ஷாரூக்கானின் தில்வாலே திரைப்படத்தில் பிரம்மாண்ட கார் சேஸிங் காட்சிகள்!

By Saravana

நாளை மறுதினம் பாலிவுட் பாதுஷா ஷாருக்கான் மற்றும் நடிகை கஜோல் ஆகியோர் நடிப்பில் வெளியாக இருக்கும் தில்வாலே திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சென்னை எக்ஸ்பிரஸ், சிங்கம் படங்கள் புகழ் ஹோஹித் ஷெட்டிதான் இந்த படத்தையும் இயக்கியிருக்கிறார்.

இந்த திரைப்படத்தில் முக்கிய அம்சமாக கார் சேஸிங் காட்சிகள் மிக பிரம்மாண்ட முறையில் படமாக்கப்பட்டிருக்கிறது. அந்த காட்சிகள் படமாக்கிய விதம் குறித்த திரைக்கு பின்னால் வீடியோ வெளியாகியிருக்கிறது. கடும் சிரத்தையுடன் படமாக்கப்பட்டு இருக்கும் அந்த காட்சிகள் மற்றும் கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

ஹாலிவுட்டுக்கு இணையாக...

ஹாலிவுட்டுக்கு இணையாக...

ஜேம்ஸ்பாண்ட் மற்றும் ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் போன்ற ஹாலிவுட் படங்களில் கார் சேஸிங் காட்சிகள் மிக பிரம்மாண்டமாக உருவாக்கப்படும். அதேபோன்றதொரு முயற்சியை இந்த படத்தில் செய்துள்ளனர்.

விலையுயர்ந்த கார்கள்

விலையுயர்ந்த கார்கள்

இந்த திரைப்படத்தில் மூன்று ஜாகுவார் கார்கள், ஹம்மர் எஸ்யூவிகள், ஆடி மற்றும் பிஎம்டபிள்யூ என ஏராளமான விலையுயர்ந்த கார்கள் பயன்படுத்தப்பட்டு கார் ஸ்டன்ட் மற்றும் சேஸிங் காட்சிகள் படமாக்கப்பட்டு இருக்கின்றன.

வெளிநாட்டு ஸ்டன்ட் குழு

வெளிநாட்டு ஸ்டன்ட் குழு

சர்வதேச அளவில் பிரபலமான பல்கேரியா மற்றும் தென் ஆப்ரிக்க நாடுகளை சேர்ந்த ஸ்டன்ட் குழுவினர் கார் சேஸிங் காட்சிகளில் முக்கிய பங்காற்றியிருக்கின்றனர். உள்நாடு மற்றும் வெளிநாடு என மொத்தமாக 200 ஸ்டன்ட் கலைஞர்கள் உயிரை பணயம் வைத்து பணியாற்றியிருக்கின்றனர்.

ஸ்கேல் மாடல்கள்

ஸ்கேல் மாடல்கள்

கார் சேஸிங் காட்சிகளை படமாக்குவதற்கு முன்பாக ஸ்கேல் மாடல்களை உருவாக்கி, எவ்வாறு படமாக்குவது என்பதை ட்ரையல் செய்து, அதன் அடிப்படையில் கார் சேஸிங் காட்சிகளை படமாக்கியிருக்கின்றனர்.

தத்ரூபம்

தத்ரூபம்

கார் சேஸிங் காட்சிகள் மிகவும் தத்ரூபமாக படமாக்கப்பட்டிருக்கிறது. ட்ரோன் கேமரா மற்றும் ஸ்கேட்டிங் செய்து பல காட்சிகளை ரிஸ்க் எடுத்து படமாக்கியிருக்கின்றனர்.

 உயிரை பணயம் வைத்து...

உயிரை பணயம் வைத்து...

சில கார் சேஸிங் காட்சிகளில் உயிரை பணயம் வைத்து ஸ்டன்ட் கலைஞர்கள் ஈடுபட்டிருப்பது திரைக்கு பின்னால் வீடியோ மூலமாக தெரிய வருகிறது.

பொருட்செலவு

பொருட்செலவு

தில்வாலே படத்தில் கார் சேஸிங் காட்சிகள் மிகவும் முக்கியமாக பேசப்படும். அதற்காக, பெரும் பொருட்செலவில் கார் சேஸிங் காட்சிகளை திட்டமிட்டு எடுத்துள்ளனர்.

ரசிகர்களை கவரும்

ரசிகர்களை கவரும்

கார் ட்ரிஃப்ட், சேஸிங் உள்ளிட்ட மயிர்கூச்செரிய செய்யும் பல காட்சிகள் அடங்கியிருப்பதால், சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி, கார் ஸ்டன்ட்டுகளை விரும்புவர்களுக்கும் இந்த படம் ஒரு விருந்தாக அமையும்.

ரிலீஸ்

ரிலீஸ்

நாளை மறுதினம் தில்வாலே திரைப்படம் திரைக்கு வருகிறது. கார் சேஸிங் எடுக்கப்பட்ட விதம் குறித்த திரைக்கு பின்னால் வீடியோவை அடுத்த ஸ்லைடில் காணலாம்.

வீடியோ

கார் சேஸிங் மற்றும் படத்தில் இடம்பெற்றிருக்கும் சண்டை காட்சிகள் குறித்து தில்வாலே குழுவினர் வெளியிட்டிருக்கும் கிட்டத்தட்ட 12 நிமிடம் ஓடும் இந்த வீடியோவில், காட்சிகள் படமாக்கப்பட்ட விதம் குறித்து மிக தெளிவாக பார்க்க முடிகிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, December 16, 2015, 11:17 [IST]
English summary
In the video, Rohit Shetty talks about the hard work and commitment that goes behind filming action scenes. Bringing together a team of stunt specialists from Bulgaria, India and South Africa, the Dilwale team has poured 'blood and sweat' into the film.
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+