ரூ.100 கோடி மோசடி... திலீப் சாப்ரியாவின் மகன், சகோதரிக்கும் போலீஸ் வலைவீச்சு!

டிசி அவந்தி கார் விற்பனையில் ரூ.100 கோடி வரை மோசடி நடந்திருப்பது தெரிய வந்துள்ளதால், தலைமறைவாக உள்ள திலீப் சாப்ரியாவின் மகன் மற்றும் மகளை மும்பை குற்றப்புலனாய்வு போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ரூ.100 கோடி மோசடி... திலீப் சாப்ரியாவின் மகன், சகோதரிக்கும் போலீஸ் வலைவீச்சு!

மும்பையை சேர்ந்த டிசி டிசைன் நிறுவனம் கார்களை கஸ்டமைஸ் செய்து தருவதில் இந்தியாவின் முன்னணி நிறுவனமாக இருந்து வந்தது. மேலும், டிசி அவந்தி என்ற ஸ்போர்ட்ஸ் கார் மாடலையும் தயாரித்து விற்பனை செய்து வந்தது. இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட முதல் ஸ்போர்ட்ஸ் கார் மாடல் என்ற பெருமையை இந்த கார் பெற்றது.

ரூ.100 கோடி மோசடி... திலீப் சாப்ரியாவின் மகன், சகோதரிக்கும் போலீஸ் வலைவீச்சு!

இந்த நிலையில், டிசி அவந்தி கார் விற்பனையில் டிசி டிசைன் நிறுவனத்தின் உரிமையாளர் திலீப் சாப்ரியா மிகப்பெரிய மோசடியில் ஈடுபட்டு வந்தது அம்பலமானது. இதையடுத்து, அவர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

ரூ.100 கோடி மோசடி... திலீப் சாப்ரியாவின் மகன், சகோதரிக்கும் போலீஸ் வலைவீச்சு!

இதைத்தொடர்ந்து, இந்த வழக்கு விசாரணையை மும்பை குற்றப் புலனாய்வு போலீசார் முடுக்கிவிட்டுள்ளனர். இதில், டிசி அவந்தி கார் விற்பனையில் ரூ.100 கோடி வரை திலீப் சாப்ரியா மோசடி செய்திருப்பது தெரிய வந்துள்ளது.

ரூ.100 கோடி மோசடி... திலீப் சாப்ரியாவின் மகன், சகோதரிக்கும் போலீஸ் வலைவீச்சு!

இதையடுத்து, இந்த மோசடியில் தொடர்புடையதாக கருதப்படும் டிசி டிசைன் நிறுவனத்தில் முக்கிய பொறுப்புகளில் இருந்த திலீப் சாப்ரியாவின் மகன், சகோதரி மற்றும் நிறுவனத்தின் இயக்குனர்களா சொக்கலிங்கம் கதிரவன் மற்றும் சீத்தாராமன் ஆகியோரை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

ரூ.100 கோடி மோசடி... திலீப் சாப்ரியாவின் மகன், சகோதரிக்கும் போலீஸ் வலைவீச்சு!

மேலும், தலைமறைவாக உள்ள திலீப் சாப்ரியாவின் மகன் போனிட்டோ சாப்ரியா மற்றும் சகோதரி காஞ்சன் ஆகியோரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

ரூ.100 கோடி மோசடி... திலீப் சாப்ரியாவின் மகன், சகோதரிக்கும் போலீஸ் வலைவீச்சு!

இதனிடையே, டிசி டிசைன் நிறுவனத்தில் இருந்த 14 டிசி அவந்தி ஸ்போர்ட்ஸ் கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அத்துடன், அங்கு இறக்குமதி செய்து வைக்கப்பட்டு இருந்த 40 கார் எஞ்சின்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

ரூ.100 கோடி மோசடி... திலீப் சாப்ரியாவின் மகன், சகோதரிக்கும் போலீஸ் வலைவீச்சு!

டிசி அவந்தி கார்களை ஒரு மாநிலத்தில் விற்று பின்னர் அந்த காரை போலி பெயரில் தனது நிறுவனத்தின் பெயரில் வாங்கி கடன் பெற்றுள்ளனர். பின்னர், அந்த காரை வேறு மாநில வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்துள்ளனர்.

ரூ.100 கோடி மோசடி... திலீப் சாப்ரியாவின் மகன், சகோதரிக்கும் போலீஸ் வலைவீச்சு!

கடன் மோசடி, ஜிஎஸ்டி வரி மோசடி என மிகவும் திட்டமிட்டு இந்த மோசடிகளில் டிசி நிறுவனத்தின் அதிபர் திலீப் சாப்ரியா ஈடுபட்டுள்ளார். பல கார்கள் மீது வாங்கப்பட்ட கடன்கள் வாராக் கடன் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனால், திலீப் சாப்ரியா மீதான பிடி இறுகி இருக்கிறது.

Via- TOI

Most Read Articles

English summary
Mumbai Police has started rigorous investigation on DC design company finance scam and estimated worth Rs.100 Crore.
Story first published: Tuesday, January 5, 2021, 15:20 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X