எடுத்தது 4 படமா இருந்தாலும் எல்லாமே ஹிட்டு... மஹிந்திரா ஷோரூமில் பிரபல திரைப்பட இயக்குனர்!!

இந்தியாவில் தற்போதைக்கு பலர் விரும்பும் ஆஃப்-ரோடு எஸ்யூவி வாகனம், மஹிந்திரா தார் (Mahindra Thar) என சொன்னால் அது மிகையில்லை. ஏனெனில், அந்த அளவிற்கு ஒவ்வொரு மாதத்திலும் ஆயிரக்கணக்கிலான மக்கள் தார் வாகனத்தை வாங்கி வருகின்றனர். இதற்காகவே, கடந்த 2024ஆம் ஆண்டு இறுதியில் தார் ராக்ஸ் (Thar ROXX) என்கிற 5 கதவுகளை கொண்ட தார் வாகனத்தை மஹிந்திரா அறிமுகம் செய்தது.

அதன்பின், தாரின் விற்பனை இன்னும் உச்சத்திற்கு சென்றது. ஏனெனில், 3-கதவு தார் வாகனத்தில் இருந்த ஒரே பிரச்சனை என்னவென்றால், அதனுள் பயணிகளால் எளிதாக நுழைந்து வெளியேற முடியவில்லை என்பதாகும். இதனால், அந்த குறையை களையும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட தார் ராக்ஸ் வாகனத்தை பலரும் போட்டி போட்டுக் கொண்டு வாங்கி வருகின்றனர்.

director mohan g buys brand-new mahindra thar roxx

அந்த வகையில் தற்போது, பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் மோகன் ஜி (Mohan G) அவர்கள் புதியதாக மஹிந்திரா தார் ராக்ஸ் வாகனம் ஒன்றை வாங்கியுள்ளார். பழைய வண்ணாரப்பேட்டை என்கிற சென்னையை கதைக்களமாக கொண்ட ஆக்‌ஷன் திரைப்படத்தை எடுத்து கோலிவுட்டில் தனது அறிமுகத்தை பதிவு செய்த மோகன் ஜி அவர்கள் அதன்பின் திரௌபதி, ருத்ர தாண்டவம், பகாசூரன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி கவனத்தை ஈர்த்தார்.

இவரது இயக்கத்தில் அடுத்ததாக திரௌபதி 2 திரைப்படம் உருவாகி வரும் நிலையில், கண்ணை கவரும் சிவப்பு நிறத்திலான தார் வாகனத்தை டெலிவிரி (Delivery) பெறும் வீடியோவை மோகன் ஜி அவர்களே தனது முகநூல் (Facebook) பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவரது இந்த காணொளிக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

director mohan g buys brand-new mahindra thar roxx

மனைவி மற்றும் குழந்தைகளுடன் மஹிந்திரா ஷோரூமுக்கு சென்று பிராண்ட்-நியூ தார் ராக்ஸ் வாகனத்தை மோகன் ஜி டெலிவிரி பெற்றுள்ளார். இந்த வாகனத்தை வாங்குவதற்காக தனக்கு பரிந்துரைத்த கோகிலா சுந்தர் என்பவருக்கு தனது நன்றியையும் முகநூல் பதிவில் மோகன் ஜி குறிப்பிட்டுள்ளார். இந்த திரைப்பட இயக்குனர் வாங்கியிருக்கும் தார் ராக்ஸ் வாகனத்தின் சிவப்பு நிறத்தை டாங்கோ சிவப்பு (Tango Red) என மஹிந்திரா நிறுவனம் அழைக்கிறது.

2024ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட மஹிந்திரா தார் ராக்ஸ், வழக்கமான 3-கதவு தாரை விட குடும்பங்களுக்கு ஏற்றதாகவும், நடைமுறை பயன்பாட்டிற்கு உகந்ததாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. 2025 மாடலாக, இது ஆஃப்-ரோடு திறனையும் நவீன வசதிகளையும் ஒருங்கிணைத்து வழங்குகிறது. இதற்காக, எலெக்ட்ரானிக் லாக்கிங் டிஃபெரென்ஷியல் உடன் 4எக்ஸ்ப்ளோர் சிஸ்டம் தார் ராக்ஸில் வழங்கப்படுகிறது.

director mohan g buys brand-new mahindra thar roxx

இந்த எஸ்யூவி 1997சிசி கொண்ட 2.0 லிட்டர் எம்-ஸ்டாலியோன் (mStallion) டர்போ பெட்ரோல் மற்றும் 2184சிசி கொண்ட 2.2 லிட்டர் எம்-ஹாவ்க் (mHawk) டர்போ டீசல் என இரண்டு என்ஜின் ஆப்ஷன்களுடன் வருகிறது. ஆனால் இந்த இரண்டில் எந்த என்ஜின் உடன் தார் ராக்ஸ் வாகனத்தை இயக்குனர் மோகன் ஜி வாங்கியுள்ளார் என்பது தெரியவில்லை.

இதில் பெட்ரோல் என்ஜின் 160 முதல் 174 பிஎச்பி ஆற்றலையும், டீசல் என்ஜின் 150 முதல் 172 பிஎச்பி ஆற்றலையும் உற்பத்தி செய்கிறது. இரு என்ஜின்களும் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் உடன் கிடைக்கின்றன. பெட்ரோல் வேரியண்ட்கள் ரியர்-வீல் டிரைவ் (RWD) ஆப்ஷனில் கிடைக்கின்றன. அதேவேளையில் டீசல் வேரியண்ட்கள் RWD மற்றும் 4-வீல் டிரைவ் (4WD) ஆப்ஷன்களில் கிடைக்கின்றன.

mahindra thar roxx

தார் ராக்ஸ் வாகனத்தின் நீளம் 4428மிமீ, அகலம் 1870மிமீ, உயரம் 1923மிமீ மற்றும் வீல்பேஸ் 2850மிமீ ஆகும். இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ் (தரையில் இருந்து வாகனத்தின் அடிப்பகுதியின் உயரம்) 226மிமீ. இது 447 லிட்டர் கொள்ளளவில் பூட் ஸ்பேஸ், 57 லிட்டர் கொள்ளளவில் எரிபொருள் டேங்க் மற்றும் 650மிமீ ஆழ நீரிலும் இயங்கும் திறன் ஆகியவற்றை கொண்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சிலர் எதிர்மறையான கருத்துகளை தெரிவித்தாலும் சினிமாவில் நான்கு திரைப்படங்களை எடுத்து, தற்போது 5வது படத்திற்கு தயாராகி கொண்டிருக்கும் இயக்குனர் மோகன் ஜி அவர்களின் வெற்றியின் அடையாளமே அவரது இந்த புத்தம்-புதிய மஹிந்திரா தார் ராக்ஸ் வாகனம் ஆகும். மோகன் ஜி குடும்பத்துடன் தொலைத்தூர பயணங்களை மேற்கொள்வதற்கு இந்த வாகனம் ஏற்றதாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Thursday, December 25, 2025, 16:34 [IST]
English summary
Director mohan g bought brand new mahindra thar roxx in red colour check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X