இந்தியாவையே திரும்பி பார்க்க வைக்கும் திருச்சி... ஊட்டி மலை ரயில் வேற லெவலுக்கு மாற போகுது!
ஊட்டி மலை ரயிலுக்காகத் திருச்சி பொன்மலையில் டீசலில் இயங்கும் இன்ஜின் தயாரிக்கப்பட்டு வெற்றிகரமான சோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

நம்மில் பலருக்கு பாசஞ்சர் ரயில், எக்ஸ்பிரஸ் ரயில், சூப்பர் பாஸ்ட், தேஜஸ், என வித விதமான ரயில்களில் பயணித்திருப்போம். ஆனால் இருப்பதிலேயே மிக அருமையான அனுபவம் என்றால் அது ஊட்டி மலை ரயில் அனுபவம் தான். மலை பாதையில் ரயிலில் குறைவான வேகத்தில் மலைகளையும், இயற்கையையும் ரசித்துக்கொண்டே பயணிப்பதை யாரு தான் விருப்ப மாட்டார்கள். ஆங்கிலேயர்கள் காலத்தில் ஊட்டிக்கு மலைப்பாதை வழியாக ரயில் பாதை அமைக்கப்பட்டு நீராவி இன்ஜின் மூலம் ரயில்கள் இயக்கப்பட்டது.

இந்தியா முழுவதும் அப்பொழுது நீராவி இன்ஜின்கள் தான் இருந்தன. இதற்கு எரிபொருளாக நிலக்கரிகள் பயன்படுத்தப்பட்டன. அதன் பின்னர் இந்தியாவில் ரயில்வே துறையை மேம்படுத்தும் பணியில் மீட்டர் மற்றும் பிராட்கேஜ்கள் என மாற்றப்பட்டது. ஆனால் ஊட்டி மலைப்பாதையில் அப்படியாக மாற்றமுடியாது என்பதால் ஊட்டி மலை ரயில் இன்று அதே தடத்திலேயே பயணிக்கிறது.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஊட்டி மலை ரயில் பிரிட்டிஷ் காரர்கள் காலத்திலிருந்த அதே நிலக்கரியில் தான் இயக்கப்பட்டு வந்தது. பின்னர் இப்படியாக நிலக்கரியைப் பயன்படுத்துவதால் சுற்றுசூழல்கெட்டு போகிறது என எழுந்த குற்றச்சாட்டிற்குப் பின்னர் நிலக்கரிக்குப் பதிலாக அதே இன்ஜினில் பர்னஸ் ஆயிலை எரிபொருளாக மாற்றினார். இருந்தாலும் இன்றும் சுற்றுச்சூழல் மாசு அதிகமாகத் தான் இருந்து வருகிறது. ஆனால் இதையும் மாற்றி டீசல் இன்ஜின்களையே இயக்க வேண்டும் என்ற கோரிக்கை வந்தது.

ஆனால் ஊட்டி மலைப்பாதையில் உள்ள தண்டவாளத்தின் அளவிற்கு டீசல் இன்ஜின்கள் இல்லை. இதனால் வேழு வழியின்றி திருச்சி பொன்மலை ரயில் பணிமனையில் ஊட்டி மலை ரயிலுக்குப் பயன்படுத்தப்படும் வகையில் பிரத்தியேக ரயில் பெட்டிகளை வடிவமைக்கும் பணி துவங்கியது. பழைய இன்ஜினின் வெளிப்புற தோன்றத்தில் பழமை மாறாமல் அதே தோற்றத்தில் இருக்கும் படியும் உள்ளே உள்ள இன்ஜின் செயல்பாடு மட்டும் புதிய தொழிற்நுட்பத்தில்இயங்கும் படியும் தயாரிக்க முடிவு செய்யப்பட்டது.

இதற்காக மொத்தம் ரூ 9 கோடியே 30 லட்சம் செலவு செய்யப்பட்டது. கடந்த 7 மாதமாக இந்த ரயில் இன்ஜினை தயாரிக்கும் பணி நடந்தநிலையில் கடந்த மாதம் இந்த ரயில் முழுமையாகத் தயாராகி செயல்பாட்டிற்குக் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. இதன்படி கடந்த மாதம் 5ம் தேதி திருச்சியிலிருந்து மேட்டுப்பாளையத்திற்கு லாரி மூலம் இந்த ரயில் இன்ஜின் எடுத்துச் செல்லப்பட்டது.

மேட்டுப் பாளையத்தில் சரியாக ரயில்வே டிராக்கில் இந்த ரயில் பொருத்தப்பட்டது. இதன் பின்னர் மேட்டுப்பாளையம் ரயில்வே பணிமனையிலேயே இந்த ரயில் இன்ஜினிற்கு பல்வேறு சோதனைகள் நடத்தப்பட்டன. பின்னர். இந்த இன்ஜின் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து குன்னூர் ரயில் நிலையம் வரை சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இந்த சோதனை வெற்றிகரமாக முடிந்த நிலையில் விரைவில் இந்த இன்ஜின் ஊட்டி மலை ரயிலுக்காகப் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ரயில் இன்ஜின் முற்றிலும் தமிழ்நாட்டிலேயே தயாரான இன்ஜினாகும். இந்திய ரயில்வே பொறியாளர்களின் திறமையை வெளிப்படுத்தும் விதமான இந்த ரயில் இன்ஜின் உருவாக்கம் அமைத்துள்ளது. இந்த ரயில் பழைய நீராவி ரயிலைப் போல இல்லாமல் அதிக புகையை வெளியேற்றாமல் அதிக சத்தமும் இல்லாமல் இயங்கும் திறன் கொண்டது. மேலும் இந்த இன்ஜின் இயங்கும் போது இன்ஜினிலிருந்து அதிகமாகச் சத்தம் வெளியேறாத வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த இன்ஜினும் நீராவி இன்ஜின் தான் என்றாலும் 1600 லிட்டர் கொள்ளளவு கொண்ட டீசல் டேங்க் இந்த இன்ஜினில்பொருத்தப்பட்டுள்ளது. மேலும் தண்ணீரை நிரப்பி வைக்க 4500 லிட்டர் கொள்ளளவு கொண்ட 2 டேங்க் பயன்படுத்தப்படுகிறது. இதன்மூலம் நீராவிகள் உருவாக்கப்பட்டு அதன் மூலம் ரயில் மலை பாதைகளில் செல்லும். இந்த ரயில் இன்ஜினை உருவாக்கும் போது 1400 லிட்டர் டீசல் செலவாகும் எனக் கணிக்கப்பட்டது.

ஆனால் இந்த ரயிலை இயக்கி பார்க்கும் போது எதிர்பார்த்ததை விட 20-25 சதவீதம் எரிபொருள் குறைவாகவே செலவாகும். இது இந்த இன்ஜினை வடிவமைத்த பொறியாளர்களின் பாராட்டப்பட வேண்டிய திறமை தான். இந்த ரயில் இன்ஜின் என்னதான் அதிக வேகத்தில் இயங்கும் திறன் கொண்டிருந்தாலும் மலைப் பாதைகளில் பயணிப்பதால் குறைவான வேகத்திலேயே இந்த ரயிலை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி இந்த ரயில் 15 கி.மீ வேகத்தில் மட்டுமே இயங்கும். என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தற்போது தயாராக உள்ள இந்த இன்ஜின் எப்பொழுது முதல் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படும் என்ற தகவல் இல்லை. வெகு விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கலாம். இந்த ரயில் இன்ஜின் குறித்த உங்கள் கருத்துக்கள், ஊட்டி மலை பயணம் குறித்த உங்கள் அனுபவங்கள், மேலும் புதிய இன்ஜினை வடிவமைத்த பொறியாளர்களுக்கான வாழ்த்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்


Click it and Unblock the Notifications








