“எனக்கு என் ஸ்கூட்டரே போதும்”... நடக்க முடியாவிடினும், உணவு டெலிவிரி பார்த்து அசத்தும் இளைஞர்!!

மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கை சிரமமானது என்பது உங்களுக்கே நன்றாக தெரிந்தே. ஆனால் அவர்களிடம் தான் தன்னம்பிக்கை அதிகமாக இருக்கும் என்பதை பல்வேறு சம்பவங்களில் பார்த்துள்ளோம். குறிப்பாக, கடந்த சில வருடங்களில் தொழிற்நுட்பங்களின் பயன்பாடு நம்மிடத்தில் அதிகரித்த பின்னர் மாற்று திறனாளிகள் பலர் தங்களது தேவைகளை தாங்களே பூர்த்தி செய்துக்கொள்ள முன்வந்துள்ளனர்.

வாகனங்களை தங்களது சவுகரியத்திற்கு ஏற்ப மாடிஃபை செய்து பயன்படுத்துவது கடந்த பல வருடங்களாக மாற்றுத்திறனாளிகள் செய்யக்கூடிய ஒன்றே. அத்தகைய வாகனங்களுடன், தற்கால மாடர்ன் தொழிற்நுட்பங்களையும் சேர்த்து பயன்படுத்துவதால் இத்தகையவர்களுக்கு பொருளாதார ரீதியாக மற்றவர்களை சார்ந்திருக்க வேண்டிய நிலை மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. இதற்கு நாம் இந்த செய்தியில் பார்க்கவுள்ள மாற்றுத்திறனாளி நபர் மிக சிறந்த உதாரணமாகும்.

கர்நாடகாவை சேர்ந்த மாற்றுத்திறனாளி நபரான இவர் தனது நான்கு சக்கர ஸ்கூட்டரில் ஸ்விகி செயலின் மூலமாக உணவு டெலிவிரி வேலையை பார்த்து வருகிறார். இவரை பற்றி 'ரியல் ஹீரோ' என்ற பெயரில் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவை தான் மேலே காண்கிறீர்கள். இதற்கு இந்த நபருக்கு எவரது உதவியும் தேவைப்படுவது இல்லை. பக்கவாட்டில் கூடுதலாக இரு சக்கரங்கள் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர் அவருக்கு இந்த வேலைக்கு போதுமானதாக உள்ளது.

வீடியோவில், இந்த இளைஞரால் மற்றவர்களை போல் சாதாரணமாக நடக்க முடியாததை காண முடிகிறது. இருப்பினும் தன்னம்பிக்கை உடன் இந்த உணவு டெலிவிரி வேலையை பார்க்கும் இவர், இந்த தொழிலுக்காக பெரிய பை ஒன்றையும் முதுகில் சுமந்தப்படி பயணிக்கிறார். இவ்வாறு சில சில சிரமங்கள் இருப்பதை உணர்ந்த உடன் வேலை பார்க்கும் மற்றவர்கள் இந்த இளைஞருக்கு தங்களால் முடிந்ததை உதவுவதையும் வீடியோவில் காண முடிகிறது.

நடக்க முடியாவிடினும், உணவு டெலிவிரி பார்த்து அசத்தும் இளைஞர்

குறிப்பாக, இந்த இளைஞர் சம்மந்தப்பட்ட உணவகத்திற்குள் வருவதற்கு முன்னரே அவருக்கான ஆர்டர் உணவுடன் உணவக ஊழியர் வெளியே வந்து கொடுத்துவிடுகிறார். அதன்பின் உணவு டெலிவிரி செய்ய வேண்டிய இடத்தை நோக்கி இவர் நகர்வதாக இந்த வீடியோ முடிகிறது. உண்மையில், இந்த மாற்றுத்திறனாளி இளைஞர் இதேபோன்று திறன் குறைப்பாட்டுடன் இருக்கும் நபர்களுக்கு பெரிய இன்ஸ்பிரேஷன் என்றுதான் சொல்ல வேண்டும்.

மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டுமின்றி, நல்ல கை, கால்களுடன் வேலை கிடைத்தும் முறையாக பணியாற்றாமல் இருப்போர்க்கும் இந்த இளைஞரது அன்றாட வேலை ஒரு சவுக்கடி ஆகும். இவ்வாறான மாற்றுத்திறனாளி நபர்களை தினந்தோறும் நாம் சாலைகளிலும், இரயில் & பேருந்து நிலையங்களிலும் காண்கிறோம். ஆனால் அவர்களில் பெரும்பான்மையானவர் பிச்சை எடுத்து கொண்டுதான் இருக்கின்றனர்.

நடக்க முடியாவிடினும், உணவு டெலிவிரி பார்த்து அசத்தும் இளைஞர்

அத்தகையவர்களுக்கு மத்தியில் உழைத்து வாழ வேண்டும் என நினைத்துள்ள இந்த இளைஞர் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறார். மற்றப்படி, இந்த இளைஞரின் பெயர் என்ன? கர்நாடகா மாநிலத்தில் எங்கு வசிக்கிறார்? என்பது குறித்த விபரங்கள் எதுவும் நமக்கு கிடைக்க பெறவில்லை. இந்த மாற்றுத்திறனாளி இளைஞர் தனது அன்றாட பயன்பாட்டிற்கு 4 சக்கரங்களுக்கு மாற்றியிருப்பது ஹீரோ டெஸ்டினி ஸ்கூட்டரை ஆகும்.

இவ்வாறு வாழ்க்கையில் தனது சொந்த காலில் நிற்க விரும்பும் மாற்றுத்திறனாளிகள் பலரை இதற்குமுன் நமது செய்தித்தளத்தில் பார்த்துள்ளோம். அவர்களில் பெரும்பாலானோர் இவ்வாறு டெலிவிரி வேலைகளை செய்து வருகின்றனர். ஆதலால் தொழிற்நுட்பங்களும், மொபைல் போனும் பல மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கையை மேம்படுத்தி உள்ளன என்றால் அது மறுக்கத்தக்கது அல்ல.

Article Published On: Thursday, February 23, 2023, 14:40 [IST]
English summary
Differently abled person in karnataka working as delivery man
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+