2 வயது மகன் இருக்கும் போது விவாகரத்தா? இந்த பிரபல தம்பதிகிட்ட இவ்வளவு காஸ்டலியான காரெல்லாம் இருக்குதா?

நடிகர்கள் திபிகா ககர் மற்றும் சோயப் இப்ராஹிம், ஏழு வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டு ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். சமீபத்தில் இந்த தம்பதிகள் விவாகரத்து செய்துகொள்ளப்போவதாக வதந்திகள் எழுந்தன. இருப்பினும், சோயப் இதை ஒரு லைவ் வீடியோ மூலம் மறுத்துள்ளார், அந்த வதந்தி உண்மையல்ல என்று தெளிவுபடுத்தினார். இந்த ஜோடி வதந்திகளை நகைச்சுவை முறையில் புறம் தள்ளி அவர்கள் அதைப் பற்றி கவலைப்படவில்லை என்பதைக் காட்டியுள்ளனர். இந்நிலையில் இவர்களின் காஸ்ட்லியான கார் கலெக்ஷன் வைரலா பரவி வருகிறது

திபிகா மற்றும் சோயப்பின் காதல் "சசரல் சிமர் கா" படத்தின் செட்டில் 2011 இல் தொடங்கியது. அந்த நேரத்தில், திபிகா விமானப் போக்குவரத்துத் துறை ஊழியர் ரௌனக் சாம்சனைக் கல்யாணம் செய்திருவந்தாக கூறப்படுகிறது. அவர்களின் காதல் 2015 ல் விவாகரத்து செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இப்போது, சோயப் உடன் சேரந்து திபிகாவிற்கு ருஹான் என்ற மகன் இருக்கிறான். இவர்கள் குடும்பமாக சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர் .

Dipika Kakar Shoaib Ibrahim Car Collection

இந்த ஜோடி தங்கள் முதல் ஆண்டு திருமணவிழாவைக் கொண்டாட BMW X4 கார் வாங்கினார்கள். ஆரம்பத்தில் ரூ. 71.90 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வந்த இந்த இந்த கார் 2993 cc பெட்ரோல் இன்ஜின் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் உடன் விற்பனையாகிறது. இது 8 kmpl மைலேஜைக் கொடுக்கிறது மற்றும் 6 சிலிண்டர் வடிவமைப்பில் ஐந்து பயணிகளுக்கு அமர்ந்து செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

ஹிந்தி பிக் பாஸ் 12 இல் இரண்டாவது முறையாக வென்ற பிறகு, திபிகா BMW 6 Series காரை வாங்கும் தனது கனவை நிறைவேற்றினார். இந்த கார் ரூ. 63.90 லட்சம் விலையில் விற்பனையாகி வருகிறது, இது இரண்டு டீசல் இன்ஜ ன்கள் (1995 cc மற்றும் 1998 cc) மற்றும் ஒரு பெட்ரோல் இன்ஜின் (1998 cc) கொண்டுள்ளது. இந்த கார் 13.32 முதல் 18.65 kmpl வரை மைலேஜைகொடுக்கிறது. இந்த காரும் அவர்களிடம் உள்ள காஸ்ட்லியான கார் தான்.

Dipika Kakar Shoaib Ibrahim Car Collection

BMW 6 Series காரை பொருத்தவரை 124 mm கிரவுண்ட் கிளியரன்ஸை கொண்டுள்ளது மற்றும் நான்கு சிலிண்டர்களைக் கொண்ட 4 சீட்டர் வடிவமைப்பில் இந்த கார் உள்ளது. அதன் அளவுகளை பொருத்தவரை நீளம் 5091 mm, அகலம் 1902 mm மற்றும் வீல் பேஸ் 2741 mm ஆகும்.

2022 இல், திபிகா மற்றும் சோயப் தங்கள் கார் கலெக்ஷனில் BMW X7 காரை சேர்த்தனர், இதன் விலை ரூ. 1.18 கோடி முதல் ரூ. 1.78 கோடி வரை உள்ளது. இந்த மாடல் டீசல் (2993 cc) மற்றும் பெட்ரோல் (2998 cc) இரண்டு இன்ஜின்களையும் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷனையும் கொண்டுள்ளது.

Dipika Kakar Shoaib Ibrahim Car Collection

BMW X7 காரை பொருத்தவரை 11.29 முதல் 14.31 kmpl வரை மைலேஜ் கொடுக்கிறது மற்றும் 6 சிலிண்டர் வடிவமைப்பில் 6 பேர் வசதியாக அமர்ந்து செல்லும் வடிவமைப்பில் இந்த கார் இருக்கிறது. இதன் அளவுகளை பொருத்தவரை 5181 mm நீளம், 2218 mm அகலம் மற்றும் 2651 mm வீல் பேஸை கொண்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த ஜோடியின் பிரமிக்கத்தக்க கார் கலெக்ஷ் ரசிகர்கள் மற்றும் ஃபாலோயர்ஸ் இடையே மிகவும் பிரபலமாகிவிட்டது. பொதுவாக இப்படியான பிரபலங்கள் விவாகரத்து செய்யப்போவதாக வெளியாகும் வதந்திகள் அடிக்கடி நடப்பது தான் இதை பெரியதாக எடுக்கொள்ளாமல் கடந்து செல்லும் இவர்கள் குணம் நிச்சயம் பாராட்டப்பட வேண்டியது.

More from DriveSpark

Article Published On: Wednesday, March 5, 2025, 13:16 [IST]
English summary
Dipika Kakar and Shoaib Ibrahim recently faced divorce rumours, which they dispelled with humour. The couple celebrates their love with a stunning BMW collection, including the X4, 6 Series, and X7, showcasing their bond while enjoying luxury cars.
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X