பிரபல சினிமா இயக்குனரின் செயலால் கடும் அதிர்ச்சி... வீடியோ வைரல் ஆனதால் நெட்டிசன்கள் கொந்தளிப்பு...

பிரபல சினிமா இயக்குனர் ஒருவரின் செயல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ வைரல் ஆனதால், நெட்டிசன்கள் கொந்தளித்து போய் உள்ளனர்.

 பிரபல சினிமா இயக்குனரின் செயலால் கடும் அதிர்ச்சி... வீடியோ வைரல் ஆனதால் நெட்டிசன்கள் கொந்தளிப்பு...

இந்திய திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் ராம் கோபால் வர்மா. இவரை சுற்றி ஏதேனும் ஒரு சர்ச்சை வலம் வந்து கொண்டேதான் இருக்கும். ராம் கோபால் வர்மாவையும், சர்ச்சைகளையும் பிரிக்கவே முடியாது. ராம் கோபால் வர்மா என்றாலே, சர்ச்சைகள்தான் ஒருவரின் நினைவிற்கு முதலில் வரும். இந்த சூழலில் தற்போது புதிய சர்ச்சை ஒன்றில் ராம் கோபால் வர்மா சிக்கி கொண்டுள்ளார்.

 பிரபல சினிமா இயக்குனரின் செயலால் கடும் அதிர்ச்சி... வீடியோ வைரல் ஆனதால் நெட்டிசன்கள் கொந்தளிப்பு...

இது அவராகவே தேடிக்கொண்டது என்றும் கூட சொல்லலாம். ஐஸ்மார்ட் சங்கர் என்ற புதிய தெலுங்கு படம் தற்போது வெளியாகியுள்ளது. இதனை காண்பதற்காக ஐதராபாத் நகரில் உள்ள ஒரு தியேட்டருக்கு ராம் கோபால் வர்மா சமீபத்தில் சென்றார். ஆனால் அவர் சாதாரணமாக செல்லவில்லை. ராயல் என்பீல்டு கிளாசிக் பைக்கில் 'ட்ரிபிள்ஸ்' அடித்துள்ளார் ராம் கோபால் வர்மா.

 பிரபல சினிமா இயக்குனரின் செயலால் கடும் அதிர்ச்சி... வீடியோ வைரல் ஆனதால் நெட்டிசன்கள் கொந்தளிப்பு...

ராம் கோபால் வர்மா மற்றும் மற்றொரு இயக்குனரான அஜய் பூபதி ஆகியோர் ராயல் என்பீல்டு கிளாசிக் பைக்கின் பின்னால் அமர்ந்து கொள்ள, மற்றொரு இயக்குனரான அகஸ்தியா ஐதராபாத்தின் பிஸியான சாலைகளில் பைக்கை ஓட்டி வந்தார். இவர்கள் மூவரும் ஒரே பைக்கில் தியேட்டரை வந்தடைந்தனர். போதாக்குறைக்கு அவர்கள் மூவருமே ஹெல்மெட் அணியவில்லை.

 பிரபல சினிமா இயக்குனரின் செயலால் கடும் அதிர்ச்சி... வீடியோ வைரல் ஆனதால் நெட்டிசன்கள் கொந்தளிப்பு...

இரு சக்கர வாகனம் என்பது இருவர் மட்டுமே பயணிப்பதற்கானது. இரு சக்கர வாகனங்களில் மூன்று பேர் பயணம் செய்வது என்பது இந்தியாவை பொறுத்தவரை சட்ட விரோதம். அது மிகவும் ஆபத்தானதும் கூட. இதுதவிர இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்கள் ஹெல்மெட் அணிவதும் இந்தியாவில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

 பிரபல சினிமா இயக்குனரின் செயலால் கடும் அதிர்ச்சி... வீடியோ வைரல் ஆனதால் நெட்டிசன்கள் கொந்தளிப்பு...

யாரிஸ் - மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில்! டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா?

ஆனால் இந்த 2 விதிகளையும் அவர்கள் மூவரும் ஒரு சேர மீறியுள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவின் மற்றொரு விசேஷம் என்னவென்றால், ராம் கோபால் வர்மாதான் இதனை வெளியிட்டுள்ளார். ராம் கோபால் வர்மாவின் டிவிட்டர் பக்கத்தில் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

 பிரபல சினிமா இயக்குனரின் செயலால் கடும் அதிர்ச்சி... வீடியோ வைரல் ஆனதால் நெட்டிசன்கள் கொந்தளிப்பு...

அத்துடன் போலீசார் எங்கே? அவர்கள் அனைவரும் தியேட்டருக்குள் ஐஸ்மார்ட் சங்கர் படம் பார்த்து கொண்டிருப்பார்கள் என நினைக்கிறேன் என நக்கலாகவும் பதிவிட்டுள்ளார் ராம் கோபால் வர்மா. ராம் கோபால் வர்மாவின் இந்த செயலுக்கு சமூக வலை தளங்களில் நெட்டிசன்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

 பிரபல சினிமா இயக்குனரின் செயலால் கடும் அதிர்ச்சி... வீடியோ வைரல் ஆனதால் நெட்டிசன்கள் கொந்தளிப்பு...

சாலை விபத்துக்களால் அதிக உயிர்களை பறிகொடுக்கும் நாடுகளில் ஒன்று இந்தியா. இங்கு ஒரு ஆண்டுக்கு சுமார் 1.50 லட்சம் பேர் சாலை விபத்துக்களால் உயிரிழந்து வருகின்றனர். வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை மீறுவதே இதற்கு மிக முக்கியமான காரணமாக உள்ளது. எனவே வாகன ஓட்டிகள் அனைவரையும் போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க வைக்க அரசு மிக தீவிரமான முயற்சிகளை செய்து வருகிறது.

 பிரபல சினிமா இயக்குனரின் செயலால் கடும் அதிர்ச்சி... வீடியோ வைரல் ஆனதால் நெட்டிசன்கள் கொந்தளிப்பு...

இப்படிப்பட்ட ஒரு சூழலில் சினிமா போன்ற சக்தி வாய்ந்த ஊடகங்களை சேர்ந்த நபர்கள், போக்குவரத்து விதிகளை கடைபிடித்து வாகன ஓட்டிகளுக்கு நல்லதொரு முன் உதாரணத்தை ஏற்படுத்த வேண்டும் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். நல்ல முன் உதாரணத்தை ஏற்படுத்தாவிட்டாலும் கூட பரவாயில்லை. குறைந்தபட்சம் இதுபோன்ற தவறான முன் உதாரணங்களையாவது ஏற்படுத்தாமல் இருக்கலாம் என்பதே நெட்டிசன்களின் கருத்தாக உள்ளது.

 பிரபல சினிமா இயக்குனரின் செயலால் கடும் அதிர்ச்சி... வீடியோ வைரல் ஆனதால் நெட்டிசன்கள் கொந்தளிப்பு...

இந்த சூழலில் ராம் கோபால் வர்மா வெளியிட்ட வீடியோவும், அவரது கருத்தும் போலீசாரை சென்றடைந்தது. உடனடியாக சைபராபாத் போக்குவரத்து போலீசார் இந்த சம்பவத்திற்காக 1,335 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். இந்த தகவலை தங்கள் டிவிட்டர் பக்கத்திலும் சைபராபாத் போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.

 பிரபல சினிமா இயக்குனரின் செயலால் கடும் அதிர்ச்சி... வீடியோ வைரல் ஆனதால் நெட்டிசன்கள் கொந்தளிப்பு...

திலீப் குமார் என்பவருக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் அவரது பெயரில்தான் சம்பந்தப்பட்ட வாகனம் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அந்த வாகனத்தின் தற்போதைய உரிமையாளர் யார்? என்பது சரியாக தெரியவில்லை. அதேபோல் போலீசார் விதித்துள்ள அபராதத்தை யார் செலுத்த போகிறார்கள்? என்பதும் தெரியவில்லை.

 பிரபல சினிமா இயக்குனரின் செயலால் கடும் அதிர்ச்சி... வீடியோ வைரல் ஆனதால் நெட்டிசன்கள் கொந்தளிப்பு...

பெரும்பாலும் வாகனங்களை ஓட்டியவர்களுக்கு பதிலாக வாகன உரிமையாளர்களுக்குதான் இ-சலான்கள் வழங்கப்படுகின்றன. எனவே நீங்கள் வாகனத்தை விற்பனை செய்தால், உடனடியாக பதிவு சான்றிதழில் பெயரை மாற்றி விடுவது நல்லது. நீங்கள் பெயரை மாற்றாவிட்டால், வேறு யாரேனும் உங்கள் வாகனத்தில் விதிமீறல்களில் ஈடுபட்டாலும் கூட, உங்கள் பெயருக்குதான் இ-சலான்கள் வந்து கொண்டிருக்கும். பெயரை அதிகாரப்பூர்வமாக மாற்றாததன் காரணமாக வாகனத்தின் முந்தைய உரிமையாளருக்கு இ-சலான்கள் தொடர்ச்சியாக வினியோகிக்கப்பட்ட சம்பவங்கள் கடந்த காலங்களில் நடைபெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Director Ram Gopal Varma Breaks Traffic Law : Video. Read in Tamil
Story first published: Monday, July 22, 2019, 17:47 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X