காஸ்ட்லியான பைக்கை வாங்கிய இயக்குனர் வெற்றிமாறன்... விலை எவ்ளோனு தெரிஞ்சா மயக்கமே போட்றுவீங்க!
இயக்குனர் வெற்றிமாறன் விலை உயர்ந்த பைக் ஒன்றை வாங்கியுள்ளார். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

திரையுலகை சேர்ந்த நடிகர், நடிகைகள் மற்றும் இயக்குனர்கள் பலர் விலை உயர்ந்த பைக்குகளை வாங்குவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இதில் தமிழ் திரையுலகை சேர்ந்தவர்களும் அடக்கம். தமிழ் திரையுலகை பொறுத்தவரை, அஜீத் மற்றும் விஜய் சேதுபதி போன்றவர்களிடம் பிஎம்டபிள்யூ பைக்குகள் இருக்கின்றன.

இந்த வரிசையில் இயக்குனர் வெற்றிமாறனும் தற்போது மிகவும் விலை உயர்ந்த பிஎம்டபிள்யூ பைக் ஒன்றை வாங்கியுள்ளார். பொல்லாதவன், ஆடுகளம், அசுரன் என பல்வேறு வெற்றி படங்களை இயக்கிய வெற்றிமாறனுக்கு பைக்குகள் என்றால் மிகவும் பிடிக்கும். அவர் இயக்கி பிரம்மாண்ட வெற்றியை சந்தித்த பொல்லாதவன் திரைப்படம் இதற்கு ஒரு சாட்சி.

பொதுவாக திரையுலகினர் வெளி நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது விலை உயர்ந்த கார்களில்தான் செல்வார்கள். ஆனால் இயக்குனர் வெற்றிமாறன் பைக்கில் கூட வந்துள்ளார். அவர் தற்போது வாங்கியிருப்பது பிஎம்டபிள்யூ ஆர் நைன்டீ ஸ்க்ராம்ப்ளர் (BMW R NineT Scrambler) பைக் ஆகும். சென்னையில் உள்ள ஷோரூமில் இயக்குனர் வெற்றிமாறன் இந்த பைக்கை டெலிவரி எடுத்துள்ளார்.

பிஎம்டபிள்யூ ஆர் நைன்டீ ஸ்க்ராம்ப்ளர் பைக்கில், ஏர் மற்றும் ஆயில் கூல்டு 1170 சிசி பாக்ஸர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 7,250 ஆர்பிஎம்மில் 108.77 பிஎஸ் பவரையும், 6,000 ஆர்பிஎம்மில் 116 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜினுடன் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த பைக்கின் முன் பகுதியில் 320 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின் பகுதியில் 265 மிமீ டிஸ்க் பிரேக்கும் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் ட்யூயல் சேனல் ஏபிஎஸ் வசதியையும் இந்த பைக் பெற்றுள்ளது. இந்த பைக்கின் நீளம் 2,175 மிமீ ஆகும். அகலம் 865 மிமீ ஆகவும், உயரம் 1,330 மிமீ ஆகவும் உள்ளது. அதே சமயம் இந்த பைக்கின் வீல்பேஸ் நீளம் 1,527 மிமீ ஆகும். இருக்கை உயரம் 820 மிமீ.

பிஎம்டபிள்யூ ஆர் நைன்டீ ஸ்க்ராம்ப்ளர் பைக் 17 லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிபொருள் டேங்க்கை பெற்றுள்ளது. பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனத்தின் பைக்குகள் மிகவும் விலை உயர்ந்தவை. பிஎம்டபிள்யூ ஆர் நைன்டீ ஸ்க்ராம்ப்ளர் பைக்கும் இதற்கு விதிவிலக்கு அல்ல. இந்த பைக்கின் எக்ஸ் ஷோரூம் விலையே 16.75 லட்ச ரூபாய் ஆகும். ஆன் ரோடு விலை தோராயமாக 19-20 லட்ச ரூபாய் என்ற அளவில் வரும்.

வெற்றிமாறன் பைக்குகளை விரும்ப கூடியவர் என்பதால், இவ்வளவு அதிக விலை கொடுத்து இந்த பைக்கை வாங்கியுள்ளார். மாடர்ன்-கிளாசிக் பைக்காக பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனம் இந்த ஆர் நைன்டீ ஸ்க்ராம்ப்ளர் பைக்கை உருவாக்கியுள்ளது. சௌகரியமான ரைடிங் பொஷிஷனும், அதிநவீன வசதிகளும் இந்த பைக்கின் முக்கியமான சிறப்பம்சங்கள்.

விலை அதிகம் என்றாலும், கொடுக்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பு என பிஎம்டபிள்யூ ஆர் நைன்டீ ஸ்க்ராம்ப்ளர் பைக்கை குறிப்பிடலாம். பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு இணக்கமான ஆர் நைன்டீ ஸ்க்ராம்ப்ளர் பைக்கை பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனம் கடந்த 2021ம் ஆண்டு தொடக்கத்தில்தான் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.

பிஎம்டபிள்யூ ஆர் நைன்டீ ஸ்க்ராம்ப்ளர் பைக் முழுவதுமாக கட்டமைக்கப்பட்ட நிலையில் இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதனை சிபியூ (CBU) என்கின்றனர். கம்ப்லீட்லி பில்ட் யூனிட் (Completely Built Unit) என்பதன் சுருக்கம்தான் சிபியூ. இந்த பைக்கின் விலை மிகவும் அதிகமாக இருப்பதற்கு இது மிக முக்கியமான காரணங்களில் ஒன்று.

பொதுவாக முழுமையாக இறக்குமதி செய்யப்பட்டு இந்தியாவில் விற்பனை செய்யப்படும் கார், பைக் போன்ற வாகனங்களின் விலை மிகவும் அதிகமாகதான் இருக்கும். இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டால், குறைவான விலையிலேயே நமக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பொல்லாதவன் படத்தில் தனுஷ் பஜாஜ் பல்சர் பைக்கை பயன்படுத்திய பின்பு, அது இளைஞர்களின் மனதில் தனி இடத்தை பிடித்தது.

விலையும் ஓரளவிற்கு குறைவு என்பதால், பஜாஜ் பல்சர் பைக்குகளை வாங்குவதற்கு பலரும் ஆர்வம் காட்டினர். ஆனால் தற்போது வெற்றிமாறன் வாங்கியுள்ள பிஎம்டபிள்யூ ஆர் நைன்டீ பைக் மிகவும் விலை உயர்ந்தது என்பதால், அனைவராலும் இதனை வாங்க முடியாது. இந்த புத்தம் புதிய பைக்கில் இயக்குனர் வெற்றிமாறன் விரைவில் சாலைகளில் வலம் வருவார் என நாம் எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








