தஞ்சாவூரில் பிறந்து பாலிவுட்டை கலக்கி கொண்டிருக்கும் டைரக்டர்!! புதுசா வாங்கியிருக்கும் காஸ்ட்லீ கார்!
தமிழ்நாட்டில் பிறந்து பாலிவுட் சினிமாவை கலக்கிக் கொண்டிருக்கும் இயக்குனர் ஒருவர் விலையுயர்ந்த மெர்சிடிஸ்-பென்ஸ் காரை வாங்கி உள்ளார். காருடன் அந்த திரைப்பட டைரக்டர் நிற்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் பலரது கவனத்தை பெற்றுள்ளது. யார் இந்த இயக்குனர்? எந்த மாதிரியான பென்ஸ் காரை இவர் வாங்கியுள்ளார்? வாருங்கள் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் இருந்து மிக தொலைவில் இருந்தாலும், மும்பைக்கும் நம் தமிழ் மக்களுக்கும் ஏதோ ஒரு பிணைப்பு உள்ளது. மராட்டிய மக்களுக்கு இணையாக, கடந்த காலங்களில் இருந்து மும்பையையும், அதனை சுற்றியுள்ள பகுதிகளையும் தமிழர்கள் ஆதிக்கம் செலுத்தி உள்ளனர். இந்த வகையில், பாலிவுட் சினிமாவிலும் தமிழ் மக்களின் கால் தடம் பதியாமல் இல்லை.

உதாரணத்திற்கு, ஏ.ஆர் ரகுமான், நடிகர் தனுஷ், இயக்குனர் மணிரத்னம் என தமிழ் சினிமாவை சேர்ந்தவர்கள் பாலிவுட்டில் வெற்றியை கண்டுள்ளனர். அந்த வரிசையில் சமீப காலமாக பாலிவுட்டில் பல வெற்றி படங்களை கொடுத்து வருபவர் இயக்குனர் ஆர். பாலகிருஷ்ணன். சுருக்கமாக பால்கி என அழைக்கப்படும் இவர் தமிழ்நாட்டின் தஞ்சாவூரில் உள்ள கும்பகோணத்தில் 1964ஆம் ஆண்டு பிறந்தவர்.
ஆரம்பத்தில் தமிழ் சினிமாவில் திரைப்படங்களுக்கு திரைக்கதைகளை எழுதி வந்த பால்கி 2007ஆம் ஆண்டில் நடிகர் அமிதா பச்சனை வைத்து சீனி கம் என்கிற படத்தை இயக்கி பாலிவுட்டில் அறிமுகமாகினார். அதன்பின், பால்கி இயக்கிய ஷமிதாப், பேட்மேன் உள்ளிட்ட படங்கள் நல்ல கவனத்தை பெற்றன. இதுமட்டுமின்றி, 2019இல் இந்தியா முழுவதும் திரைக்கு வந்த மிஷன் மங்கள் திரைப்படத்தின் கதையாசிரியர் பால்கி ஆவார்.
கடைசியாக இவரது இயக்கத்தில் இருந்து கடந்த 2023ஆம் ஆண்டில் நடிகர் அபிஷேக் பச்சனின் நடிப்பில் கூமர் என்கிற திரைப்படம் வெளிவந்தது. இந்த நிலையில், இயக்குனர் ஆர் பாலகிருஷ்ணன் புதியதாக மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி.எல்.இ என்கிற சொகுசு காரை வாங்கியுள்ளார். அப்சிடியன் கருப்பு நிறத்தில் ஜி.எல்.இ கார் பால்கியின் இருப்பிடத்திற்கு நேரில் வந்து டெலிவிரி செய்யப்பட்டுள்ளது.
ஜி.எல்.இ ஆனது மெர்சிடிஸ்-பென்ஸின் விலையுயர்ந்த 5-சீட்டர் லக்சரி எஸ்யூவி கார் ஆகும். அப்சிடியன் கருப்பு மட்டுமின்றி, போலார் வெள்ளை, செலெனைட் கிரே, ஹை-டெக் சில்வர் மற்றும் சோடாலைட் நீல நிறத்திலும் ஜி.எல்.இ கார் கிடைக்கிறது. பால்கி வாங்கியிருப்பது மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி.எல்.இ காரின் எண்ட்ரீ-லெவல் 300டி வேரியண்ட் ஆகும். அதாவது, டீசல் என்ஜின் உடன் ஜி.எல்.இ காரை பால்கி வாங்கியுள்ளார்.

இந்த வேரியண்ட்டில் பொருத்தப்படுகின்ற 2 லிட்டர் 4-சிலிண்டர் டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 269 பிஎஸ் மற்றும் 550 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. என்ஜின் உடன் இணைக்கப்படும் 9-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வாயிலாக என்ஜினின் இயக்க ஆற்றல் காரின் 4 சக்கரங்களுக்கும் ஒரே நேரத்தில் செல்கிறது.
300டி வேரியண்ட் மட்டுமின்றி, 450 மற்றும் 450டி வேரியண்ட்களிலும் ஜி.எல்.இ காரை இந்தியாவில் மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் விற்பனை செய்கிறது. இந்த வேரியண்ட்களில் மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி.எல்.இ காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.96.65 லட்சத்தில் இருந்து ரூ.1.15 கோடி வரையில் உள்ளன. காருக்கு உள்ளே எந்த நிறத்தை பால்கி தேர்வு செய்துள்ளார் என்பது தெரியவில்லை. இந்தியாவில் பழுப்பு, கருப்பு மற்றும் பிரவுன் நிறங்களில் ஜி.எல்.இ காரின் உட்பக்க கேபின் கிடைக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இயக்குனர் பால்கி வாங்கியிருக்கும் பென்ஸ் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.96.65 லட்சமாக இருந்தாலும், ஆன்-ரோடு விலை கிட்டத்தட்ட ரூ.1.50 கோடி வந்துவிடும். இவ்வளவு தொகையில் ஒரு பென்ஸ் காரை வாங்குவது டைரக்டர் பால்கி போன்றோருக்கு பெரிய விஷயமே கிடையாது.


Click it and Unblock the Notifications








