான காரணம் குறித்து ஆய்வு செய்தபோது கடந்த நவம்பர் மாதம் மத்தியில் தீபாவளி பண்டிகை வந்ததால் பல சரக்கு வாகன ஓட்டுனர்கள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விடுமுறை எடுத்திருந்தனர். அதனால் சரக்கு வாகனங்கள் பல இயங்காமல் இருந்தது. இதன் காரணமாக டீசல் தேவை குறைவாக இருந்துள்ளது. இது ஒட்டுமொத்தமாக இந்தியாவில் டீசல் விற்பனையை சர செய்யும் அளவிற்கு குறைத்துள்ளது.

இந்தியாவில் டீசல் தான் அதிகமான விற்பனையாகும் எரிபொருளாக இருக்கிறது. பெட்ரோலிய தயாரிப்புகளிலேயே 40 சதவீதம் டீசல் தான் அதிகமாக விற்பனையாகின்றன அதில் சரக்கு போக்குவரத்துகளை கொண்டு செல்லும் வாகனங்கள் தான் 70% பெறுகின்றன. டீசல் விற்பனை ஒருபுறம் சரிய பெட்ரோல் விற்பனை மறுபுறம் ஏறி உள்ளது பெட்ரோல் விற்பனை 7.5% வரை அதிகரித்து 2.86மில்லியன் டன் பெட்ரோல் விற்பனையாகியுள்ளது.
கடந்த சில மாதங்களாகவே இந்தியாவில் பெட்ரோல் டீசல் விற்பனை அளவு என்பது தடுமாறிக் கொண்டே இருக்கிறது. கடந்த அக்டோபர் மாத துவக்கத்தில் பெட்ரோலுக்கான தேவை 9% வரை குறைந்திருந்தது. டீசல்களுக்கான தேவை 3.2 சதவீதம் வரை குறைந்து இருந்தது நவம்பர் மாதத்தை பொறுத்தவரை முதல் பாதையில் டீசல் தேவை 12.1% வரை குறைந்திருந்தது இருந்தாலும், இரண்டாவது பாதியில் ஓரளவு விற்பனை அதிகரித்ததால் சரிவு 7.5 ஆகவே இருந்தது.

கடந்த நவம்பர் மாத டீசல் விற்பனையை கடந்த அக்டோபர் மாத டீசல் விற்பனையுடன் ஒப்பிடும்போது 3.6 சதவீதம் விற்பனை அதிகரித்து தான் உள்ளது. இதுபோக மழை காலங்களில் டீசல் தேவை குறைவாகவே இருக்கும். அதிக மழை காரணமாக விவசாய செக்டாரில் டீசல் தேவை குறைவாக இருக்கும்.
பலர் விவசாயத்திற்காக வாகனங்களை இந்த காலகட்டத்தில் பயன்படுத்தாமல் இருப்பார்கள். அதனால் அவர்கள் டீசல் போட மாட்டார்கள். இதுவும் டீசல் தேவை குறைவதற்கான முக்கியமான காரணமாக இருக்கிறது. இந்த மழைக்காலம் முடிந்த பின்பு மெல்ல மெல்ல டீசலின் தேவை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் பொதுவாக கோடை காலங்களில் தான் எரிபொருள் விற்பனை அதிகமாக இருக்கும். அந்த காலகட்டத்தில் விவசாயத்திற்காகவும் வாகனங்கள் அதிகமாக பயன்படுத்தப்படும். அதே நேரம் தனி நபர் கார்களிலும் அதிகமாக ஏசி பயன்படுத்தப்படுவதால் எரிபொருள் செலவு அதிகமாக இருக்கும். தற்போது டீசல் விற்பனை சரிந்துள்ளது ஒரு தற்காலிக நிலை தான்.
கடந்த நவம்பர் மாதம் விமானங்களுக்கு பயன்படுத்தப்படும் எரிபொருளின் விற்பனை என்பது 6.1 சதவீதம் அதிகரித்துள்ளது. மொத்தம் 6.20 லட்சம் டன் எரிபொருள் விற்பனையாகியுள்ளது. ஆனால் கொரோனாவுக்கு முந்தைய காலமான 2019-ம் ஆண்டு நவம்பர் மாத விற்பனையை ஒப்பிடும்போது 7.5% குறைவாக தான் விற்பனையாகியுள்ளது.
இதற்கு முக்கியமான காரணம் கொரோனாவிற்கு பிறகு பல விமான நிறுவனங்கள் நிறுத்தப்பட்ட பல விமான சேவைகளை இதுவரை துவங்கவில்லை. ஆனால் விமான சேவை துவங்கப்பட்ட காலமான 2021 நவம்பர் மாத விற்பனையை ஒப்பிட்டால் 31.6% விற்பனை அதிகமாகியுள்ளது. பல விமான நிறுவனங்கள் புதிதாக விமான சேவையை துவங்கியது இதற்கு முக்கியமான காரணமாக கூறப்படுகிறது.
நவம்பர் மாத விமான எரிபொருள் விற்பனையை கடந்த அக்டோபர் மாத விற்பனையுடன் ஒப்பிடும்போது 1.4 சதவீதம் அதிகமாகியுள்ளது. அதேபோல சமையல் எரிவாயு விற்பனையை பொறுத்த வரை 0.9 சதவீதம் விற்பனை சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதம் மட்டும் 2.57 மில்லியன் டன் எரிபொருள் விற்பனையாகி உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எரிபொருளின் விற்பனை மெல்ல மெல்ல அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த நவம்பர் மாத விற்பனையில் டீசல் விற்பனை சரிவை சந்தித்திருந்தாலும் பெட்ரோல் விற்பனை சரிவை சந்திக்கவில்லை. இது ஒரு தற்காலிகமான விற்பனை சரிவு தான். பண்டிகை காலம் என்பதால் சரக்கு போக்குவரத்து குறைவாக இருந்ததன் விளைவாக இந்த விற்பனை சரிவு ஏற்பட்டது.


Click it and Unblock the Notifications









