டீசல் எஞ்சின் ரயில் உண்மையிலேயே ஓடுவது மின் மோட்டாரில்தான்... தெரியுமா உங்களுக்கு... ?!!

டீசல் எஞ்சின் பொருத்தப்பட்ட ரயில்களில் உண்மையிலேயே மின்மோட்டார்கள்தான் சக்கரங்களை இயக்குகின்றன.

டீசல் எஞ்சின் இணைக்கப்பட்ட ரயில்கள் உண்மையிலேயே மின் மோட்டாரின் உந்து சக்தியில்தான் ஓடுகின்றன. என்ன ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? ஆம், இதுகுறித்து சற்று விரிவாகவே பார்ப்போம்.

டீசல் எஞ்சின் ரயில் உண்மையிலேயே ஓடுவது மின் மோட்டாரில்தான்... தெரியுமா உங்களுக்கு... ?!!

முக்கிய வழித்தடங்களை தவிர்த்து, பெரும்பாலான வழித்தடங்களில் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்ட ரயில்கள்தான் இயக்கப்படுகின்றன. ஆனால், டீசல் எஞ்சின் பொருத்தப்பட்ட ரயில்கள் உண்மையிலேயே டீசல் எஞ்சினில் ஓடுவதில்லை. மாறாக, டீசல் ரயில் எஞ்சினில் இருக்கும் மின் மோட்டார் துணையுடன்தான் இயங்குகின்றன.

டீசல் எஞ்சின் ரயில் உண்மையிலேயே ஓடுவது மின் மோட்டாரில்தான்... தெரியுமா உங்களுக்கு... ?!!

டீசல் ரயில் எஞ்சின்களில் சக்திவாய்ந்த மிகப்பெரிய ஜெனரேட்டர் கொடுக்கப்பட்டு இருக்கும். இந்த ஜெனரேட்டர்தான் உண்மையில் டீசல் எரிபொருளில் இயங்குகிறது.

டீசல் எஞ்சின் ரயில் உண்மையிலேயே ஓடுவது மின் மோட்டாரில்தான்... தெரியுமா உங்களுக்கு... ?!!

இந்த ஜெனரேட்டர் மூலமாக உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் மூலமாக சக்கரங்களில் இருக்கும் ராட்சத மின் மோட்டார்கள் ரயில் சக்கரத்தை ஓடச் செய்கின்றன. இதனை டிராக்ஷன் மோட்டார் என்றும் குறிப்பிடுவர்.

டீசல் எஞ்சின் ரயில் உண்மையிலேயே ஓடுவது மின் மோட்டாரில்தான்... தெரியுமா உங்களுக்கு... ?!!

டீசலில் இயங்கும் ஜெனரேட்டர் மூலமாக உற்பத்தி செய்யப்படும் மாறு மின்சாரம் கன்வெர்ட்டர் கருவியின் மூலமாக நேர் மின்சாரமாக மாற்றப்பட்டு டிராக்ஷன் மோட்டார்கள் இயக்கப்படுகின்றன.

டீசல் எஞ்சின் ரயில் உண்மையிலேயே ஓடுவது மின் மோட்டாரில்தான்... தெரியுமா உங்களுக்கு... ?!!

சக்கரங்கள் சுழல்வதற்கு தேவையான டார்க் எனப்படும் முறுக்கு விசையை இந்த மின்மோட்டார்கள் வழங்குகின்றன. எனவே, டீசல் எஞ்சின் என்று குறிப்பிட்டாலும், இவற்றை முறையாக டீசல் எலக்ட்ரிக் என்று கூறுவதுதான் சரியான பதமாக சொல்ல முடியும்.

டீசல் எஞ்சின் ரயில் உண்மையிலேயே ஓடுவது மின் மோட்டாரில்தான்... தெரியுமா உங்களுக்கு... ?!!

டீசல் எஞ்சின்களில் 12 முதல் 16 சிலிண்டர்கள் கொண்ட ராட்சத எஞ்சின் பயன்படுத்தப்படுகின்றன. இந்த டீசல் எஞ்சின் மூலமாக உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் மூலமாக எஞ்சினின் சக்கரங்களுக்கு இடையிலான ஆக்சில்களில் தலா ஒரு மின் மோட்டார் வீதம் 6 மின்மோட்டார்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன.

டீசல் எஞ்சின் ரயில் உண்மையிலேயே ஓடுவது மின் மோட்டாரில்தான்... தெரியுமா உங்களுக்கு... ?!!

சில டீசல் எஞ்சின் ரயில்களில் 4 மின்மோட்டார்கள் பொருத்தப்பட்டு இருக்கும். ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த டீசல் எஞ்சின்களில் சக்கரங்கள் நேரடியாக டீசல் எஞ்சின் மூலமாகவே இயக்கப்பட்டன. இதனை டீசல் ஹைட்ராலிக்ஸ் என்று குறிப்பிட்டனர்.

டீசல் எஞ்சின் ரயில் உண்மையிலேயே ஓடுவது மின் மோட்டாரில்தான்... தெரியுமா உங்களுக்கு... ?!!

ஆனால், டீசல் கார் உள்ளிட்ட வாகனங்களில் இருப்பதுபோலவே, டிரானஸ்மிஷன் அமைப்பு மற்றும் கியர்பாக்ஸ் மூலமாக இயக்கப்பட்டன. இது மிகவும் சிக்கலானதாக இருந்ததுடன், பராமரிப்புக்கும் உகந்ததாக இல்லை. மேலும், பழுது ஏற்படும் வாய்ப்புகளும் அதிகம் இருந்தன.

டீசல் எஞ்சின் ரயில் உண்மையிலேயே ஓடுவது மின் மோட்டாரில்தான்... தெரியுமா உங்களுக்கு... ?!!

ஆனால், தற்போது பயன்பாட்டில் இருக்கும் டீசல் எலக்ட்ரிக் ரயில் எஞ்சின்களில் கியர்பாக்ஸ் அமைப்பு கிடையாது. ஆக்சில்களில் பொருத்தப்பட்டு இருக்கும் ராட்சத மின் மோட்டார்கள் மூலமாக சக்கரங்கள் நேரடியாக இயக்கப்படுகின்றன.

டீசல் எஞ்சின் ரயில் உண்மையிலேயே ஓடுவது மின் மோட்டாரில்தான்... தெரியுமா உங்களுக்கு... ?!!

இதனால், பராமரிப்பு மிகவும் குறைவாக இருப்பதுடன், மின் மோட்டார்களை பொருத்தியதால் அதிக டார்க் திறனையும் பெற முடிகிறது. இதனால், எஞ்சினின் இழுவைத் திறன் மிகச் சிறப்பாக இருக்கிறது.

டீசல் எஞ்சின் ரயில் உண்மையிலேயே ஓடுவது மின் மோட்டாரில்தான்... தெரியுமா உங்களுக்கு... ?!!

நீண்ட கால அடிப்படையில் டீசல் எஞ்சின்களுக்கான எரிபொருள், பராமரிப்பு செலவு போன்றவை அதிகமாக இருக்கிறது. எனினும், மின்சார ரயில் எஞ்சின்களை இயக்குவதற்கு தேவைப்படும் மின்மயமாக்கப்பட்ட பாதைக்கான கட்டமைப்பு செலவுகளை ஒப்பிடும்போது இது சிறந்ததாகவே இருக்கிறது.

இதனால், டீசல் ரயில் எஞ்சின் பயன்பாட்டு சிறுக சிறுக குறையும் வாய்ப்பு இருக்கிறது. அடுத்த தசாப்தத்தில் நீராவி ரயில் எஞ்சின் போன்றே, டீசல் ரயில் எஞ்சினும் அருங்காட்சியகங்களில் மட்டுமே பார்க்கும் காட்சிப் பொருளாக மாறும் நிலை உள்ளது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Diesel locomotives or trains run using diesel fuel. If you believe so, then you are not entirely right. Modern diesel trains use electric motors known as 'traction motors' to supply power to the wheels.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X