இத்தன கோடியா! ரொம்ப காஸ்ட்லியான காரை வாங்கிய பிரபல டைரக்டர்... செம சூப்பரான கார் ஆச்சே இது!

பிரபல இயக்குனர் ஒருவர் மிகவும் விலை உயர்ந்த காரை வாங்கியுள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இத்தன கோடியா! ரொம்ப காஸ்ட்லியான காரை வாங்கிய பிரபல டைரக்டர்... செம சூப்பரான கார் ஆச்சே இது!

பாலிவுட் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பர் ரோஹித் ஷெட்டி (Rohit Shetty). இயக்குனர் மட்டுமல்லாது தயாரிப்பாளர் என்ற முகமும் இவருக்கு உள்ளது. திரைப்படங்களை போலவே, விலை உயர்ந்த கார்கள் மீதும் காதல் கொண்டவராக ரோஹித் ஷெட்டி அறியப்படுகிறார். அவரிடம் உள்ள கார்களே இதற்கு உதாரணம்.

இத்தன கோடியா! ரொம்ப காஸ்ட்லியான காரை வாங்கிய பிரபல டைரக்டர்... செம சூப்பரான கார் ஆச்சே இது!

ரோஹித் ஷெட்டியிடம் லம்போர்கினி உருஸ் (Lamborghini Urus), ஃபோர்டு மஸ்டாங் (Ford Mustang), லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் வோக் (Land Rover Range Rover Vogue) மற்றும் மஸராட்டி க்ரான் டுரிஸ்மோ ஸ்போர்ட் (Maserati Gran Turismo Sport) உள்ளிட்ட விலை உயர்ந்த கார்கள் இருக்கின்றன. இந்த சூழலில் தற்போது மேலும் ஒரு விலை உயர்ந்த காரை ரோஹித் ஷெட்டி வாங்கியுள்ளார்.

இத்தன கோடியா! ரொம்ப காஸ்ட்லியான காரை வாங்கிய பிரபல டைரக்டர்... செம சூப்பரான கார் ஆச்சே இது!

அது மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜி63 (Mercedes-AMG G63) கார் ஆகும். இது எஸ்யூவி (SUV) ரகத்தை சேர்ந்தது. சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றுக்கு ரோஹித் ஷெட்டி தனது புதிய காரில் வந்திருந்தார். வெள்ளை நிறத்தில் இருந்த அந்த கார் அங்கிருந்த அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது. தற்போது இணையம் மூலமாக அந்த கார் பற்றிய தகவல்கள் அனைவரையும் சென்றடைந்து வருகிறது.

இத்தன கோடியா! ரொம்ப காஸ்ட்லியான காரை வாங்கிய பிரபல டைரக்டர்... செம சூப்பரான கார் ஆச்சே இது!

மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜி63 காரின் ஆன் ரோடு விலை சுமார் 3 கோடி ரூபாய் ஆகும். இது கஸ்டமைசேஷன் செய்யப்படாத நிலையில் இந்த காரின் விலையாகும். உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப கஸ்டமைசேஷன் செய்தால், இந்த காரின் விலை இன்னும் அதிகமாக வரும். இந்திய சந்தையில் ஜி-வேகனின் ஜி63 வெர்ஷன் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கிறது.

இத்தன கோடியா! ரொம்ப காஸ்ட்லியான காரை வாங்கிய பிரபல டைரக்டர்... செம சூப்பரான கார் ஆச்சே இது!

ஆனால் சர்வதேச சந்தைகளில் அதிக சக்தி வாய்ந்த ஜி65 (G65) வெர்ஷனும் கிடைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜி63 கார், முழு எல்இடி செட்-அப் உடன் புதிய ஹெட்லேம்ப் க்ளஸ்ட்டரை பெற்றுள்ளது. அத்துடன் இந்த காரில் வட்ட வடிவ பகல் நேர விளக்குகளும் வழங்கப்பட்டுள்ளன.

இத்தன கோடியா! ரொம்ப காஸ்ட்லியான காரை வாங்கிய பிரபல டைரக்டர்... செம சூப்பரான கார் ஆச்சே இது!

அதே சமயம் இந்த காரின் பானெட்டில் டர்ன் இன்டிகேட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதே நேரத்தில் இந்த காரின் டெயில்கேட்டில் ஸ்பேர் வீல் பொருத்தப்பட்டுள்ளது. 21 இன்ச் 7 ஸ்போக் அலாய் வீல்களில் மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜி63 கார் இயங்குகிறது. இந்த காரின் க்ரவுண்ட் க்ளியரன்ஸ் 241 மிமீ ஆகும். இது மிகவும் சிறப்பான க்ரவுண்ட் க்ளியரன்ஸ் என்பதில் சந்தேகமில்லை.

இத்தன கோடியா! ரொம்ப காஸ்ட்லியான காரை வாங்கிய பிரபல டைரக்டர்... செம சூப்பரான கார் ஆச்சே இது!

இந்த காரில் ஆஃப்-ரோடு பயணங்களையும் மேற்கொள்ளலாம். அதற்கு தேவையான தனித்துவமான திறன்களை இந்த கார் பெற்றுள்ளது. ஆனால் பெரும்பாலான உரிமையாளர்கள் இந்த காரை ஆஃப்-ரோடு பயணங்களுக்கு எடுத்து செல்வதில்லை. சரி, இனி மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜி63 காரின் செயல்திறனுக்கு வருவோம்.

இத்தன கோடியா! ரொம்ப காஸ்ட்லியான காரை வாங்கிய பிரபல டைரக்டர்... செம சூப்பரான கார் ஆச்சே இது!

இந்த காரில் 4.0 லிட்டர் பை-டர்போ வி8 பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 585 பிஹெச்பி பவரையும், 850 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த காரின் முந்தைய தலைமுறை மாடலில் இதை காட்டிலும் பெரிய இன்ஜின் வழங்கப்பட்டு வந்தது. அது 5.5 லிட்டர் வி8 இன்ஜின் ஆகும்.

இத்தன கோடியா! ரொம்ப காஸ்ட்லியான காரை வாங்கிய பிரபல டைரக்டர்... செம சூப்பரான கார் ஆச்சே இது!

ஆனால் தற்போதைய தலைமுறை மாடலில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இன்ஜின் ஆப்ஷனை மாற்றி விட்டது. பொதுவாக பாலிவுட் மட்டுமல்லாது, அனைத்து மொழிகளை சேர்ந்த நடிகர், நடிகைகள் மற்றும் இயக்குனர்களும் விலை உயர்ந்த கார்களை மிகவும் விரும்பி வாங்க கூடியவர்களாக உள்ளனர். அதற்கு ரோஹித் ஷெட்டியும் விதிவிலக்கு அல்ல என்பது அவர் சொந்தமாக வைத்துள்ள கார்கள் மூலமாக நமக்கு மிகவும் தெளிவாக புலனாகிறது.

இத்தன கோடியா! ரொம்ப காஸ்ட்லியான காரை வாங்கிய பிரபல டைரக்டர்... செம சூப்பரான கார் ஆச்சே இது!

ரோஹித் ஷெட்டியை பற்றி நன்கு தெரிந்தவர்களுக்கு ஒரு விஷயம் மிகவும் தெளிவாக தெரியும். அவரது படங்களில் கார் ஸ்டண்ட் காட்சிகளை அதிகமாக பார்க்க முடியும். கார்கள் மீது அவர் கொண்டுள்ள காதலின் தாக்கமாகவே அந்த காட்சிகள் கருதப்படுகின்றன. தற்போது ரோஹித் ஷெட்டியின் புதிய காரின் புகைப்படங்களை அவரது ரசிகர்கள் சமூக வலை தளங்களில் ஆர்வமுடன் பகிர்ந்து வருகின்றனர். வரும் காலங்களில் அவர் இன்னும் நிறைய கார்களை வாங்குவதற்கு வாழ்த்துக்கள்.

More from DriveSpark

Article Published On: Thursday, September 8, 2022, 16:49 [IST]
English summary
Director rohit shetty buys mercedes amg g63 suv
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+